under review

பொன்னியின் செல்வன் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(82 intermediate revisions by 9 users not shown)
Line 1: Line 1:
{{being created}}
{{Read English|Name of target article=Ponniyin Selvan (novel)|Title of target article=Ponniyin Selvan (novel)}}
[[File:Po.png|thumb|பொன்னியின் செல்வன் (நாவல்) பாகம்  - 01]]
[[File:Ponniyinselvan0.jpg|thumb|பொன்னியின் செல்வன் (நாவல்) ]]
'''பொன்னியின் செல்வன்''' (1951 1954) பொதுவாசிப்புக்குரிய சரித்திர நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் [https://littamilpedia.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D) கல்கி]. தமிழர்களின் பெருமையைப் பல நாடுகளுக்குப் பறைசாற்றிய இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழ பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது இந்த நாவல்.  
[[File:Ponni1.jpg|thumb|நந்தினி ஓவியர் மணியம்]]
 
[[File:Ponni5.jpg|thumb|பொன்னியின் செல்வன் தொடர்கதைச் சித்தரிப்பு]]
== பதிப்பு ==
[[File:பொன்னியின் செல்வன், கல்கி அட்டை.jpg|thumb|பொன்னியின் செல்வன், கல்கி அட்டை ]]
பொன்னியின் செல்வன் நாவல் 1950 ஆண்டு முதல் 1955 ஆண்டு வரை [https://littamilpedia.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D) கல்கி வார இதழில்] தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் ஐந்து பகுதிகளை உடையது. 1. புதுவெள்ளம், 2. சுழற்காற்று, 3. கொலைவாள், 4. மணிமகுடம், 5. தியாக சிகரம்.
பொன்னியின் செல்வன் (1950 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . 'பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது.
 
== எழுத்தும் பதிப்பும் ==
== எழுத்தாளர் ==
[[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் அக்டோபர் 29,1950 முதல் 1955-ம் ஆண்டு வரை [[கல்கி (வார இதழ்)|கல்கி வார இதழில்]] தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் நான்குமுறை கல்கி வார இதழிலேயே மீண்டும் தொடராக வெளிவந்தது. டிசம்பர் 5, 1954-ல் பொன்னியின் செல்வன் வானதி பதிப்பக வெளியீடாக நூல்வடிவம் கொண்டது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின் ஏராளமான பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. பொன்னியின் செல்வனுக்கு முன் [[சிவகாமியின் சபதம்]] நாவலும் அதற்கு முன் [[பார்த்திபன் கனவு]] நாவலும் கல்கியால் எழுதப்பட்டன.
பொன்னியின் செல்வன் நாவலை எழுதியவர் எழுத்தாளர் [https://littamilpedia.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D) கல்கி]. இவர் சுதந்திரப்போராட்ட தியாகியும் இதழாளருமாவார். பொதுவாசிப்புக்குரிய பல கதைகளை எழுதியுள்ளார். முதன்மையான இலக்கிய செயல்பாடு தமிழ் உரைநடை உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பே. பொழுதுபோக்கு நாவல்கள், இதழியல் கட்டுரைகள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், இசைவிமர்சனம், திரைப்பட விமர்சனம், அரசியல் விமர்சனம், நையாண்டிக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் என பல தளங்களிலும் தொடர்ச்சியாக எழுதி தமிழ் உரைநடையின் எல்லா சாத்தியங்களையும் விரிவுபடுத்தினார்.  
== ஓவியங்கள் ==
பொன்னியின் செல்வன் நாவலின் வெற்றிக்கு அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் குறிப்பிடத்தக்க காரணங்களாக அமைந்தன. முதல்முறை வெளியானபோது கல்கியின் நண்பரான [[மணியம்]] ஓவியம் வரைந்தார். இந்தியச் சுவரோவிய முறையின் அழகியலை பின்பற்றி வரையப்பட்டவை மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியங்கள். கல்கி வார இதழில் ஐந்துமுறை ஓவியங்களுடன் தொடராக வந்தது..  
* 1950 - 1954 வரை மணியம் ஓவியம்.
* 1968 - 1972 வரை வினு ஓவியம்.
* 1978 - 1982 வரை மணியம் ஓவியம்.
* 1998 - 2002 வரை பத்மவாசன் ஓவியம்.
* 2014 முதல் வேதா ஓவியம்.
== வரலாற்றுப் பின்னணி ==
[[File:பொன்னியின் செல்வன்.jpg|thumb|பொன்னியின் செல்வன், பத்மவாசன் சித்தரிப்பு]]
எழுத்தாளர் கல்கி, [[கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி|K.A. நீலகண்ட சாஸ்திரி]]யின் சோழர்கள் புத்தகத்தையும் T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை எழுதினார். இந்நாவல் நிகழும் காலம் பொ.யு. 957 முதல் 973 வரை ஆட்சி செய்த சுந்தரசோழரின் இறுதி ஆண்டுகள். இவர் அரிஞ்சய சோழருக்கும் அன்பில் பட்டயங்களில் பெயர் குறிப்பிடப்படும் அரசியான வைதும்பை நாட்டு கல்யாணிக்கும் பிறந்தவர். இவர் இரண்டாம் பராந்தக சோழர் என அழைக்கப்பட்டார். இவருடைய மகன் ஆதித்த கரிகாலன் தலைமையில் சோழர்கள் சேவூர் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் வீரபாண்டியனை தோற்கடித்து கொன்றார்கள் என லெய்டன் பட்டயங்கள், கரந்தை பட்டயங்கள், திருவாலங்காடு பட்டயங்களில் குறிப்பு உள்ளது. ஆதித்த கரிகாலன் 'வீரபாண்டியன் தலைகொண்ட’ என்னும் பெயர் பெற்றார். இப்போரில் பாண்டியர்களுக்கு ஈழ மன்னர் நான்காம் மகிந்தர் உதவி செய்தார் என இலங்கை வரலாற்று நூல் 'மகாவம்சம்' குறிப்பிடுகிறது.


ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட செய்தியை உடையார்குடி கல்வெட்டு கூறுகிறது. ஆதித்த கரிகாலனைக் கொன்ற குற்றத்திற்காக அரசன் ஆணைப்படி வேதியர் சிலருக்கு திருவீரநாராயண சதுர்வேதிமங்கலச் சபை தண்டனை அளித்ததை ராஜராஜ சோழன் பதவி ஏற்ற இரண்டாம் ஆண்டு வெளியிடப்பட்ட இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தர சோழருக்குப் பிறகு பதவியேற்ற மதுரந்தகன் முடிசூடிக்கொண்டபின்னர் உத்தமசோழன் என்னும் பெயருடன் பதினாறாண்டுகள் ஆட்சி செய்தான். அந்தப் பதினாறு ஆண்டுகளிலும் கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதில் இருந்து உத்தமசோழனே கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் அருள்மொழித் தேவர் என்னும் ராஜராஜசோழன் தன் சிறியதந்தை உத்தமசோழர் எனும் மதுராந்தகருக்கு அரசுப்பதவியை மனமுவந்து அளித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இச்செய்திகளின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் புனையப்பட்டுள்ளது.
== நூல் அமைப்பு ==
பொன்னியின் செல்வன் ஐந்து பகுதிகளை உடையது.
* புதுவெள்ளம்
* சுழற்காற்று,
[[File:பொன்னியின் செல்வன் விளம்பரம்.jpg|thumb|பொன்னியின் செல்வன் விளம்பரம் ]]
* கொலைவாள்
* மணிமகுடம்
* தியாக சிகரம்.
== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
வாணர் குல வீரரான 'வல்லவரையன் வந்தியதேவன்' ஓர் ஓலைச்செய்தியைக் கொண்டுசெல்கிறார். அந்த ஓலை சக்ரவர்த்தியின் மூத்த மகனான காஞ்சியிலிருக்கும் இளவல் 'ஆதித்த கரிகால' சோழனிடமிருந்து அவர் பெற்றுச்செல்கிறார். அந்த ஓலையை அவர்  தஞ்சையில் இருக்கும் 'சுந்தர சோழ' சக்கரவர்த்திக்கும், அவரின் மகளான பழையாறையில் இருக்கும் இளவரசி 'குந்தவை' பிராட்டியாருக்கும் அவர் கொண்டுசென்று சேர்க்க வேண்டும்.
வாணர் குல வீரனான வல்லவரையன் வந்தியத்தேவன் சோழச்சக்கரவர்த்தி சுந்தரசோழனின் மூத்த மகனான காஞ்சியிலிருக்கும் இளவரசன் ஆதித்த கரிகால சோழனிடமிருந்து தஞ்சையில் இருக்கும் சுந்தர சோழச் சக்கரவர்த்திக்கும், அவரின் மகளான பழையாறையில் இருக்கும் இளவரசி குந்தவை பிராட்டியாருக்கும் ஓர் ஓலையை கொண்டு செல்கிறான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஒரு சதி நடப்பதைக் காண்கிறான். சோழ இளவரசராக பட்டம் கட்டப்பட்ட ஆதித்த கரிகாலனை விடுத்து, சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகனான மதுராந்தகச் சோழரைச் சோழ பேரரசுக்குச் சக்கரவர்த்தியாக்க அவர்கள் எண்ணுகிறார்கள் . சுந்தர சோழ சக்கரவர்த்தியின் நண்பரும், சோழர்களுக்கு பல நூற்றாண்டுகளாகப் போர்த்தளபதிகளாக இருந்து வந்த பழுவூர் சிற்றரசர் வம்சத்தை சேர்ந்தவருமான பெரிய பழுவேட்டரையர் இந்தச் சதியை ஒருங்கிணைக்கிறார். அதில் பல சிற்றரசர்களும் தளபதிகளும் பங்குகொள்கின்றனர்.  
 
சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டுள்ள ஆதித்த கரிகாலனை விடுத்து, சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகனான மதுராந்தகச் சோழரைச் சோழ பேரரசுக்குச் சக்ரவர்த்தியாக்க சதி நடக்கிறது. சுந்தர சோழ சக்ரவர்த்தியின் நண்பனானவரும் சோழர்களுக்கு பல நூற்றாண்டுகளாகப் போர் தளபதியாக இருந்து வந்த பழுவேட்டரையர் பரம்பரையில் வந்த 'பெரிய பழுவேட்டரையர்' இந்தச் சதியைச் செயல்படுத்துகின்றனர்.
 
சோழ குலத்திற்கு உண்மை விஸ்வாசியானவரும் அனைவராலும் போற்றப்படும் பெரிய பழுவேட்டரையரே, சக்ரவர்த்தி முடிவிற்கு எதிராகச் சதி செய்வதற்கு ஒரு நியாயமான காரணமும் இருந்ததாக அவர் எண்ணியதே சாம்ராஜ்யத்தில் நடந்த குழப்பத்திற்கும் சம்பவத்திற்கும் காரணமாக அமைகிறது.
 
சக்ரவர்த்தியான சுந்தர சோழரின் தந்தையான அரிஞ்சய சோழ தேவரின் இரண்டாவது மூத்த சகோதரரான கண்டராதித்தர், தீவிர சிவ பக்தர். போரிலோ, நாட்டை ஆளுவதிலோ பற்றில்லாமல் தெய்வீக தொண்டு செய்வதிலும் ஆன்மிகப் பணியிலும் நாட்டம் செலுத்தி வந்தவர். கண்டராதித்தரின் மூத்த சகோதரனான இராஜாதித்தர் போரில் உயிர் துறக்கவே, அடுத்த அரியணைக்கு உரியவராக கண்டராதித்தர் ஆகிறார். ஆனால், அரியணையில் நாட்டம் இல்லாததாலும், போரினால் ஏற்பட்ட விளைவுகளை அவர் வெறுக்கவே, போரில் அனுபவ சாலியான தனது இளைய சகோதரரான அரிஞ்சய சோழ தேவரை சக்ரவர்த்தியாக்குகிறார். அரிஞ்சய சோழரும் அடுத்த சில ஆண்டுகளில் போரில் உயிர் துறந்தவுடன், கண்டராதித்தரின் மகனான மதுராந்தகர் ஏற வேண்டிய அரியணை, அரிஞ்சய சோழரின் மகனான சுந்தர சோழருக்கு கிடைக்கிறது. மதுராந்தகர் வயதில் சிறியவராக இருந்ததுடன், கண்டராதித்தரும், அவரது மனைவியுமான செம்பியன் மாதேவி தனது மகனை மிகப்பெரிய சிவ பக்தராக ஆக்கவே விரும்பியதே அதறகு  காரணம். ஆனால், மதுராந்தகர் (போலி மதுராந்தகர்) பெரியவரானதும், தனது தந்தை , தாயின் விருப்பத்திற்கு மாறாக அரியணைக்கு ஆசை கொண்டதும், அதுவே சரி என்றும், அதுவே பாரம்பரியம் என்றும் பெரிய பழுவேட்டரையர் எண்ணி, சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக செயல்பட துவங்குகிறார். பெரிய பழுவேட்டரையர் மனதில் மட்டுமின்றி மதுராந்தகரின் மனதிலும் அரியணை ஆசையை தூண்டியதும், அதற்கான சதிக்கு பின்னிருந்து இயக்கியதும் பழுவூர் இளையராணியாக அழைக்கப்படும் அழகில், அறிவில் இணையில்லாத வயோதிகரான பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துக்கொண்ட 'நந்தினி'.
 
நந்தினி பாண்டிய வம்சத்தில் வந்தவள் என்பதும், ஆதித்த கரிகாலன் தனக்கு பிடித்தமான 'வீர பாண்டியனை' கொலை செய்தததற்காகவும், இளம் வயதில் சோழ அரச குடும்பத்தினரால் ஏற்பட்ட அவமானத்தால் சோழ அரசை பழிவாங்குவதற்காக பெரிய பழுவேட்டரையர் மூலம் தனது எண்ணத்தை ஈடேற்றி கொள்வதற்காக செய்யும் பல சாதூர்யமான சதி வேலைகளை வெட்ட வெளிச்சம் ஆக்குவதுடன், அதை முறியடிக்கிறார் வந்தியத்தேவன்.
 
தனது புத்தி கூர்மையாலும், நேர்மையாலும், ஒப்பற்ற வீரர்களான, உயர் குலத்தில் பிறந்த ஆண் பிள்ளைகளான சம்புவரைய குல இளவரசன் கந்தமாறன், பல்லவ குல பார்த்திபேந்திரா, ஏன் தனது மூத்த சகோதரர் ஆதித்த கருகாலனே மதியிழந்து மயங்கிய நந்தினியிடம் மயங்காத எத்தகைய வீரன், அப்பழுக்கற்ற ஆண்மகன் என தனது பண்புகளால் ஈர்த்து, சோழ பேரரசின் இளவரசி குந்தவையின் காதலுக்கு பாத்திரமாகிறார் வந்தியத்தேவன். வந்தியத்தேவனும் குந்தவையை விரும்புகிறார். ஏன், அனைவரிடத்திலும் வஞ்சகம், பாசாங்கு என இருக்கும் நந்தினி, வந்தியத்தேவனிடம் விவரிக்க இயலாத நேசம் கொண்டிருந்தது பல இக்கட்டான சூழலில் வந்தியத்தேவனின் உயிரை காப்பாற்ற பிரயாத்தனம் எடுத்துக்கொண்டது மூலம் உணரலாம்.
 
விதி வசத்தால் மர்மமான முறையில் ஆதித்த கரிகாலன் சதியால் உயிரிழக்கவே, 'மதுராந்தக சோழன்', சக்ரவர்த்தி ஆவதற்கான தடை தானாகவே விலகுகிறது. நந்தினியும் ஆதித்த கரிகாலனின் மரணத்திற்குப் பிறகு தலைமறைவாகிறார். ஆனால், அங்கே தான் கதையில் திருப்பம் எழுகிறது. அந்த திருப்பம் சாம்ராஜ்யத்தையே அதிர வைக்கும் ரகசியமாக இருக்கிறது.
 
