under review

அம்ரிதா ப்ரீத்தம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அம்ரிதா ப்ரீத்தம் == வாழ்க்கைக் குறிப்பு == 20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்தி...")
 
(Changed incorrect text: ​)
 
(47 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
அம்ரிதா ப்ரீத்தம்
[[File:அம்ரிதா ப்ரீத்தம்.png|thumb|அம்ரிதா ப்ரீத்தம்]]
[[File:அம்ரிதா ப்ரீத்தம்1.png|thumb|அம்ரிதா ப்ரீத்தம்]]
அம்ரிதா ப்ரீத்தம் (ஆகஸ்ட் 31, 1919 - அக்டோபர் 31, 2005) பஞ்சாபி, இந்தியில் எழுதிய எழுத்தாளர், கவிஞர், இதழியலாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர். 'பிஞ்சர்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். 'காகஸ் தே கன்வாஸ்' நூலுக்காக ஞானபீட விருது பெற்றார். இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளிலும் பஞ்சாபி பேசும் மக்களால்  நன்கு அறியப்பட்டவர். இவரின் காதல் கவிதைகள் பிரபலமானவை. இவரது கவிதைகள் பஞ்சாபின் சூஃபி கவிஞர்களின், துறவிகளின் நிழல் படிந்தவையாகவும், மார்க்சியம், சமத்துவம் மற்றும் பெண்ணியவாதக் கருத்துக்களைக் கொண்டவையாகவும் அமைந்தன.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா கௌர் எனப் பிறந்தவர். அப்பா பள்ளிஆசிரியராகவும், சீக்கிய மதப்பிரச்சாரகராகவும் வாழ்க்கை நடத்தினார். கொஞ்சம் கவிதையும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் அப்பாவை விட்டுவிட்டு மகளைப் பிடித்துக்கொண்டுவிட்டாளோ கவிதாதேவி? தன் 11-ஆவது வயதில் அம்மாவை இழந்தார் அம்ரிதா. அப்பா தன் மகளைக் கூட்டிக்கொண்டு லாகூருக்கு இடம் மாறினார். சிறுவயதிலிருந்தே வீட்டுவேலையே அம்ரிதாவுக்கு சரியாக இருந்தது. தோழியரில்லை; போக்கிடம் தெரியவில்லை. தனிமையின் நிழல் எப்போதும் அவர்மீது படிந்திருந்தது. ஏகாந்தச் சிந்தனைகள் அவரிடம் எழுத்துவடிவம் பெற்றன. கவிதை புனைய ஆரம்பித்தார் அம்ரிதா. 16-ஆவது வயதில் அவரது முதல் கவிதைத்தொகுப்பு ‘அமிர்த அலைகள்’ வெளியானது. தன் 17-ஆவது வயதிலே, ப்ரீத்தம் சிங் என்பவரை திருமணம் செய்ய நேரிட்டது. அம்ரிதா ப்ரீத்தம் என்கிற பெயரில் எழுதுவதைத் தொடர்ந்தார். முதல் ஏழெட்டு வருடங்களுக்குள் சில கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.
அம்ரிதா ப்ரீத்தம் பிரித்தானிய இந்தியாவில் பஞ்சாபில் உள்ள குஞ்ஜ்ரன்வாலாவில் ராஜ் பீபி, கர்தார் சிங் ஹித்காரி இணையருக்கு ஆகஸ்ட் 31, 1919-ல் பிறந்தார். அப்பா பள்ளி ஆசிரியராகவும், சீக்கிய மதப்பிரச்சாரகராகவும் இருந்தார். கவிதைகள் எழுதினார். தாயார்  அம்ரிதாவின் பதினொராம்  வயதில் இறந்தார்.  
இரண்டு குழந்தைகள் தந்த மணவாழ்வு இனிக்கவில்லை அம்ரிதாவுக்கு.

அவருடைய இளம் பருவம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை என்கிற கொடூர சரித்திரத்தை நேரிடையாக எதிர்கொண்டது. அது அவரது வாழ்வில் பெரும் மனஅழற்சியை உண்டுபண்ணிவிட்டது எனத் தெரிகிறது. ஆகஸ்டு 14-ல் பிறந்தது பாகிஸ்தான். அந்தநாள் அங்கு இதுகாறும் வாழ்ந்துவந்த இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் கொடும்நாளாய் மாறிவிட்டது. அமைதியான வாழ்வு நொடியில் துவம்சமானது. ஹிந்து, சீக்கியக் குடும்பங்களின் சொத்துபத்துக்கள் இரவோடு இரவாகப் பிடுங்கப்பட்டு அவர்கள் ஹிந்துஸ்தானுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். அனைத்தையும் ஒரேயடியாக விட்டுவிட்டு அம்போ என்று, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்று ஹிந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாய் ஹிந்துஸ்தானை நோக்கி ஓடிவந்தனர்.. பிரிவினையின் தவிர்க்கமுடியாத விளைவான இனக்கலவரம் வெடித்தது. சாமானியமக்களின் வாழ்வை சிலதினங்களிலேயே பலிகொண்டது. பெண்கள் சீரழிக்கப்பட்டனர். கால்நடையாகவும், மாட்டுவண்டிகளிலும் ஹிந்துஸ்தான் நோக்கி ஓடிவந்தவர்களில் பலர் வருகிற வழியிலேயே அதிர்ச்சியாலும், நோய்வாய்ப்பட்டும் இறந்துபோயினர்; கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர். தன் உயிருக்கு உயிரான பஞ்சாப் பிரதேசம், தன் கண்முன்னாலேயே பிளக்கப்பட்டு சிதைவதைக் கண்டு துடித்தார் அம்ரிதா. லாகூரிலிருந்து இந்திய பஞ்சாபிற்கு விரட்டப்பட்ட அம்ரிதா நல்லவேளை, தாக்கப்படாமல் தந்தையுடன் பாதுகாப்பாக இந்தியா வந்துசேர்ந்துவிட்டார்.
அம்ரிதா அதன்பின் தந்தையுடன் லாகூருக்குக் குடிபெயர்ந்தார். 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது லாகூரிலிருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்.
[[File:அம்ரிதா இம்ரோஜ்.png|thumb|அம்ரிதா இம்ரோஜ்]]