சுந்தர சோழர் இளம் வயதில் இலங்கையில் நடந்த போரில் ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்து, யாரையும் சந்திக்கும் எண்ணமில்லாமல் இலங்கையின் ஒரு தீவில் (பூதத்தீவு) தனித்து தஞ்சம் புகுகிறார். அங்கே, மீனவர் குல பெண்ணான ஊமையான மந்தாகினியை சந்தித்து காதல் வசப்படுகிறார். ஓராண்டு கூட ஆகாத நிலையில், மந்தாகினியை விட்டு மீண்டும் சோழ பேரரசுக்கு வந்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். சில ஆண்டுகள் கழித்து அந்த மந்தாகினியை தஞ்சை நகருக்குள் பார்க்கிறார்; அவளை அரண்மனைக்கு அழைத்து வரும்படி உத்தரவு போடுகிறார் முதன் மந்திரியான அநிருத்த பிர்மராயருக்கு. ஆனால், அவள் தற்கொலை செய்துக்கொண்டதாக அநிருத்தர் திரும்பி வந்து சொன்ன நாள் முதல் குற்ற உணர்ச்சியால் நிலைக்குலைந்து போகிறார் சுந்தர சோழ சக்ரவர்த்தி. சுந்தர சோழருக்கும், மந்தாகினிக்கும் பிறந்தவர்கள் தான், இரட்டையர்களான நந்தினியும், மதுராந்தக சோழரும் என்று சந்தர்ப்ப சூழ்நிலையால் குந்தவை நம்புகிறார். அதனால், முதலில் மதுராந்தக சோழர் அரியணையில் ஏறுவதை தடுத்து, தனது 2வது இளைய சகோதரரான  அருள்மொழிவர்மரான இராஜராஜ சோழனை சக்ரவர்த்தியாக்கும் முடிவை மாற்றி கொள்கிறார் குந்தவை.  ஆனால், நந்தினியும், மதுராந்தகரும் சுந்தர சோழ சக்ரவர்த்திக்கு பிறந்தவர்கள் இல்லை என்பதை ஆதாரத்துடன் முதன் மந்திரியான அநிருத்தர் சொல்லவே, அவர்களிருவரும் பாண்டியன் நாட்டு வாரிசு என்று வந்தியத்தேவன் மூலம் தெரிய வருகிறது. அதனால், அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழனை சக்ரவர்த்தி ஆக்குவதே சிறந்தது என்ற முடிவு மீண்டும் துளிர் விடுகிறது, சோழ நாட்டு அரச குடும்பத்தில். விதி மீண்டும் அந்த எண்ணத்தில் இஷ்டம் இல்லை என்பது போல், மற்றொரு சம்பவத்தை நிகழ்த்துகிறது. நந்தினி, போலி மதுராந்தகர் ஆகிய இருவரும் பாண்டியன் நாட்டு வம்சத்தில் பிறந்தவர்கள் என்ற இரகசியம் வெளிவரும் அதே நேரத்தில், வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு ரகசியம் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது.
 
சுந்தர சோழ சக்ரவர்த்தியின் பெரியப்பாவான சிவ பக்தர் கண்டராதித்தர் ஆன்மீக ஈடுபாட்டால் முதலில் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் இருக்கும் சமயத்தில் அவரை போலவே தீவிர சிவ பக்தையாக இருக்கும் செம்பியன் மாதேவியை பார்த்து, திருமணம் செய்துக்கொள்கிறார். கால தாமதமான திருமணம் என்றாலும் பிள்ளை பேரில் கண்டராதித்தருக்கு இஷ்டம் இல்லையென்றாலும், செம்பியன் மாதேவியாரின் வற்புறுத்தலில் ஒரு பிள்ளையை பெறுகின்றனர். ஆனால், தனக்கு திருமணம் ஆகும் முன்பே, இளைய சகோதரரான அரிஞ்சய சோழர் அரியணையில் ஏறியதால், தனது வாரிசுகளால் பிற்காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தில் அரியணை போட்டி ஏற்படக்கூடாது என்பதால், தனக்கு பிறந்த மகனை; தன்னையும், தன் மனைவி செம்பியன் மாதேவியையும் போல் தீவிர சிவ பக்தராக ஆன்மீகத்திற்கு தொண்டாற்றவே விரும்புவதாகவும், சக்ரவர்த்தியாக்க கூடாது என்றும் அதன்படி தன் மகனை வளர்க்க தனது மனைவி செம்பியன் மாதேவியிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு சிவனடி சேர்கிறார் கண்டராதித்தர். ஆனால், கண்டராதித்தருக்கும், செம்பியன் மாதேவிக்கும் பிறந்த குழந்தை இறந்தது என்று எண்ணி, மாற்று பிள்ளையாக தற்கொலை செய்துக்கொண்டதலிருந்து உயிர்ப்பிழைத்த தனது தோட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஊமையான மந்தாகினிக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஒன்றான ஆண் குழந்தையை தன் பிள்ளையாக வளர்க்க முடிவெடுத்ததே, மதுராந்தகர் அரியணை ஏற கண்டராதித்தர் மறுத்ததன் காரணம் என பின்னாளில் தெரிய வருகிறது. அங்கேயும் விதி விளையாடுகிறது. கண்டராதித்தருக்கும், செம்பியன் மாதேவிக்கும் பிறந்து, இறந்ததாக எண்ணப்பட்ட ஆண் குழந்தை, உயிரோடிருப்பது பல ஆண்டுகள் கழித்து தெரிய வந்தாலும், இடைப்பட்ட காலத்தில் பெற்ற பிள்ளையாகவே பாவித்த பாசத்தால் வளர்ப்பு மகனான போலி மதுராந்தகரை உதரி விடாமல் அரச குலத்தவர் போலவே வளர்த்து, தான் பெற்ற பிள்ளையை ஊமையான மந்தாகினியின் சகோதரியிடம் கொடுத்து அவர் பிள்ளையாக சேந்தன் அமுதன் என்ற பெயரில் சிவ பக்தராக தனது கண்பார்வையில், பராமரிப்பில் சாதாரண பிள்ளையாக வளர்க்கிறார் செம்பியன் மாதேவி.
 
பாண்டிய வம்சமான போலி மதுராந்தகர், சந்தர்ப்ப சூழ்நிலையால் தஞ்சையை விட்டு நீங்கவே, செம்பியன் மாதேவியின் உண்மையான மகனான 'சேந்தன் அமுதன்' அரண்மனைக்கு பிரவேசிக்கிறான். இந்த உண்மை அரச குடும்பத்திற்கு தெரிந்தவுடன் மீண்டும் அருள்மொழிவர்மனை தவிர்த்து உண்மையான உத்தம மதுராந்தக சோழர் என்ற பெயரில் பின்னாளில் போற்றப்பட்ட சேந்தன் அமுதன் அரியணைக்கு ஏறும் சூழல் உருவாகிறது.
 
சுந்தர சோழ சக்ரவர்த்தி, சோழ பேரரசு சாம்ராஜ்ஜியத்தை தனது மகன் விடுத்து, தனது பெரியப்பாவின் மகனான உத்தம மதுராந்தக சோழருக்கு முடிச்சூட்ட காரணக்கர்தவரான பெரிய பழுவேட்டரையர் திடீரென தனது நிலைபாட்டை மாற்றி கொள்கிறார். நந்தினி வஞ்சகி, தன்னை பகடையாக உபயோகப்படுத்திக்கொண்டதை தெரியவந்ததை அடுத்து அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழனே அரியணைக்கு உரியவன் என்ற முடிவிற்கு வருகிறார்.
 
ஆனால், இலங்கை போரை பாதி முடித்து முழு வெற்றிக்கு பணியாற்றி கொண்டிருந்தபோது, தஞ்சையில் சோழ பேரரசில் நிலவிய அசாதாரணமான சூழ்நிலையால் வேறு வழியின்றி இலங்கையிலிருந்து தமிழகம் வரும்  அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழனுக்கு, வழியில் நிகழும் பல இன்னல்களை வந்தியத்தேவன் மற்றும் மந்தானிகினியின் சகோதர மகளும், பின்னாளில் சோழ பேரரசின் சக்ரவர்த்தனியாக ஆகும் ஓடைக்கார பெண்ணான பூங்குழலியின் உதவியால் தப்பிக்கிறார். அரியணை துறந்து பல நாடுகள் சுற்ற வேண்டும் என்ற ஆசைக்கொண்டிருக்கும் தன்னை
 
அரச குடும்பத்தினர் முதல் மக்கள் வரை  அரியணையில் அமர வைக்க வேண்டும் என்ற அவா அருள்மொழிவர்மனுக்கு பிடிக்காததாக எப்போதும் இருந்த வந்த நிலையில், உத்தம மதுராந்தக சோழர் முடிசூட்டும்  முடிவிற்கு அனைவரும் இசைந்து கொடுத்த நிம்மதி சிறிது நாழிகைகள் கூட இல்லாமல், பெரிய பழுவேட்டரையரின் மன மாற்றம் கசப்பானதாகவே இருந்தது அருள்மொழிவர்மனுக்கு. தனது பெண் மயக்கத்தால் சாம்ராஜ்ஜியத்திற்கு ஏற்பட்ட ஆபத்தால் மனமுடைந்த பெரிய பழுவேட்டரையர் தற்கொலை செய்துக்கொள்கிறார். இறக்கும் தருவாயில் அத்தகைய பராக்கிரசாலியான பெரிய பழுவேட்டரையரின் இறுதி ஆசையை நிறைவேற்ற முடியாது என கூற முடியாததால், தனக்கு சக்ரவர்த்தியாக முடிசூட்ட அருள்மொழிவர்மன் ஒப்புக்கொள்கிறார்.
 