== தனிவாழ்க்கை ==
அம்ரிதாவுக்கு பதினாறு வயதில் (1935)  சிறுவயதிலேயே  மண உறுதிசெய்யப்பட்ட  ப்ரீத்தம் சிங்குடன் திருமணமானது.  லாகூர் அனார்கலி பஜாரில் ஆடை வியாபாரியின் மகனான ப்ரீதம் சிங் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர்களுக்கு இரு குழந்தைகள். மகள் கண்ட்லா, மகன் நவ்ராஜ் குவாத்ரா. 
அம்ரிதா ப்ரீத்தம் இந்தியப் பிரிவினைக்கு முன் லாகூரில் உள்ள வானொலி நிலையத்திலும் சிறிது காலம் பணியாற்றினார். 1961-ம் ஆண்டு வரை டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் பஞ்சாபி சேவையில் பணியாற்றினார். 1960-ல் ப்ரீத்தமிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
அம்ரிதா கவிஞர் சாஹிர் லூதியானவி மீது காதல் கொண்டார். இந்தக் காதல் கதை அவரது சுயசரிதையான 'ரசிதி டிக்கெட்' (Rasidi Ticket)  நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சாஹிர் லூதியானவிக்காக அவர் எழுதிய சிறுகடித வடிவிலான கவிதைகளின் தொகுப்பு ‘சுனேஹ்ரே’ (Sunehre –messages) சாஹித்ய அகாதமி விருது பெற்றது. பெண் பாடகி சுதா மல்ஹோத்ரா சாஹிரின் வாழ்க்கையில் வந்தபின்  அம்ருதாவுடனான அவரது உறவு முறிந்தது.

கொடூரக் கதையாகிவிட்ட பஞ்சாப் பிரிவினையின் தாங்கவொண்ணா அவலத்தைக் குறிப்பிடுகிறது ‘ வாரிஸ் ஷா! நான் உனை அழைக்கிறேன் !’ எனும் அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. அம்ரிதாவின் இலக்கிய வருகைக்கு முன்பே, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபின் சிறந்த கவியாகப் புகழ்பெற்றிருந்தவர் வாரிஸ் ஷா. ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தை பஞ்சாபி இலக்கியத்துக்கு வழங்கிய மகாகவி. அம்ரிதா அவரை தன் ஆதர்ஷ கவியாக மனதில் கொண்டிருந்தார். இளம் வயதில் விதவையாகிப்போன, சிதைக்கப்பட்ட பஞ்சாபிப்பெண்களின் துக்கத்தைத் தாளமாட்டாது வாரிஸ் ஷாவை அழைத்து முறையிடுவதாக அமைந்திருக்கிறது அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற அந்தக் கவிதை.  
அதன்பின் அம்ரிதா கலைஞரும் எழுத்தாளருமான இந்தர்ஜித் இம்ரோஸ் என்பவருடன் காதலில் இருந்தார். தனது வாழ்க்கையின் கடைசி நாற்பது ஆண்டுகளை இம்ரோஸுடன் கழித்தார். இம்ரோஸ் அம்ரிதாவின் பெரும்பாலான புத்தக அட்டைகளை வடிவமைத்தார். தனது  பல ஓவியங்களுக்கு அம்ரிதாவைப் பொருளாக்கினார். அவர்களது வாழ்க்கை 'அம்ரிதா இம்ரோஸ்: ஒரு காதல் கதை' (Amrita-Imroz: In the times of Love and Longing) என்ற புத்தகத்தில் பேசப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தன் கணவரிடமிருந்து அம்ரிதா பிரிந்துவந்துவிட்டார் எனினும், இம்ரோஸ்-அம்ரிதா இடையேயான நட்பும் நெருக்கமும் அவர்களைத் திருமணம் வரை கொண்டுசெல்லவில்லை. இம்ரோஸ் தாங்களிருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில், நண்பர்களாய் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.
== தனிவாழ்க்கை ==
இந்தியா திரும்பிவிட்ட அம்ரிதாவின் மணவாழ்க்கை நாளுக்குநாள் அர்த்தமின்றி ஓடிக்கொண்டிருந்தது. சோககீதமே தன்னுடைய வாழ்வின் அடிநாதமாக ஆகிவிட்டிருந்ததை சின்னவயதிலிருந்தே உணர்ந்திருந்தார் அம்ரிதா. நெடும்வாழ்வில் தொடர்ந்த காதல் அம்ரிதாவைக் கொஞ்சம் ஸ்பெஷலாகவே கவனித்து அவரை சோக இளவரசியாய் மாறிவிட்டிருந்தது.

இளம் கவியான சாஹிர் லூதியான்வி (லூதியானா, பஞ்சாபின் ஒரு சிறுநகரம்.அங்கே பிறந்தவராதலால் சாஹிர் லூதியான்வி- நம்ம பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல) புகழின் வாசலுக்கு வந்திருந்த சமயம். அம்ரிதா சாஹிரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அம்ரிதாவின் கவிதைத் தொகுப்புகள் சிலவும் ஏற்கனவே வெளிவந்திருந்தன. 1944-ல் பஞ்சாபின் கிராமம் ஒன்றில் ஒரு மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முஷாய்ராவில் (Mushaira-கவியரங்கு) இருவரும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டனர். சாஹிர் லூதியான்வி தீவிரமும், லட்சியநோக்கும் கொண்ட இளம் கவி. வார்த்தைவீச்சு, கருத்தாழமிக்க தன் கவிதைகளுக்காக அறியப்பட்டிருந்த இளம்பெண் அம்ரிதா. கண்டதும் காதலோ? அப்படித்தான் தோன்றுகிறது. இரவின் நிழலில், மெல்லொளியில் அவர்கள் கண்கள் அடிக்கடி சந்தித்து மீண்டன. ஆயினும் அந்த சந்திப்பில் வார்த்தைப் பரிமாற்றம் என்பதாகப் பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. சாஹிர் பொதுவாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்குபவர். இந்த விஷயத்தில் பஞ்சாபிகளுக்கு நேரெதிரான குணம் கொண்டவர்!
== ஆன்மிகம் ==
அம்ரிதா ப்ரீத்தம்  தன் வாழ்வின் கடைசி வருடங்களில் ஷிர்டி பாபாவின் பக்தராக இருந்ததார். ஒரு அதிகாலையில் அகர்பத்தி புகையை பாபாவுக்குக் காட்டி கண்முடி தியானித்திருக்கையில் தான் தானாக இல்லாமல், அந்த வாசனைப்புகையாகவே மாறி பரவியிருந்ததாக உணர்ந்தார்.  

அந்த நாசூக்கான மாலைச்சந்திப்புக்குப்பின் இருவரிடையே கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்தது. லாகூரில் லூதியான்வியும் டெல்லியில் அம்ரிதாவும் இருந்த காலமது. தன் கடிதங்களில் அம்ரிதா ப்ரீத்தம், சாஹிர் லூதியான்விமீது தான் கொண்டிருக்கும் காதலைத் தெளிவாக்குகிறார். ’என் கவியே!’ என்கிறார். ’தேவதையே!’ என்கிறார். வரிக்குவரி ‘காதலனே, கடவுளே…’ என்றெல்லாம் உருகுகிறார் அம்ரிதா. கனல்பறக்கும் காதலில் தன்னைக் கரைத்துக் காணாமற்போகிறார் அவர். எவ்வளவுக்கெவ்வளவு அம்ரிதா தன்னை வார்த்தைகளாக வெளிப்படுத்திக்கொண்டாரோ, அவ்வளவுக்கவ்வளவு சாஹிர் லூதியான்வியிடமிருந்து வெளிப்பட்டது ஆழ்ந்த அமைதி! வார்த்தைகளுக்கு வேலை இல்லை என நினைத்தாரோ? Platonic love ?
அம்ரிதா சீக்கிய நம்பிக்கையின் போதகராக (பிரசாரக்)  இருந்தார். பிற்கால வாழ்க்கையில் அவர் ஓஷோவின் பக்கம் திரும்பினார். 'ஏக் ஓங்கர் சத்னம்' உட்பட ஓஷோவின் பல புத்தகங்களுக்கு அறிமுகங்களை எழுதினார். ஆன்மீக கருப்பொருள்கள் மற்றும் கனவுகள் குறித்து எழுதத் தொடங்கினார்.

இருவரும் அவ்வப்போது காதல்கடிதங்களை எழுதிக்கொண்டார்கள். தன் குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்தார் அம்ரிதா. அங்கே ஒரு அறிவுஜீவியாக, கவிஞராகப் புகழடைந்துகொண்டிருந்தார். சாஹிர் லூதியான்வி பம்பாய் வந்து திரைப்படங்களில் பாடல்கள் எழுத ஆரம்பித்த காலகட்டம். சாஹிருக்காகத் தன் கணவரைத் துறக்கத் தயாராக இருந்தார் அம்ரிதா. ஆனால் சாஹிரிடமிருந்து உறுதியாக எந்த ஒரு பதிலும் இல்லை. இருவரும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் வந்தன. அப்போதும் இருவரது கண்களும் மட்டுமே மும்முரமாய் இருந்தன. உதடுகளுக்கு வேலை இருந்திருக்கவில்லை! மொழி என்பது அவர்களிடையே தலைகாட்டவில்லை. இருவரும் மௌனமே சாட்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க, சாஹிர் புகைத்துத் தள்ளுவாராம். பின்னர் ஒன்றுமே நடக்காததுபோல் எழுந்துபோய்விடுவாராம். அவர் போனபின் அவர் புகைத்துபோட்ட சிகரெட் துண்டுகளை எடுத்துத் தன் உதட்டில் பொருத்தி புகைப்பாராம் அம்ரிதா! அப்படி ஒரு கண்மண் தெரியாக் காதல் அம்ரிதாவுக்கு. இதனைப்பற்றி அவரே தன் சுயசரிதமான ‘ரசீதி டிக்கெட்’’(Rasidi Ticket-ரெவின்யூ ஸ்டாம்ப்)-இல் எழுதியுள்ளார். அவருடைய வாழ்வின் அவஸ்தைகள், நிறைவேறாக்காதலின் சோகம் ததும்பும் படைப்பு இது.
== சமூகப்பணி ==
அம்ரிதா ப்ரீத்தம் சுதந்திரத்திற்குப் பிறகு சமூக ஆர்வலர் குரு ராதா கிஷன் டெல்லியில் முதல் ஜனதா நூலகம் (பொது நூலகம்) கொண்டு வர முன்முயற்சி எடுத்தபோது அதில் பங்கேற்றார். இதை பால்ராஜ் சஹானி மற்றும் அருணா ஆசஃப் அலி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த ஆய்வு மையமும் நூலகமும் இன்னும் டெல்லி மணிக்கூண்டு கோபுரத்தில் இயங்கி வருகின்றன.