முடிசூட்டும் நாள் வருகிறது, வந்தியத்தேவன் உதவிக்கொண்டு தன் திட்டப்படி தந்திரத்தால் தனது அரியணையை தியாகம் செய்து உத்தம மதுராந்தகருக்கே முடிசூட்டி சக்ரவர்த்தி ஆக்குகிறார், அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழன். சேந்தன் அமுதனாக ஏழை வீட்டில் வளர்ந்து சக்ரவர்த்தியான உத்தம மதுராந்தக சோழர், தனது மன விருப்பப்படி ஓடைக்கார பெண்ணான பூங்குழலியை மனம் செய்துக்கொள்கிறார்.
 
தனது நண்பர்களான கந்தமாறன், பார்த்திபேந்திர ஆகியோருக்கு அரசை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன்னையே நினைத்து வாழும் கொடும்பாளூர் இளவரசி வானதியை, அனைவரையும் விட பற்றும், பாசமும் கொண்ட தனது சகோதரி குந்தவை ஆசையின்படி மனம் செய்துக்கொள்கிறார் அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழன். பின்னர், வந்தியத்தேவனுடன் இணைந்து, தமிழக வணிகர்களின் நலனுக்காக கடற்கொள்ளையர்களை அழிக்க கடலில் செல்ல முடிவு எடுக்கிறார் அருள்மொழிவர்மன்.
 
சோழ பேரரசுக்கு மிகப்பெரிய உதவியை செய்ததால், வந்தியத்தேவனுக்கு அவன் லட்சியமான வாணர் குலம் பரிசாக வழங்கப்படுகிறது. சிற்றரசன் என்னும் அந்தஸ்தும் பெறுகிறார் வல்லவரையன் வந்தியத்தேவன்.
 
அருள்மொழிவர்மனுடன் கடலுக்கு சென்று நினைத்த காரியத்தில் வெற்றிப்பெற்று மீண்டும் வரும் போது, தங்களை திருமணம் செய்துக்கொள்வதாக குந்தவை பிராட்டியாரிடம் விடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது, தன் மீது காதல் கொண்ட சம்புவரையர் குலத்தின் இளவரசியான கரு நிற பேரழகி 'மணிமேகலை', தன்னால் வந்தியத்தேவன் உயிரிழந்து விட்டதாக தவறாக எண்ணி சித்தபிரம்மை பிடித்து தொலைந்து போனவள் மீட்கப்பட்டதாக வந்தியத்தேவனுக்கு ஓலை வருகிறது.


குந்தவையிடம் அனுமதிப்பெற்று மணிமேகலையை சென்று பார்க்கிறான். அவன் வருகைக்காகவே உயிரை பிடித்திருந்தது போல், அவன் வந்து தன்னை அவனுடைய மடியில் போட்டுக்கொண்ட சில நாழிகையில் உயிர் துறக்கிறாள் அந்த அழகிய மங்கை. தன் இதயத்தில் தெய்வமாக ஆகி விட்ட மணிமேகலை இனி தான் முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலுன் எனக்கு துணையாகவே இருப்பாள் என வந்தியத்தேவன் எண்ணி கொண்டிருப்தோடு கதை முடிவடைகிறது.
சோழநாட்டின் முந்தைய வரலாறு இது. சுந்தர சோழரின் தந்தையான அரிஞ்சய சோழ தேவரின் இரண்டாவது மூத்த சகோதரரான கண்டராதித்தர் சிவபக்தியில் மூழ்கி வாழ்ந்தவர். கண்டராதித்தரின் மூத்த சகோதரனான இராஜாதித்தர் போரில் உயிர் துறக்கவே அடுத்த அரியணைக்கு உரியவராகக் கண்டராதித்தர் ஆனார். ஆனால், அரியணையில் அமர விருப்பம் இல்லாததாலும், போரினால் ஏற்பட்ட விளைவுகளை அவர் வெறுத்ததாலும், போரில் அனுபவசாலியான தனது இளைய சகோதரரான அரிஞ்சய சோழ தேவரைச் சக்கரவர்த்தியாகினார். அரிஞ்சய சோழரும் அடுத்த சில ஆண்டுகளில் போரில் உயிர் துறந்தவுடன் அவர் மகன் சுந்தர சோழர் அரசரானார். முறைப்படி கண்டராதித்தரின் மகனான மதுராந்தகர் ஏற வேண்டிய அரியணை அது. மதுராந்தகர் வயதில் சிறியவராக இருந்ததுடன், கண்டராதித்தரும் அவரது மனைவியுமான செம்பியன் மாதேவியும் தங்கள் மகன் அரசனாக வேண்டாமென்றும் சிவபக்தன் ஆனால் போதும் என்றும் முடிவெடுத்திருந்ததும் மதுராந்தகருக்கு பதிலாக சுந்தர சோழர் அரசர் ஆக காரணங்களாக அமைந்தன.
[[File:Ponni2.jpg|thumb|வந்தியத்தேவனும் குந்தவையும் (மணியம்)]]
[[File:Ponni3.jpg|thumb|பொன்னியின் செல்வன் கல்கி விளம்பரம்]]
மதுராந்தகர் பெரியவராகி தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அரியணைக்கு ஆசை கொண்டபோது அதுவே முறை என எண்ணிய பெரிய பழுவேட்டரையர் அவருடைய அதிகார விருப்பை ஆதரிக்கிறார். மதுராந்தகரின் மனத்திலும் அரியணை ஆசையைத் தூண்டியதும், அதற்கான சதிக்கு பின்னிருந்து இயக்கியதும் பழுவூர் இளைய ராணி என அழைக்கப்படும் நந்தினி. முதியவரான பழுவேட்டரையரை மணந்து அவரை ஆட்டிப் படைக்கும் நந்தினி பாண்டியர்களால் அரசி என நினைக்கப்படுபவள். அவளுக்கு பின்னாலிருந்து பாண்டியர்களின் ஆபத்துதவிப் படையும் அதன் தலைவனான ரவிதாசனும் இயக்குகிறார்கள். பாண்டியர்களைப் போரில் தோற்கடித்து பாண்டிய அரசனை ஆதித்த கரிகாலன் கொன்றதனால் அதற்குப் பழிவாங்க அவர்கள் எண்ணுகிறார்கள்.  


வந்தியத்தேவன் குந்தவையைச் சந்தித்து அவள் காதலுக்குரியவன் ஆகிறான். ஈழநாடு சென்று ஆதித்த கரிகாலனின் தம்பி அருள்மொழிவர்மனைச் சந்தித்து சதியைப் பற்றிச் சொல்கிறான். நாடு திரும்பும் அருள்மொழிவர்மன் கப்பல் தகர்க்கப்பட்டு கடலில் மூழ்கி உயிர்தப்பி நாகை சூடாமணி விகாரத்தில் படுத்திருக்கிறான். செய்தி அறிந்து தஞ்சைக்கு திரும்பும் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் மர்மமாக கொல்லப்படுகிறான். அவனைக் கொன்றது எவர் என்னும் வினாவுடன் நீளும் நாவல் நந்தினிக்கும் ஆதித்தகரிகாலனுக்கும் இருந்த பழைய காதல், திடீரென்று காணாமலான நந்தினியை பாண்டியன் ஒளிந்திருக்கும் குகையில் அவன் மனைவியாக கண்ட ஆதித்த கரிகாலன் அவள் கண்ணெதிரே பாண்டியனை கொன்றது ஆகிய செய்திகளைச் சொல்கிறது.
[[File:Ponniyin Selvan Vandhiyathevan.jpg|thumb|வந்தியத்தேவன், (மணியம்)]]
நந்தினியின் பின்னணியும் அவளுக்கும் சுந்தர சோழருக்குமான உறவும் நாவலில் விரிகிறது. சேந்தன் அமுதன் என்னும் பூ கட்டும் இளைஞனுக்கும் பூங்குழலி என்னும் படகோட்டிக்கும் இடையேயான உறவு விவரிக்கப்படுகிறது. நாவல் பல முடிச்சுகளை அவிழ்த்துச் சென்று மதுராந்தகன் உண்மையில் கண்டராதித்தரின் மகன் அல்ல, சேந்தன் அமுதனே அந்த மகன் எனக் காட்டுகிறது. எதிரிகளை வென்று, சதிகளை அவிழ்த்து, நாட்டை உரிமை கொள்ளும் அருள்மொழிவர்மனே முடிசூட வேண்டுமென அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால் அருள்மொழிவர்மன் குலமுறைப்படி மதுராந்தகனாகிய சேந்தன் அமுதனே அரசன் ஆகவேண்டும் என்று சொல்லி மணிமுடியை தியாகம் செய்கிறான். வந்தியத்தேவன் குந்தவையை மணக்கிறான். அருள்மொழிவர்மன் வானதியை மணக்கிறான் பின்னாளில் அருள்மொழிவர்மன், ராஜராஜ சோழன் என்ற பெயருடன் சோழ மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என நாவல் கூறிமுடிகிறது.
== கதைமாந்தர்கள் ==
== கதைமாந்தர்கள் ==
* அருள்மொழிவர்மன் - ராஜராஜ சோழன்
* வல்லவரையன் வந்தியத்தேவன் - ராஜராஜ சோழனின் நண்பன்
* குந்தவை - அருள்மொழிவர்மனின் தமக்கை
* நந்தினி - பழுவூர் இளைய ராணி, பெரிய பழுவேட்டரையரின் இளைய மனைவி
* ஆதித்த கரிகாலன் - ராஜராஜ சோழனின் சகோதரர்
* வானதி - கொடும்பாளூர் இளவரசி. ராஜராஜ சோழனின் முதல் மனைவி
* ஆழ்வார்க்கடியான் - உளவு பார்ப்பவர். வீரவைணவர், அநிருத்த பிரம்மராயரின் பணியாள்.
* மந்தாகினி - வாய்பேச இயலாமையால் ஊமைராணி என்றழைக்கப்படுபவர். ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழரின் காதலி
* பெரிய பழுவேட்டரையர் - தஞ்சை கோட்டைத்தலைவர். அரசருக்கு அடுத்த இடத்தில் வலிமையான அதிகாரத்தில் இருப்பவர்
* செம்பியன் மாதேவி - கண்டராதித்த சோழனின் மனைவி. உத்தம மதுராந்தக சோழ தேவரின் அன்னை
* சின்ன பழுவேட்டரையர் - பெரிய பழுவேட்டரையரின் தம்பி.
* அநிருத்த பிரம்மராயர் - சுந்தரசோழரின் முதலமைச்சர், பின்னர் ராஜராஜ சோழனுக்கும் ஆசிரியர்.
* பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி - சேனாதிபதி. கொடும்பாளூர் அரசர்
* பூங்குழலி - ஓடக்காரப் பெண். உத்தம மதுராந்தக சோழரின் பிற்கால மனைவி
* சேந்தன் அமுதன் - உத்தம மதுராந்தக சோழ தேவர்
* போலி மதுராந்தகர் - பாண்டிய நாட்டு இளவல். அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்
* ரவிதாசன் - பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுள் ஒருவர் (தளபதி)
*கந்தமாறன் - சம்புவரையர் குலத்து இளவரசன்,வந்தியத் தேவனின் நண்பன்
* மணிமேகலை - சம்புவரையர் குலத்து இளவரசி. கந்தமாறனின் தங்கை, வந்தியத்தேவனை விரும்பியவள்
* பார்த்திபேந்திரன் - பல்லவ குலத்தவன். ஆதித்த கரிகாலனின் நண்பன்
== இலக்கியச் செல்வாக்கு ==
பொன்னியின் செல்வன் அலெக்ஸாண்டர் டூமாவின் திரீ மஸ்கட்டீர்ஸ் ( [[wikipedia:Milady_de_Winter|The Three Musketeers]] ) நாவலின் வலுவான செல்வாக்கு கொண்ட படைப்பு. வந்தியத்தேவனில் டி ஆர்ட்டக்னான் ( [[wikipedia:Charles_de_Batz_de_Castelmore_d'Artagnan#Portrayals_in_fiction|D'Artagnan]]), நந்தினியில் மிலாடி டி விண்டர் ( [[wikipedia:Milady_de_Winter|Milady de Winter]] ) ஆகியோரின் சாயல் அழுத்தமாக உண்டு. ஆனால் நேரடித் தழுவலோ, இலக்கியத் திருட்டோ அல்ல. சோழர்களின் வரலாற்றுப் பின்னணியிலும், அக்கால பண்பாட்டுப் பின்னணியிலும் நாவலைத் தெளிவாகக் கட்டமைக்க ஆசிரியரால் இயன்றுள்ளது. இந்திய மொழிகளின் தொடக்ககால வரலாற்றுநாவலாசிரியர்கள் பெரும்பாலும் அனைவருமே அந்த புனைவுக்கட்டமைப்பை அலக்ஸாண்டர் டூமா, லிட்டன்பிரபு, புஷ்கின் மற்றும் வால்டர் ஸ்காட் ஆகியோரிடமிருந்தே எடுத்துக்கொண்டனர்.
== இலக்கிய இடம் ==
பொன்னியின் செல்வன் மகாபாரதத்தின் சாயல் கொண்ட நாவல். மகாபாரதத்தில் பீஷ்மர் நியாயம், அறம் ஆகியவற்றுக்கும் மேலாக குலவரிசையை முன்வைப்பவர். அதே பார்வை கொண்ட பெரிய பழுவேட்டரையர் பீஷ்ம பிதாமகர் போலவே இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளார். யுதிஷ்டிரரின் குணச்சித்திரம் அருண்மொழி வர்மனுக்கு உள்ளது. (சிவகாமியின் சபதம் ராமாயணச் சாயல் கொண்டது) இந்த இதிகாசச்சாயம் இந்நாவலை தமிழ் மனங்களில் ஆழமாக நிலைநிறுத்துகிறது.


* அருள்மொழிவர்மன் - இராஜராஜ சோழன்
மிக இளமையிலேயே வாசிக்கத்தக்க எளிமையான மொழி கொண்ட நாவல். எதிர்மறைப் பண்புகள் அற்றதும் உயர்மனநிலைகளை உருவாக்குவதுமான படைப்பு. காமம் மிகை வன்முறை போன்றவை அற்றது. எனவே இறுதிவரை நல்ல வாசிப்பின்பத்தை அளிக்கிறது. கதாபாத்திரங்கள் சாகச நாவல்களுக்குரிய மிகை இல்லாமல் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வீரதீரச்செயல்கள், போர்கள் ஆகியவை மிகையாக காட்டப்படவில்லை. பெரும்பாலும் தனிமனித உணர்வுகள் மற்றும் அரண்மனைச் சதிகள் வழியாகவே கதை செல்கிறது. தமிழகத்தின் பொற்காலம் எனப்படும் காலகட்டத்தையும், அதன் தலைமை ஆளுமை எனப்படும் ராஜராஜ சோழனின் இளமையையும் காட்டுவதனால் முக்கியமான படைப்பாக ஆகிறது. இலக்கிய வகைமையில் வரலாற்றுக் கற்பனாவாதக் கதை என வரையறுக்கப்படுகிறது.
* வல்லவரையன் வந்தியதேவன்
== இலக்கியத் தொடர்ச்சிகள் ==
* குந்தவை (இராஜராஜ சோழன்)
பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக ராஜராஜ சோழனை முன்வைத்து பல படைப்புகள் எழுதப்பட்டுள்ளன.
* நந்தினி - பழுவூர் இளையராணி
* [[விக்ரமன்]] பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக [[நந்திபுரத்து நாயகி]] என்னும் நாவலை எழுதினார்.
* ஆதித்த கரிகாலன் (இராஜராஜ சோழன் சகோதரன்)
* [[அரு.ராமநாதன்]] "[[ராஜராஜ சோழன்]]" என்னும் நாடகத்தை எழுதினார்.
* வானதி (கொடும்பாளூர் இளவரசி) (இராஜராஜ சோழனின் முதல் மனைவி)
* [[பாலகுமாரன்]] "[[உடையார்]]" என்னும் பெருநாவலை எழுதினார்.
* ஆழ்வார்க்கடியான் (உளவு பார்ப்பவர்)
*[[சாண்டில்யன்]] எழுதிய [[மன்னன் மகள்]] ராஜேந்திர சோழனின் காலகட்டத்தைச் சித்தரிக்கிறது. அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரமாக வருகிறார். 
* மந்தாகினி (ஊமைராணி என்றழைக்கப்படுபவர்) (இராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனின் காதலி)
*டாக்டர் [[எல். கைலாசம்]] பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை மலர்சோலை மங்கை என்ற நாவலாக எழுதினார். 
* பெரிய பழுவேட்டரையர் (தஞ்சை கோட்டைத்தலைவன்) அரசனுக்கு அடுத்த ஸ்தானத்தில் வலிமையான அதிகாரித்தில் இருப்பவர்
*எழுத்தாளர் அனுஷா வெங்கடேஷ் பொன்னியின் செல்வ கதை முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்வுகளை ''காவிரி மைந்தன்'' என்ற நாவலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது 
* செம்பியன் மாதேவி (கண்டராதித்த சோழனின் மனைவி) (உத்தம மதுராந்தக சோழ தேவரின் அன்னை)
* சின்ன பழுவேட்டரையர் (பெரிய பழுவேட்டரையர் சகோதரன்)
* அநிருத்த பிரமராயர் (முதன் மந்திரி)
* பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி (சேனாதிபதி) கொடும்பாளூர் அரசன்
* பூங்குழலி (ஓடக்கார பெண்) (உத்தம மதுராந்தக சோழரின் மனைவி)
* சேந்தன் அமுதன் (உத்தம மதுராந்தக சோழ தேவர்)
* போலி மதுராந்தகர் (பாண்டிய நாட்டு இளவல்- அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்)
* ரவிதாசன் (பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் - அதாவது தளபதி)
* மணிமேகலை (சம்புவரையர் இளவரசி, வந்தியதேவனை விரும்பியவள்)
* கந்தமாறன் (சம்புவரையர் இளவரசன்)
* பார்த்திபேந்திர (பல்லவன் குளம், ஆதித்த கரிகாலனின் நண்பன்)
 
== மொழிபெயர்ப்பு ==
== மொழிபெயர்ப்பு ==
பொன்னியின் செல்வன் இதுவரை மூன்று முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  
பொன்னியின் செல்வன் இதுவரை இந்திரா நீலமேகம், [[சி.வி. கார்த்திக் நாராயணன்]], [[பவித்ரா ஸ்ரீநிவாசன்]], [[வரலொட்டி ரெங்கசாமி]] ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு சுருக்கமான மொழியாக்கங்களும் உள்ளன.
 