சாஹிர் உள்ளூர அம்ரிதாவின் மீது ப்ரேமையாகியிருந்திருக்கிறார். ஏனோ அதனை அடுத்தகட்டத்துக்கு அவர் நகர்த்தவில்லை. அல்லது அவரால் முடியவில்லை. ஒருமுறை அம்ரிதா தன் வீட்டுக்கு வந்தசென்றபின், தன் தாயிடம் (கணவரிடமிருந்து பிரிந்த தாய்தான் சாஹிரை வளர்த்து ஆளாக்கியவர்), சாஹிர் லூதியான்வி சொன்னாராம்: ‘அம்மா! அதுதான் அம்ரிதா ப்ரீத்தம்! உன் மருமகளாக வரக்கூடியவள்!’ அம்ரிதாவுக்கு மிகவும் அருகில் வந்த சாஹிர் லூதியான்வியின் நிலை இதுதான்! அம்ரிதா, தான் முதன்முதலாக சாஹிரை சந்தித்ததைக் கருவாகக்கொண்டு ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். அதனைப் படித்தபின்பாவது ஏதாவது சொல்வாரா சாஹிர் லூதியான்வி என்று எதிர்பார்த்திருக்கிறார் அம்ரிதா. ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு எதிர்வினையும் இல்லை. அதிலும் ஏமாற்றம்தான் அம்ரிதாவுக்கு. சாஹிர் லூதியான்விக்கு என அவர் நினைத்து எழுதிய சிறுகடித வடிவிலான கவிதைகளின் தொகுப்பு ‘சுனேஹ்ரே’(Sunehre –messages) சாஹித்ய அகாதமியின் விருது பெற்றது. யாருக்காக எழுதினேனோ அவர் பார்த்ததாகத் தெரியவில்லை, உலகம் பார்த்திருக்கிறது – என்று மனம் கனத்ததாம் அம்ரிதாவுக்கு.
== இதழியல் ==
அது நிகழுகிறவிதமாக நிகழட்டும்; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே காதல் இருந்துவிட்டுப்போகட்டும், அதன் சக்தியை, அதன் போக்கை உள்வாங்கிக்கொள்ளலாம்; வேறென்ன நாம் செய்துவிடமுடியும் என்கிற முடிவுக்கு அம்ரிதா வந்திருக்கக்கூடும். அவருடைய கவிதைகளில் இந்த நிதர்சனம், தொடரும் ஏக்கம் ஆகியவை வெளிப்படுகின்றன. பிற்காலத்தில் தன்னைவிட இளையவரான பஞ்சாபி ஓவியரும், கவிஞருமான இம்ரோஸ்(Imroz) மீது அம்ரிதாவுக்கு ஒரு இனந்தெரியாப் பிடிப்பு ஏற்பட்டது. ஒரு ஆன்மநெருக்கம் என்று அதனைக் குறிப்பிடலாமோ? அது கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் அம்ரிதாவை அம்ரோஸின் அருகாமையில் வைத்திருந்தது. அந்த சமயத்தில் தன் கணவரிடமிருந்து அம்ரிதா பிரிந்துவந்துவிட்டார் எனினும், அம்ரோஸ்-அம்ரிதா இடையேயான நட்பு, நெருக்கம் அவர்களை திருமணம் என்கிற பந்தம்வரை கொண்டுசெல்லவில்லை. இம்ரோஸ் தாங்களிருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில், நண்பர்களாய் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சமூகம் என்ன நினைக்கும் என்கிற கவலை இருவருக்கும் இருந்ததில்லை. தெற்குடெல்லியின் ஹோஸ்-காஸ் எனும் இடத்தில் இருக்கும் ஓவியர் இம்ரோஸின் வீட்டில், முகப்பறை, வாசிப்பு அறை என எங்கு பார்த்தாலும் அம்ரிதாவின் படங்கள்தான். ‘என் வீட்டில் அம்ரிதா இல்லாத இடமில்லை!’ என்று இன்றும் மகிழ்ச்சியோடு கூறுகிறார் இம்ரோஸ். இருவரிடையேயான ஏக்கம், மனநெருக்கம் இவற்றை வெளிப்படுத்தும் ‘இம்ரோஸ்-அம்ரிதா கடிதங்கள்’ புத்தகவடிவில், முதலில் பஞ்சாபி ஒரிஜினலாகவும், பிற்பாடு ஹிந்தி பதிப்பாகவும் வெளியாகியது. ‘Amrita-Imroz : In the times of Love and Longing’ என்கிற ஆங்கிலப் பதிப்பாகவும் இது வெளியாகியுள்ளது.
அம்ரிதா பஞ்சாபியில் 'நாகமணி' (Nagmani) என்ற மாத இலக்கியப் பத்திரிகையை இம்ரோஸுடன் சேர்ந்து 33 ஆண்டுகள் நடத்தினார். கவிதைகளுக்கான மாத இதழான(Poetry monthly) ஒன்றையும் நடத்தினார்.[[File:அம்ரிதா ப்ரீத்தம்2.png|thumb|அம்ரிதா ப்ரீத்தம்]]

சிலகாலம் உடல்நலம் இல்லாதிருந்த அம்ரிதா ப்ரீத்தம், 2005 அக்டோபரில் டெல்லியில் காலமானார். தன் கடைசி வருடங்களில் ஷிர்டி பாபாவின் பக்தராக அவர் இருந்ததாகத் தெரிகிறது. ஒரு அதிகாலையில் பாபாவின் உருவப்படத்துக்கு முன்பு அகர்பத்தி ஏற்றிக் காண்பிக்கையில் தனக்கு அந்த அனுபவம் உண்டானதாகக் குறிக்கிறார் அம்ரிதா. அகர்பத்தி புகையை பாபாவுக்குக்காட்டி கண்முடி தியானித்திருக்கையில் தான் தானாக இல்லாமல், அந்த வாசனைப்புகையாகவே மாறி பரவியிருந்ததாக உணர்ந்திருக்கிறார் அவர். சீக்கியர்கள் ஹிந்துக்களைப்போலவே மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள். தன் இறுதிக்காலம் நெருங்குகிறது என்பதை உணர்ந்த அம்ரிதா, இம்ரோஸை இனி எங்கு, எப்போது காண்போம் என ஏங்கியிருக்கவேண்டும். இம்ரோஸ்பற்றிய சிந்தனையில் அவர் இப்படி எழுதுகிறார்:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
தேசப்பிரிவினை பெண்களுக்கு இழைத்த கொடூரம்பற்றிய தாக்கத்தில் பஞ்சாபி மொழியில் அம்ரிதா 1950-ல் எழுதிய நாவல் ‘பிஞ்சர்’ (எலும்புக்கூடு). இந்தியப் பிரிவினைபற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பாக இது கருதப்படுகிறது. பிஞ்சர் என்ற பெயரிலேயே ஒரு ஹிந்தி படமாகவும் பின்னர் இது வெளிவந்தது.
அம்ரிதா ப்ரீத்தம் பஞ்சாபி, இந்தி மொழிகளில் எழுதினார். அவரது பதினாறாவது வயதில் முதல் கவிதைத் தொகுப்பான 'அம்ரித் லெஹ்ரேன்' (அமிர்த அலைகள்) வெளிவந்தது. 1936-1946 காலகட்டத்தில்  ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. அவர் ஒரு காதல் கவிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கினாலும், விரைவில் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆனார். 1943-ல் வங்காளப் பஞ்சத்திற்குப் பிறகு போரினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை  வெளிப்படையாக விமர்சித்த லோக் பீட் (மக்கள் வேதனை, 1944) தொகுப்பில் அதன் தாக்கம் காணப்பட்டது.
 
1947-ல் டேராடூனிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்தபோது, 'அஜ் ஆகான் வாரிஸ் ஷா னு' (நான் இன்று வாரிஸ் ஷாவிடம் கேட்கிறேன்) என முடியும்படியான கவிதையை எழுதினார். இக்கவிதை சூஃபி கவிஞரான வாரிஸ் ஷாவை நோக்கி எழுதப்பட்டது. இது பிரபலமடைந்தது. விவாகரத்துக்குப் பின் அவரது பணி மேலும் பெண்ணியத்தை நோக்கிச் சென்றது. அம்ரிதா ப்ரீத்தமின் பல படைப்புகள்  மகிழ்ச்சியற்ற  திருமண வாழ்வைப் பற்றிப் பேசின. 
 