== பிற வடிவங்கள் ==
== பிற வடிவங்கள் ==
பொன்னியின் செல்வன் ஒலிக்கோப்புகள் -  
====== வரைகலை நாவல் ======
 
* பொன்னியின் செல்வன் நாவலை முழுக்க முழுக்க 1,200 வண்ணப்படங்களுடன் 2017-ல் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
* ஓவியர் தங்கம் பொன்னியின் செல்வன் நாவலை 1,050 சித்திரங்களாக வரைந்து 10 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
[[File:மேஜிக் லாண்டர்ன் குழுவின் தயாரிப்பு.jpg|alt=நாடகத்தின் நுழைவு சீட்டு - மேஜிக் லாண்டர்ன் குழுவின் தயாரிப்பு|thumb|நாடகத்தின் நுழைவு சீட்டு - மேஜிக் லாண்டர்ன் குழுவின் தயாரிப்பு]]
====== நாடகம் ======
* பொன்னியின் செல்வன் நாவல் Magic Lantern குழுவினரால் 1999-ல் குமரவேல், பிரவீன் ஆகியோரால் நாடகமாக ஆக்கப்பட்டது.
* பொன்னியின் செல்வன் நாவலை 20-ல் சென்னையை சேர்ந்த டி.வி.கே. கல்ச்சுரல் குழுவினர் மேடை நாடகமாக தயாரித்து அரங்கேற்றியுள்ளனர். எழுதி இயக்கியவர் மல்லிக்ராஜ்
====== திரைப்படம் ======
*பொன்னியின் செல்வன் நாவலை திரைப்பட இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். அதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாறு - https://www.youtube.com/watch?v=anrnXk6MHfA
* [https://www.youtube.com/watch?v=anrnXk6MHfA எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாறு]
 
* சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
 
* [https://drbjambulingam.blogspot.com/2021/02/blog-post.html பொன்னியின் செல்வன் சித்திரக்கதை வடிவம்]
 
* [https://www.youtube.com/watch?v=O3IP57fPEk8 பொன்னியின் செல்வன் ஒலிக்கோப்பு வடிவம்] 
<nowiki>[[Category:Tamil Content]]</nowiki>
* [https://www.youtube.com/watch?v=01fHmF3fBRM பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வடிவம்]
* [https://www.youtube.com/watch?v=EJin2LeKmk4 பொன்னியின் செல்வன் நாடக வடிவம்] -
*[https://www.giriblog.com/ponniyin-selvan-book-review/ பொன்னியின் செல்வன்- அறிமுகம், கிரிபிளாக்.காம்]
* [https://tamilnadunow.com/entertainment/ponniyin-selvan-complete-story-in-four-minutes/ `பொன்னியின் செல்வன்’ நாவல் கதை என்ன... 4 நிமிடங்களில் சுருக்கமா தெரிஞ்சுக்கலாம் வாங்க! - Tamilnadu Now]
*[http://book.ponniyinselvan.in/ பொன்னியின் செல்வன் முழு நாவல்]
*[https://ponniyin-selvan-translation.blogspot.com/ பொன்னியின் செல்வன் பவித்ரா சீனிவாசன் இணையப்பக்கம்]
*http://ponniyinselvan.in/forum/discussion/1263/ps-in-english/p1
*https://www.amazon.com/Son-Ponni-New-Floods-ebook/dp/B014FVDQ8W
*[http://library.bjp.org/jspui/bitstream/123456789/1681/1/Ponniyin%20Selvan%20-%20English%20Translation%20by%20Indira%20Neelamegam.pdf http://library.bjp.org/jspui/bitstream/123456789/1681/1/PonniyinTranslationm.pdf]
*[https://zoboko.com/author/varalotti-rengasamy வரலொட்டி ரங்கசாமி- பொன்னியின் செல்வன் மொழியாக்கம்]
*[https://www.fliptamil.com/books/view/51213.ponniyin-selvan-comics-puthagam-1 பொன்னியின் செல்வன் நிலா காமிக்ஸ்]
*[https://groups.google.com/g/mintamil/c/HmI0IvdI0Uo கல்கி ஒரு சகாப்தம் கட்டுரை]
*[https://eegarai.darkbb.com/t50562-topic பொன்னியின் செல்வன் - ஓவியங்கள்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:வரலாற்று நாவல்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 10:14, 24 February 2024

To read the article in English: Ponniyin Selvan (novel). ‎

பொன்னியின் செல்வன் (நாவல்)
நந்தினி ஓவியர் மணியம்
பொன்னியின் செல்வன் தொடர்கதைச் சித்தரிப்பு
பொன்னியின் செல்வன், கல்கி அட்டை

பொன்னியின் செல்வன் (1950 – 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . 'பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது.

எழுத்தும் பதிப்பும்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் அக்டோபர் 29,1950 முதல் 1955-ம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் நான்குமுறை கல்கி வார இதழிலேயே மீண்டும் தொடராக வெளிவந்தது. டிசம்பர் 5, 1954-ல் பொன்னியின் செல்வன் வானதி பதிப்பக வெளியீடாக நூல்வடிவம் கொண்டது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின் ஏராளமான பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. பொன்னியின் செல்வனுக்கு முன் சிவகாமியின் சபதம் நாவலும் அதற்கு முன் பார்த்திபன் கனவு நாவலும் கல்கியால் எழுதப்பட்டன.

ஓவியங்கள்

பொன்னியின் செல்வன் நாவலின் வெற்றிக்கு அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் குறிப்பிடத்தக்க காரணங்களாக அமைந்தன. முதல்முறை வெளியானபோது கல்கியின் நண்பரான மணியம் ஓவியம் வரைந்தார். இந்தியச் சுவரோவிய முறையின் அழகியலை பின்பற்றி வரையப்பட்டவை மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியங்கள். கல்கி வார இதழில் ஐந்துமுறை ஓவியங்களுடன் தொடராக வந்தது..

  • 1950 - 1954 வரை மணியம் ஓவியம்.
  • 1968 - 1972 வரை வினு ஓவியம்.
  • 1978 - 1982 வரை மணியம் ஓவியம்.
  • 1998 - 2002 வரை பத்மவாசன் ஓவியம்.
  • 2014 முதல் வேதா ஓவியம்.

வரலாற்றுப் பின்னணி

பொன்னியின் செல்வன், பத்மவாசன் சித்தரிப்பு

எழுத்தாளர் கல்கி, K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும் T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை எழுதினார். இந்நாவல் நிகழும் காலம் பொ.யு. 957 முதல் 973 வரை ஆட்சி செய்த சுந்தரசோழரின் இறுதி ஆண்டுகள். இவர் அரிஞ்சய சோழருக்கும் அன்பில் பட்டயங்களில் பெயர் குறிப்பிடப்படும் அரசியான வைதும்பை நாட்டு கல்யாணிக்கும் பிறந்தவர். இவர் இரண்டாம் பராந்தக சோழர் என அழைக்கப்பட்டார். இவருடைய மகன் ஆதித்த கரிகாலன் தலைமையில் சோழர்கள் சேவூர் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் வீரபாண்டியனை தோற்கடித்து கொன்றார்கள் என லெய்டன் பட்டயங்கள், கரந்தை பட்டயங்கள், திருவாலங்காடு பட்டயங்களில் குறிப்பு உள்ளது. ஆதித்த கரிகாலன் 'வீரபாண்டியன் தலைகொண்ட’ என்னும் பெயர் பெற்றார். இப்போரில் பாண்டியர்களுக்கு ஈழ மன்னர் நான்காம் மகிந்தர் உதவி செய்தார் என இலங்கை வரலாற்று நூல் 'மகாவம்சம்' குறிப்பிடுகிறது.

ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட செய்தியை உடையார்குடி கல்வெட்டு கூறுகிறது. ஆதித்த கரிகாலனைக் கொன்ற குற்றத்திற்காக அரசன் ஆணைப்படி வேதியர் சிலருக்கு திருவீரநாராயண சதுர்வேதிமங்கலச் சபை தண்டனை அளித்ததை ராஜராஜ சோழன் பதவி ஏற்ற இரண்டாம் ஆண்டு வெளியிடப்பட்ட இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தர சோழருக்குப் பிறகு பதவியேற்ற மதுரந்தகன் முடிசூடிக்கொண்டபின்னர் உத்தமசோழன் என்னும் பெயருடன் பதினாறாண்டுகள் ஆட்சி செய்தான். அந்தப் பதினாறு ஆண்டுகளிலும் கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதில் இருந்து உத்தமசோழனே கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் அருள்மொழித் தேவர் என்னும் ராஜராஜசோழன் தன் சிறியதந்தை உத்தமசோழர் எனும் மதுராந்தகருக்கு அரசுப்பதவியை மனமுவந்து அளித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இச்செய்திகளின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் புனையப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

பொன்னியின் செல்வன் ஐந்து பகுதிகளை உடையது.

  • புதுவெள்ளம்
  • சுழற்காற்று,
பொன்னியின் செல்வன் விளம்பரம்
  • கொலைவாள்
  • மணிமகுடம்
  • தியாக சிகரம்.

கதைச்சுருக்கம்

வாணர் குல வீரனான வல்லவரையன் வந்தியத்தேவன் சோழச்சக்கரவர்த்தி சுந்தரசோழனின் மூத்த மகனான காஞ்சியிலிருக்கும் இளவரசன் ஆதித்த கரிகால சோழனிடமிருந்து தஞ்சையில் இருக்கும் சுந்தர சோழச் சக்கரவர்த்திக்கும், அவரின் மகளான பழையாறையில் இருக்கும் இளவரசி குந்தவை பிராட்டியாருக்கும் ஓர் ஓலையை கொண்டு செல்கிறான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஒரு சதி நடப்பதைக் காண்கிறான். சோழ இளவரசராக பட்டம் கட்டப்பட்ட ஆதித்த கரிகாலனை விடுத்து, சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகனான மதுராந்தகச் சோழரைச் சோழ பேரரசுக்குச் சக்கரவர்த்தியாக்க அவர்கள் எண்ணுகிறார்கள் . சுந்தர சோழ சக்கரவர்த்தியின் நண்பரும், சோழர்களுக்கு பல நூற்றாண்டுகளாகப் போர்த்தளபதிகளாக இருந்து வந்த பழுவூர் சிற்றரசர் வம்சத்தை சேர்ந்தவருமான பெரிய பழுவேட்டரையர் இந்தச் சதியை ஒருங்கிணைக்கிறார். அதில் பல சிற்றரசர்களும் தளபதிகளும் பங்குகொள்கின்றனர்.

சோழநாட்டின் முந்தைய வரலாறு இது. சுந்தர சோழரின் தந்தையான அரிஞ்சய சோழ தேவரின் இரண்டாவது மூத்த சகோதரரான கண்டராதித்தர் சிவபக்தியில் மூழ்கி வாழ்ந்தவர். கண்டராதித்தரின் மூத்த சகோதரனான இராஜாதித்தர் போரில் உயிர் துறக்கவே அடுத்த அரியணைக்கு உரியவராகக் கண்டராதித்தர் ஆனார். ஆனால், அரியணையில் அமர விருப்பம் இல்லாததாலும், போரினால் ஏற்பட்ட விளைவுகளை அவர் வெறுத்ததாலும், போரில் அனுபவசாலியான தனது இளைய சகோதரரான அரிஞ்சய சோழ தேவரைச் சக்கரவர்த்தியாகினார். அரிஞ்சய சோழரும் அடுத்த சில ஆண்டுகளில் போரில் உயிர் துறந்தவுடன் அவர் மகன் சுந்தர சோழர் அரசரானார். முறைப்படி கண்டராதித்தரின் மகனான மதுராந்தகர் ஏற வேண்டிய அரியணை அது. மதுராந்தகர் வயதில் சிறியவராக இருந்ததுடன், கண்டராதித்தரும் அவரது மனைவியுமான செம்பியன் மாதேவியும் தங்கள் மகன் அரசனாக வேண்டாமென்றும் சிவபக்தன் ஆனால் போதும் என்றும் முடிவெடுத்திருந்ததும் மதுராந்தகருக்கு பதிலாக சுந்தர சோழர் அரசர் ஆக காரணங்களாக அமைந்தன.

வந்தியத்தேவனும் குந்தவையும் (மணியம்)
பொன்னியின் செல்வன் கல்கி விளம்பரம்

மதுராந்தகர் பெரியவராகி தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அரியணைக்கு ஆசை கொண்டபோது அதுவே முறை என எண்ணிய பெரிய பழுவேட்டரையர் அவருடைய அதிகார விருப்பை ஆதரிக்கிறார். மதுராந்தகரின் மனத்திலும் அரியணை ஆசையைத் தூண்டியதும், அதற்கான சதிக்கு பின்னிருந்து இயக்கியதும் பழுவூர் இளைய ராணி என அழைக்கப்படும் நந்தினி. முதியவரான பழுவேட்டரையரை மணந்து அவரை ஆட்டிப் படைக்கும் நந்தினி பாண்டியர்களால் அரசி என நினைக்கப்படுபவள். அவளுக்கு பின்னாலிருந்து பாண்டியர்களின் ஆபத்துதவிப் படையும் அதன் தலைவனான ரவிதாசனும் இயக்குகிறார்கள். பாண்டியர்களைப் போரில் தோற்கடித்து பாண்டிய அரசனை ஆதித்த கரிகாலன் கொன்றதனால் அதற்குப் பழிவாங்க அவர்கள் எண்ணுகிறார்கள்.

வந்தியத்தேவன் குந்தவையைச் சந்தித்து அவள் காதலுக்குரியவன் ஆகிறான். ஈழநாடு சென்று ஆதித்த கரிகாலனின் தம்பி அருள்மொழிவர்மனைச் சந்தித்து சதியைப் பற்றிச் சொல்கிறான். நாடு திரும்பும் அருள்மொழிவர்மன் கப்பல் தகர்க்கப்பட்டு கடலில் மூழ்கி உயிர்தப்பி நாகை சூடாமணி விகாரத்தில் படுத்திருக்கிறான். செய்தி அறிந்து தஞ்சைக்கு திரும்பும் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் மர்மமாக கொல்லப்படுகிறான். அவனைக் கொன்றது எவர் என்னும் வினாவுடன் நீளும் நாவல் நந்தினிக்கும் ஆதித்தகரிகாலனுக்கும் இருந்த பழைய காதல், திடீரென்று காணாமலான நந்தினியை பாண்டியன் ஒளிந்திருக்கும் குகையில் அவன் மனைவியாக கண்ட ஆதித்த கரிகாலன் அவள் கண்ணெதிரே பாண்டியனை கொன்றது ஆகிய செய்திகளைச் சொல்கிறது.

வந்தியத்தேவன், (மணியம்)

நந்தினியின் பின்னணியும் அவளுக்கும் சுந்தர சோழருக்குமான உறவும் நாவலில் விரிகிறது. சேந்தன் அமுதன் என்னும் பூ கட்டும் இளைஞனுக்கும் பூங்குழலி என்னும் படகோட்டிக்கும் இடையேயான உறவு விவரிக்கப்படுகிறது. நாவல் பல முடிச்சுகளை அவிழ்த்துச் சென்று மதுராந்தகன் உண்மையில் கண்டராதித்தரின் மகன் அல்ல, சேந்தன் அமுதனே அந்த மகன் எனக் காட்டுகிறது. எதிரிகளை வென்று, சதிகளை அவிழ்த்து, நாட்டை உரிமை கொள்ளும் அருள்மொழிவர்மனே முடிசூட வேண்டுமென அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால் அருள்மொழிவர்மன் குலமுறைப்படி மதுராந்தகனாகிய சேந்தன் அமுதனே அரசன் ஆகவேண்டும் என்று சொல்லி மணிமுடியை தியாகம் செய்கிறான். வந்தியத்தேவன் குந்தவையை மணக்கிறான். அருள்மொழிவர்மன் வானதியை மணக்கிறான் பின்னாளில் அருள்மொழிவர்மன், ராஜராஜ சோழன் என்ற பெயருடன் சோழ மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என நாவல் கூறிமுடிகிறது.