தேசப்பிரிவினை பெண்களுக்கு இழைத்த கொடூரம்பற்றிய தாக்கத்தில் பஞ்சாபி மொழியில் அம்ரிதா 1950-ல் எழுதிய நாவல் ‘பிஞ்சர்’ (எலும்புக்கூடு). இந்தியப் பிரிவினைபற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்பட்டது. 'பிஞ்சர்' என்ற பெயரிலேயே ஒரு ஹிந்தி படமாகவும் பின்னர் இது வெளிவந்தது. பிரிவினைக்குப் பிறகு அவர் இந்தியிலும் ஏராளமாக எழுதினார். 'கால் சேத்னா'(நேர உணர்வு) மற்றும் 'அகயாத் கா நிமந்திரன்' (தெரியாத அழைப்பு). 'காலா குலாப்' (கறுப்பு ரோஜா, 1968), 'ரசிதி டிக்கெட்'(1976) மற்றும் 'அக்ஷரோன் கே சாயே'(சொற்களின் நிழல்கள்) என்ற தலைப்பில் சுயசரிதைகளையும் வெளியிட்டார். அவரது பல படைப்புகள் ஆங்கிலம், பிரஞ்சு, டேனிஷ், ஜப்பானிய, மாண்டரின் மற்றும் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளில் இருந்து அவரது சுயசரிதை படைப்புகள் 'காலா குலாப் (Black rose)மற்றும் ரசிதி டிக்கெட் (Revenue stamp) உட்பட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
== இலக்கிய இடம் ==
அம்ரிதாவின் 'சுனேஹடே' என்ற நீண்ட கவிதைக்காக அவருக்கு 1956-ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. பஞ்சாபியில் ஒரு படைப்புக்காக விருது வழங்கப்பட்ட முதல் மற்றும் ஒரே பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
 
“நிறைந்த புகழும் தன் வாழ்நாளிலேயே வெற்றியும் அடைந்தவர். இன்றைய பஞ்சாபி இலக்கியம் பற்றி நினைத்த மாத்திரத்திலேயே முதலில் முன்னிற்பது அவரது பெயராகத்தான் இருக்கும். அந்த பெயர் நமது பிரக்ஞையில் கொண்டு சேர்க்கும் நினைவுகள், பஞ்சாபின் இலக்கிய சரித்திரத்தையும், அரசியல் சரித்திரத்தையும், அந்த மண்ணின் பெண் பட்ட வேதனைகளையும், அதேசமயம் அந்தப் பெண் எல்லாவற்றையும் மீறி தலை நிமிர்ந்து நிற்பதையும் கொண்டு சேர்க்கும். அவரது கவிதையில் பஞ்சாபின் ஸூஃபி கவிஞர்களின், துறவிகளின் நிழல் படிந்திருப்பதையும் காணலாம். மார்க்சிய சமதர்மமும் வந்து போகும். எந்த தயக்கமுமற்ற, தன் தர்மங்களைத் தானே தீர்மானித்துக் கொண்ட ஒரு பெண்ணியவாதியையும் காணலாம்.” என விமர்சகர் [[வெங்கட் சாமிநாதன்]] மதிப்பிட்டார்.
 
== திரைப்படங்கள் ==
 
====== அம்ரிதாவின் படைப்புகளின் திரைவடிவம் ======
* அம்ரிதா ப்ரீதமின் புத்தகங்களில் முதலில் படமாக்கப்பட்டது 'தர்தி சாகர் தே சிப்பியன்', 'காதம்பரி'(1975), அதைத் தொடர்ந்து 'உனா டி கஹானி', 'டாக்கு' (1976).
* அவரது நாவலான 'பிஞ்சர்' (1950) பிரிவினைக் கலவரங்களின் கதையையும் அந்தக் காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் நெருக்கடியையும் விவரித்தது.
 
====== அம்ரிதாவைப் பற்றியவை ======
* இயக்குனர் எம்.எஸ்.சத்யு 'ஏக் தி அமிர்தா' என்ற நாடகத்தின் மூலம் அஞ்சலி செலுத்தினார்.
* 2007-ல் பாடலாசிரியர் குல்சாரால்  வாசிக்கப்பட்ட அமிர்தா ப்ரீதம் கவிதைகளுடன், 'குல்சார் பாடிய அம்ரிதா' என்ற ஒலிவட்டு  வெளியிடப்பட்டது.
== விருதுகள்==
== விருதுகள்==
* 1956-ல் சாகித்ய அகாதெமி விருது ('சுனேஹடே' கவிதைத் தொகுப்புக்காக)
* 1969-ல் பத்மஸ்ரீ விருது,
* 1973-டெல்லி பல்கலைக்கழகம், ஜபல்பூர் பல்கலைக்கழகம் மற்றும் விஸ்வ பாரதி (1987) உட்பட பல பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்கள்
* 1979-ல் பல்கேரியா குடியரசின் சர்வதேச வாப்சரோவ் விருது பெற்றார்.
* 1979-ல் பல்கேரியா குடியரசின் சர்வதேச வாப்சரோவ் விருது
* 1982-ல்  ஞானபீட விருது('காகஸ் தே கேன்வாஸ்',Paper and Canvas)
* 1986-92 ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
* பஞ்சாப் ரத்தன் விருது
* 1987-ல் பிரெஞ்சு அரசாங்கத்தால் அதிகாரி டென்ஸ், 'ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ்' பட்டத்தையும் பெற்றார்.
* 2004-ல் பத்ம விபூஷண் விருது
* அவரது வாழ்நாளின் இறுதியில், பாகிஸ்தானின் பஞ்சாபி அகாதெமியால் அவருக்கு விருது வழங்கப்பட்டது.
* ஆகஸ்ட் 31, 2019 அன்று, கூகுள் அவரது 100வது பிறந்தநாளை ஒரு டூடுலுடன் நினைவுகூர்ந்து கெளரவித்தது.
== மறைவு ==
அம்ரிதா ப்ரீத்தம்  அக்டோபர் 31, 2005-ல் தனது 86-வது வயதில் புது தில்லியில் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட பின்னர் தூக்கத்தில் மறைந்தார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
===== நாவல்கள் =====
* பிஞ்சர்
* மருத்துவர் தேவ்
* கோரே ககாஸ், உஞ்சஸ் தின்
* தர்தி, சாகர் அவுர் சீபியன்
* ரங் கா பட்டா
* டில்லி கி கலியான்
* டெராஹ்வான் சுராஜ்
* யாத்திரி
* ஜிலாவதன் (1968)
* ஹர்தட் கா ஜிந்தகினாமா
===== சுயசரிதைகள் =====
* பிளாக் ரோஸ் (1968)
* ரசிதி டிக்கெட் (1976)
* வார்த்தைகளின் நிழல்கள் (2004)
===== சிறுகதைகள் =====
* கஹானியன் ஜோ கஹானியன் நஹி
* கஹானியோன் கே அங்கன் மே
* மண்ணெண்ணெய் துர்நாற்றம்
===== கவிதைத் தொகுப்புகள் =====
* அம்ரித் லெஹ்ரான் (1936)
* ஜியுண்டா ஜிவான் (1939)
* ட்ரெல் தோட் ஃபுல் (1942)
* ஓ கீதன் வாலியா (1942)
* பத்லாம் டி லாலி (1943)
* சஞ்ச் டி லாலி (1943)
* லோக் பீரா (மக்கள் வேதனை) (1944)
* பதர் கீதே (தி பெபில்ஸ்) (1946)
* பஞ்சாப் தி ஆவாஸ் (1952)
* சுனேஹடே (செய்திகள்) (1955)
* அசோகா செட்டி (1957)
* கஸ்தூரி (1957)
* நாகமணி (1964)
* ஏக் சி அனிதா (1964)
* சக் நம்பர் சட்டி (1964)
* யுனிஞ்சா தின் (49 நாட்கள்) (1979)
* காகஸ் தே கன்வாஸ் (1981)
* சுனி ஹூயீ கவிதாயென்
* ஏக் பாத்
===== மொழிபெயர்க்கப்பட்டவை =====
* ராதையுமில்லை ருக்மணியுமில்லை (சரஸ்வதி ராம்நாத்) (தமிழ்)
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
* [https://solvanam.com/2014/10/24/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/ அம்ரிதா ப்ரீதம்: வெங்கட் சாமிநாதன்: சொல்வனம்]
{{Being created}}
* [https://solvanam.com/2017/03/22/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/ அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி: ஏகாந்தன்: சொல்வனம்]
* [https://www.hindutamil.in/news/supplements/penn-indru/514627-amrita-preetham-special-article.html அம்ரிதா ப்ரீதம் நூற்றாண்டு: காதலின் உள்ளொளியைப் படைத்த கவி: இந்து தமிழ்திசை]
* [http://www.vidaweb.org/amrita-pritam-sexual-politics-and-publishing-in-mid-20th-century-india/ “Amrita Pritam: Sexual Politics and Publishing in Mid-20th Century India” – VIDA: Women in Literary Arts Exclusive]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:48, 21 February 2024

அம்ரிதா ப்ரீத்தம்
அம்ரிதா ப்ரீத்தம்

அம்ரிதா ப்ரீத்தம் (ஆகஸ்ட் 31, 1919 - அக்டோபர் 31, 2005) பஞ்சாபி, இந்தியில் எழுதிய எழுத்தாளர், கவிஞர், இதழியலாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர். 'பிஞ்சர்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். 'காகஸ் தே கன்வாஸ்' நூலுக்காக ஞானபீட விருது பெற்றார். இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளிலும் பஞ்சாபி பேசும் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவரின் காதல் கவிதைகள் பிரபலமானவை. இவரது கவிதைகள் பஞ்சாபின் சூஃபி கவிஞர்களின், துறவிகளின் நிழல் படிந்தவையாகவும், மார்க்சியம், சமத்துவம் மற்றும் பெண்ணியவாதக் கருத்துக்களைக் கொண்டவையாகவும் அமைந்தன.

வாழ்க்கைக் குறிப்பு

அம்ரிதா ப்ரீத்தம் பிரித்தானிய இந்தியாவில் பஞ்சாபில் உள்ள குஞ்ஜ்ரன்வாலாவில் ராஜ் பீபி, கர்தார் சிங் ஹித்காரி இணையருக்கு ஆகஸ்ட் 31, 1919-ல் பிறந்தார். அப்பா பள்ளி ஆசிரியராகவும், சீக்கிய மதப்பிரச்சாரகராகவும் இருந்தார். கவிதைகள் எழுதினார். தாயார் அம்ரிதாவின் பதினொராம் வயதில் இறந்தார்.

அம்ரிதா அதன்பின் தந்தையுடன் லாகூருக்குக் குடிபெயர்ந்தார். 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது லாகூரிலிருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்.

அம்ரிதா இம்ரோஜ்

தனிவாழ்க்கை

அம்ரிதாவுக்கு பதினாறு வயதில் (1935) சிறுவயதிலேயே மண உறுதிசெய்யப்பட்ட ப்ரீத்தம் சிங்குடன் திருமணமானது. லாகூர் அனார்கலி பஜாரில் ஆடை வியாபாரியின் மகனான ப்ரீதம் சிங் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர்களுக்கு இரு குழந்தைகள். மகள் கண்ட்லா, மகன் நவ்ராஜ் குவாத்ரா.

அம்ரிதா ப்ரீத்தம் இந்தியப் பிரிவினைக்கு முன் லாகூரில் உள்ள வானொலி நிலையத்திலும் சிறிது காலம் பணியாற்றினார். 1961-ம் ஆண்டு வரை டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் பஞ்சாபி சேவையில் பணியாற்றினார். 1960-ல் ப்ரீத்தமிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

அம்ரிதா கவிஞர் சாஹிர் லூதியானவி மீது காதல் கொண்டார். இந்தக் காதல் கதை அவரது சுயசரிதையான 'ரசிதி டிக்கெட்' (Rasidi Ticket) நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சாஹிர் லூதியானவிக்காக அவர் எழுதிய சிறுகடித வடிவிலான கவிதைகளின் தொகுப்பு ‘சுனேஹ்ரே’ (Sunehre –messages) சாஹித்ய அகாதமி விருது பெற்றது. பெண் பாடகி சுதா மல்ஹோத்ரா சாஹிரின் வாழ்க்கையில் வந்தபின் அம்ருதாவுடனான அவரது உறவு முறிந்தது.