கதைமாந்தர்கள்

  • அருள்மொழிவர்மன் - ராஜராஜ சோழன்
  • வல்லவரையன் வந்தியத்தேவன் - ராஜராஜ சோழனின் நண்பன்
  • குந்தவை - அருள்மொழிவர்மனின் தமக்கை
  • நந்தினி - பழுவூர் இளைய ராணி, பெரிய பழுவேட்டரையரின் இளைய மனைவி
  • ஆதித்த கரிகாலன் - ராஜராஜ சோழனின் சகோதரர்
  • வானதி - கொடும்பாளூர் இளவரசி. ராஜராஜ சோழனின் முதல் மனைவி
  • ஆழ்வார்க்கடியான் - உளவு பார்ப்பவர். வீரவைணவர், அநிருத்த பிரம்மராயரின் பணியாள்.
  • மந்தாகினி - வாய்பேச இயலாமையால் ஊமைராணி என்றழைக்கப்படுபவர். ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழரின் காதலி
  • பெரிய பழுவேட்டரையர் - தஞ்சை கோட்டைத்தலைவர். அரசருக்கு அடுத்த இடத்தில் வலிமையான அதிகாரத்தில் இருப்பவர்
  • செம்பியன் மாதேவி - கண்டராதித்த சோழனின் மனைவி. உத்தம மதுராந்தக சோழ தேவரின் அன்னை
  • சின்ன பழுவேட்டரையர் - பெரிய பழுவேட்டரையரின் தம்பி.
  • அநிருத்த பிரம்மராயர் - சுந்தரசோழரின் முதலமைச்சர், பின்னர் ராஜராஜ சோழனுக்கும் ஆசிரியர்.
  • பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி - சேனாதிபதி. கொடும்பாளூர் அரசர்
  • பூங்குழலி - ஓடக்காரப் பெண். உத்தம மதுராந்தக சோழரின் பிற்கால மனைவி
  • சேந்தன் அமுதன் - உத்தம மதுராந்தக சோழ தேவர்
  • போலி மதுராந்தகர் - பாண்டிய நாட்டு இளவல். அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்
  • ரவிதாசன் - பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுள் ஒருவர் (தளபதி)
  • கந்தமாறன் - சம்புவரையர் குலத்து இளவரசன்,வந்தியத் தேவனின் நண்பன்
  • மணிமேகலை - சம்புவரையர் குலத்து இளவரசி. கந்தமாறனின் தங்கை, வந்தியத்தேவனை விரும்பியவள்
  • பார்த்திபேந்திரன் - பல்லவ குலத்தவன். ஆதித்த கரிகாலனின் நண்பன்

இலக்கியச் செல்வாக்கு

பொன்னியின் செல்வன் அலெக்ஸாண்டர் டூமாவின் திரீ மஸ்கட்டீர்ஸ் ( The Three Musketeers ) நாவலின் வலுவான செல்வாக்கு கொண்ட படைப்பு. வந்தியத்தேவனில் டி ஆர்ட்டக்னான் ( D'Artagnan), நந்தினியில் மிலாடி டி விண்டர் ( Milady de Winter ) ஆகியோரின் சாயல் அழுத்தமாக உண்டு. ஆனால் நேரடித் தழுவலோ, இலக்கியத் திருட்டோ அல்ல. சோழர்களின் வரலாற்றுப் பின்னணியிலும், அக்கால பண்பாட்டுப் பின்னணியிலும் நாவலைத் தெளிவாகக் கட்டமைக்க ஆசிரியரால் இயன்றுள்ளது. இந்திய மொழிகளின் தொடக்ககால வரலாற்றுநாவலாசிரியர்கள் பெரும்பாலும் அனைவருமே அந்த புனைவுக்கட்டமைப்பை அலக்ஸாண்டர் டூமா, லிட்டன்பிரபு, புஷ்கின் மற்றும் வால்டர் ஸ்காட் ஆகியோரிடமிருந்தே எடுத்துக்கொண்டனர்.

இலக்கிய இடம்

பொன்னியின் செல்வன் மகாபாரதத்தின் சாயல் கொண்ட நாவல். மகாபாரதத்தில் பீஷ்மர் நியாயம், அறம் ஆகியவற்றுக்கும் மேலாக குலவரிசையை முன்வைப்பவர். அதே பார்வை கொண்ட பெரிய பழுவேட்டரையர் பீஷ்ம பிதாமகர் போலவே இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளார். யுதிஷ்டிரரின் குணச்சித்திரம் அருண்மொழி வர்மனுக்கு உள்ளது. (சிவகாமியின் சபதம் ராமாயணச் சாயல் கொண்டது) இந்த இதிகாசச்சாயம் இந்நாவலை தமிழ் மனங்களில் ஆழமாக நிலைநிறுத்துகிறது.

மிக இளமையிலேயே வாசிக்கத்தக்க எளிமையான மொழி கொண்ட நாவல். எதிர்மறைப் பண்புகள் அற்றதும் உயர்மனநிலைகளை உருவாக்குவதுமான படைப்பு. காமம் மிகை வன்முறை போன்றவை அற்றது. எனவே இறுதிவரை நல்ல வாசிப்பின்பத்தை அளிக்கிறது. கதாபாத்திரங்கள் சாகச நாவல்களுக்குரிய மிகை இல்லாமல் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வீரதீரச்செயல்கள், போர்கள் ஆகியவை மிகையாக காட்டப்படவில்லை. பெரும்பாலும் தனிமனித உணர்வுகள் மற்றும் அரண்மனைச் சதிகள் வழியாகவே கதை செல்கிறது. தமிழகத்தின் பொற்காலம் எனப்படும் காலகட்டத்தையும், அதன் தலைமை ஆளுமை எனப்படும் ராஜராஜ சோழனின் இளமையையும் காட்டுவதனால் முக்கியமான படைப்பாக ஆகிறது. இலக்கிய வகைமையில் வரலாற்றுக் கற்பனாவாதக் கதை என வரையறுக்கப்படுகிறது.

இலக்கியத் தொடர்ச்சிகள்

பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக ராஜராஜ சோழனை முன்வைத்து பல படைப்புகள் எழுதப்பட்டுள்ளன.

  • விக்ரமன் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக நந்திபுரத்து நாயகி என்னும் நாவலை எழுதினார்.
  • அரு.ராமநாதன் "ராஜராஜ சோழன்" என்னும் நாடகத்தை எழுதினார்.
  • பாலகுமாரன் "உடையார்" என்னும் பெருநாவலை எழுதினார்.
  • சாண்டில்யன் எழுதிய மன்னன் மகள் ராஜேந்திர சோழனின் காலகட்டத்தைச் சித்தரிக்கிறது. அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரமாக வருகிறார்.
  • டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை மலர்சோலை மங்கை என்ற நாவலாக எழுதினார்.
  • எழுத்தாளர் அனுஷா வெங்கடேஷ் பொன்னியின் செல்வ கதை முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்வுகளை காவிரி மைந்தன் என்ற நாவலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது

மொழிபெயர்ப்பு

பொன்னியின் செல்வன் இதுவரை இந்திரா நீலமேகம், சி.வி. கார்த்திக் நாராயணன், பவித்ரா ஸ்ரீநிவாசன், வரலொட்டி ரெங்கசாமி ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு சுருக்கமான மொழியாக்கங்களும் உள்ளன.

பிற வடிவங்கள்

வரைகலை நாவல்
  • பொன்னியின் செல்வன் நாவலை முழுக்க முழுக்க 1,200 வண்ணப்படங்களுடன் 2017-ல் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • ஓவியர் தங்கம் பொன்னியின் செல்வன் நாவலை 1,050 சித்திரங்களாக வரைந்து 10 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
நாடகத்தின் நுழைவு சீட்டு - மேஜிக் லாண்டர்ன் குழுவின் தயாரிப்பு
நாடகத்தின் நுழைவு சீட்டு - மேஜிக் லாண்டர்ன் குழுவின் தயாரிப்பு
நாடகம்
  • பொன்னியின் செல்வன் நாவல் Magic Lantern குழுவினரால் 1999-ல் குமரவேல், பிரவீன் ஆகியோரால் நாடகமாக ஆக்கப்பட்டது.
  • பொன்னியின் செல்வன் நாவலை 20-ல் சென்னையை சேர்ந்த டி.வி.கே. கல்ச்சுரல் குழுவினர் மேடை நாடகமாக தயாரித்து அரங்கேற்றியுள்ளனர். எழுதி இயக்கியவர் மல்லிக்ராஜ்
திரைப்படம்
  • பொன்னியின் செல்வன் நாவலை திரைப்பட இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். அதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page