அதன்பின் அம்ரிதா கலைஞரும் எழுத்தாளருமான இந்தர்ஜித் இம்ரோஸ் என்பவருடன் காதலில் இருந்தார். தனது வாழ்க்கையின் கடைசி நாற்பது ஆண்டுகளை இம்ரோஸுடன் கழித்தார். இம்ரோஸ் அம்ரிதாவின் பெரும்பாலான புத்தக அட்டைகளை வடிவமைத்தார். தனது பல ஓவியங்களுக்கு அம்ரிதாவைப் பொருளாக்கினார். அவர்களது வாழ்க்கை 'அம்ரிதா இம்ரோஸ்: ஒரு காதல் கதை' (Amrita-Imroz: In the times of Love and Longing) என்ற புத்தகத்தில் பேசப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தன் கணவரிடமிருந்து அம்ரிதா பிரிந்துவந்துவிட்டார் எனினும், இம்ரோஸ்-அம்ரிதா இடையேயான நட்பும் நெருக்கமும் அவர்களைத் திருமணம் வரை கொண்டுசெல்லவில்லை. இம்ரோஸ் தாங்களிருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில், நண்பர்களாய் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஆன்மிகம்

அம்ரிதா ப்ரீத்தம் தன் வாழ்வின் கடைசி வருடங்களில் ஷிர்டி பாபாவின் பக்தராக இருந்ததார். ஒரு அதிகாலையில் அகர்பத்தி புகையை பாபாவுக்குக் காட்டி கண்முடி தியானித்திருக்கையில் தான் தானாக இல்லாமல், அந்த வாசனைப்புகையாகவே மாறி பரவியிருந்ததாக உணர்ந்தார்.

அம்ரிதா சீக்கிய நம்பிக்கையின் போதகராக (பிரசாரக்) இருந்தார். பிற்கால வாழ்க்கையில் அவர் ஓஷோவின் பக்கம் திரும்பினார். 'ஏக் ஓங்கர் சத்னம்' உட்பட ஓஷோவின் பல புத்தகங்களுக்கு அறிமுகங்களை எழுதினார். ஆன்மீக கருப்பொருள்கள் மற்றும் கனவுகள் குறித்து எழுதத் தொடங்கினார்.

சமூகப்பணி

அம்ரிதா ப்ரீத்தம் சுதந்திரத்திற்குப் பிறகு சமூக ஆர்வலர் குரு ராதா கிஷன் டெல்லியில் முதல் ஜனதா நூலகம் (பொது நூலகம்) கொண்டு வர முன்முயற்சி எடுத்தபோது அதில் பங்கேற்றார். இதை பால்ராஜ் சஹானி மற்றும் அருணா ஆசஃப் அலி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த ஆய்வு மையமும் நூலகமும் இன்னும் டெல்லி மணிக்கூண்டு கோபுரத்தில் இயங்கி வருகின்றன.

இதழியல்

அம்ரிதா பஞ்சாபியில் 'நாகமணி' (Nagmani) என்ற மாத இலக்கியப் பத்திரிகையை இம்ரோஸுடன் சேர்ந்து 33 ஆண்டுகள் நடத்தினார். கவிதைகளுக்கான மாத இதழான(Poetry monthly) ஒன்றையும் நடத்தினார்.

அம்ரிதா ப்ரீத்தம்

இலக்கிய வாழ்க்கை

அம்ரிதா ப்ரீத்தம் பஞ்சாபி, இந்தி மொழிகளில் எழுதினார். அவரது பதினாறாவது வயதில் முதல் கவிதைத் தொகுப்பான 'அம்ரித் லெஹ்ரேன்' (அமிர்த அலைகள்) வெளிவந்தது. 1936-1946 காலகட்டத்தில் ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. அவர் ஒரு காதல் கவிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கினாலும், விரைவில் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆனார். 1943-ல் வங்காளப் பஞ்சத்திற்குப் பிறகு போரினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை வெளிப்படையாக விமர்சித்த லோக் பீட் (மக்கள் வேதனை, 1944) தொகுப்பில் அதன் தாக்கம் காணப்பட்டது.

1947-ல் டேராடூனிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்தபோது, 'அஜ் ஆகான் வாரிஸ் ஷா னு' (நான் இன்று வாரிஸ் ஷாவிடம் கேட்கிறேன்) என முடியும்படியான கவிதையை எழுதினார். இக்கவிதை சூஃபி கவிஞரான வாரிஸ் ஷாவை நோக்கி எழுதப்பட்டது. இது பிரபலமடைந்தது. விவாகரத்துக்குப் பின் அவரது பணி மேலும் பெண்ணியத்தை நோக்கிச் சென்றது. அம்ரிதா ப்ரீத்தமின் பல படைப்புகள் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வைப் பற்றிப் பேசின.

தேசப்பிரிவினை பெண்களுக்கு இழைத்த கொடூரம்பற்றிய தாக்கத்தில் பஞ்சாபி மொழியில் அம்ரிதா 1950-ல் எழுதிய நாவல் ‘பிஞ்சர்’ (எலும்புக்கூடு). இந்தியப் பிரிவினைபற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்பட்டது. 'பிஞ்சர்' என்ற பெயரிலேயே ஒரு ஹிந்தி படமாகவும் பின்னர் இது வெளிவந்தது. பிரிவினைக்குப் பிறகு அவர் இந்தியிலும் ஏராளமாக எழுதினார். 'கால் சேத்னா'(நேர உணர்வு) மற்றும் 'அகயாத் கா நிமந்திரன்' (தெரியாத அழைப்பு). 'காலா குலாப்' (கறுப்பு ரோஜா, 1968), 'ரசிதி டிக்கெட்'(1976) மற்றும் 'அக்ஷரோன் கே சாயே'(சொற்களின் நிழல்கள்) என்ற தலைப்பில் சுயசரிதைகளையும் வெளியிட்டார். அவரது பல படைப்புகள் ஆங்கிலம், பிரஞ்சு, டேனிஷ், ஜப்பானிய, மாண்டரின் மற்றும் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளில் இருந்து அவரது சுயசரிதை படைப்புகள் 'காலா குலாப் (Black rose)மற்றும் ரசிதி டிக்கெட் (Revenue stamp) உட்பட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

அம்ரிதாவின் 'சுனேஹடே' என்ற நீண்ட கவிதைக்காக அவருக்கு 1956-ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. பஞ்சாபியில் ஒரு படைப்புக்காக விருது வழங்கப்பட்ட முதல் மற்றும் ஒரே பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

“நிறைந்த புகழும் தன் வாழ்நாளிலேயே வெற்றியும் அடைந்தவர். இன்றைய பஞ்சாபி இலக்கியம் பற்றி நினைத்த மாத்திரத்திலேயே முதலில் முன்னிற்பது அவரது பெயராகத்தான் இருக்கும். அந்த பெயர் நமது பிரக்ஞையில் கொண்டு சேர்க்கும் நினைவுகள், பஞ்சாபின் இலக்கிய சரித்திரத்தையும், அரசியல் சரித்திரத்தையும், அந்த மண்ணின் பெண் பட்ட வேதனைகளையும், அதேசமயம் அந்தப் பெண் எல்லாவற்றையும் மீறி தலை நிமிர்ந்து நிற்பதையும் கொண்டு சேர்க்கும். அவரது கவிதையில் பஞ்சாபின் ஸூஃபி கவிஞர்களின், துறவிகளின் நிழல் படிந்திருப்பதையும் காணலாம். மார்க்சிய சமதர்மமும் வந்து போகும். எந்த தயக்கமுமற்ற, தன் தர்மங்களைத் தானே தீர்மானித்துக் கொண்ட ஒரு பெண்ணியவாதியையும் காணலாம்.” என விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மதிப்பிட்டார்.

திரைப்படங்கள்

அம்ரிதாவின் படைப்புகளின் திரைவடிவம்
  • அம்ரிதா ப்ரீதமின் புத்தகங்களில் முதலில் படமாக்கப்பட்டது 'தர்தி சாகர் தே சிப்பியன்', 'காதம்பரி'(1975), அதைத் தொடர்ந்து 'உனா டி கஹானி', 'டாக்கு' (1976).
  • அவரது நாவலான 'பிஞ்சர்' (1950) பிரிவினைக் கலவரங்களின் கதையையும் அந்தக் காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் நெருக்கடியையும் விவரித்தது.
அம்ரிதாவைப் பற்றியவை
  • இயக்குனர் எம்.எஸ்.சத்யு 'ஏக் தி அமிர்தா' என்ற நாடகத்தின் மூலம் அஞ்சலி செலுத்தினார்.
  • 2007-ல் பாடலாசிரியர் குல்சாரால் வாசிக்கப்பட்ட அமிர்தா ப்ரீதம் கவிதைகளுடன், 'குல்சார் பாடிய அம்ரிதா' என்ற ஒலிவட்டு வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • 1956-ல் சாகித்ய அகாதெமி விருது ('சுனேஹடே' கவிதைத் தொகுப்புக்காக)
  • 1969-ல் பத்மஸ்ரீ விருது,
  • 1973-டெல்லி பல்கலைக்கழகம், ஜபல்பூர் பல்கலைக்கழகம் மற்றும் விஸ்வ பாரதி (1987) உட்பட பல பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்கள்
  • 1979-ல் பல்கேரியா குடியரசின் சர்வதேச வாப்சரோவ் விருது பெற்றார்.
  • 1979-ல் பல்கேரியா குடியரசின் சர்வதேச வாப்சரோவ் விருது
  • 1982-ல் ஞானபீட விருது('காகஸ் தே கேன்வாஸ்',Paper and Canvas)
  • 1986-92 ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • பஞ்சாப் ரத்தன் விருது
  • 1987-ல் பிரெஞ்சு அரசாங்கத்தால் அதிகாரி டென்ஸ், 'ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ்' பட்டத்தையும் பெற்றார்.
  • 2004-ல் பத்ம விபூஷண் விருது
  • அவரது வாழ்நாளின் இறுதியில், பாகிஸ்தானின் பஞ்சாபி அகாதெமியால் அவருக்கு விருது வழங்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 31, 2019 அன்று, கூகுள் அவரது 100வது பிறந்தநாளை ஒரு டூடுலுடன் நினைவுகூர்ந்து கெளரவித்தது.

மறைவு

அம்ரிதா ப்ரீத்தம் அக்டோபர் 31, 2005-ல் தனது 86-வது வயதில் புது தில்லியில் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட பின்னர் தூக்கத்தில் மறைந்தார்.

நூல் பட்டியல்

நாவல்கள்
  • பிஞ்சர்
  • மருத்துவர் தேவ்
  • கோரே ககாஸ், உஞ்சஸ் தின்
  • தர்தி, சாகர் அவுர் சீபியன்
  • ரங் கா பட்டா
  • டில்லி கி கலியான்
  • டெராஹ்வான் சுராஜ்
  • யாத்திரி
  • ஜிலாவதன் (1968)
  • ஹர்தட் கா ஜிந்தகினாமா
சுயசரிதைகள்
  • பிளாக் ரோஸ் (1968)
  • ரசிதி டிக்கெட் (1976)
  • வார்த்தைகளின் நிழல்கள் (2004)
சிறுகதைகள்
  • கஹானியன் ஜோ கஹானியன் நஹி
  • கஹானியோன் கே அங்கன் மே
  • மண்ணெண்ணெய் துர்நாற்றம்
கவிதைத் தொகுப்புகள்
  • அம்ரித் லெஹ்ரான் (1936)
  • ஜியுண்டா ஜிவான் (1939)
  • ட்ரெல் தோட் ஃபுல் (1942)
  • ஓ கீதன் வாலியா (1942)
  • பத்லாம் டி லாலி (1943)
  • சஞ்ச் டி லாலி (1943)
  • லோக் பீரா (மக்கள் வேதனை) (1944)
  • பதர் கீதே (தி பெபில்ஸ்) (1946)
  • பஞ்சாப் தி ஆவாஸ் (1952)
  • சுனேஹடே (செய்திகள்) (1955)
  • அசோகா செட்டி (1957)
  • கஸ்தூரி (1957)
  • நாகமணி (1964)
  • ஏக் சி அனிதா (1964)
  • சக் நம்பர் சட்டி (1964)
  • யுனிஞ்சா தின் (49 நாட்கள்) (1979)
  • காகஸ் தே கன்வாஸ் (1981)
  • சுனி ஹூயீ கவிதாயென்
  • ஏக் பாத்
மொழிபெயர்க்கப்பட்டவை
  • ராதையுமில்லை ருக்மணியுமில்லை (சரஸ்வதி ராம்நாத்) (தமிழ்)

உசாத்துணை

✅Finalised Page