under review

பிரயாகை (வெண்முரசு நாவலின் ஐந்தாம் பகுதி): Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
No edit summary
 
(17 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
 
[[File:51Qmr33tGeL.jpg|thumb|பிரயாகை ('வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதி)]]
[[File:51Qmr33tGeL.jpg|thumb|'''பிரயாகை''' (‘வெண்முரசு’ நாவலின் ஐந்தாம் பகுதி)]]
பிரயாகை<ref>[https://venmurasu.in/prayagai/chapter-1 வெண்முரசு - பிரயாகை - 1 - வெண்முரசு (venmurasu.in)]</ref> ('[[வெண்முரசு]]' நாவலின் ஐந்தாம் பகுதி) துரோணர் தன் சீடர்களிடம் குருதட்சிணை கேட்பதில் தொடங்குகிறது. அவர் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப் பிடிக்கின்றனர். இளைய யாதவர் (ஸ்ரீகிருஷ்ணர்) தன் நாட்டினை மீட்பதற்காக தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறார். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் 'பிரயாகை' நிறைவுறுகிறது.  
 
'''பிரயாகை'''<ref>[https://venmurasu.in/prayagai/chapter-1 வெண்முரசு - பிரயாகை - 1 - வெண்முரசு (venmurasu.in)]</ref> (‘[[வெண்முரசு]]’ நாவலின் ஐந்தாம் பகுதி) துரோணர் தன் சீடர்களிடம் குருதட்சிணை கேட்பதில் தொடங்குகிறது. அவரின் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப் பிடிக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் (இளைய யாதவர்) தன் நாட்டினை மீட்பதற்காகத் தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறார். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் ‘பிரயாகை’ நிறைவுறுகிறது.  
 
== பதிப்பு ==
== பதிப்பு ==
====== இணையப் பதிப்பு ======
====== இணையப் பதிப்பு ======
‘வெண்முரசு’ நாவலின் ஐந்தாம் பகுதியான ‘பிரயாகை’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் அக்டோபர் 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜனவரி 2015-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
'வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதியான 'பிரயாகை' எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் அக்டோபர் 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜனவரி 2015-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
 
====== அச்சுப் பதிப்பு ======
====== அச்சுப் பதிப்பு ======
கிழக்கு பதிப்பகம் பிரயாகையை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
கிழக்கு பதிப்பகம் பிரயாகையை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் [[ஜெயமோகன்]]. இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
'வெண்முரசு' நாவலை எழுதியவர் எழுத்தாளர் [[ஜெயமோகன்]]. இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
 
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
இளைய யாதவர் (ஸ்ரீகிருஷ்ணர்), பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை எனப் பேராற்றல் மிக்கவர்கள் தம்மைத் தாமே வெளிப்படுத்திக்கொள்ளும் இடமாகவும் தம்மை ஒத்த பிறரின் வலிமையை உணர்ந்துகொள்ளும் இடமாகவும் இந்த ‘பிரயாகை’ அமைந்துள்ளது.
இளைய யாதவர் (ஸ்ரீகிருஷ்ணர்), பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை என பேராற்றல் மிக்கவர்கள் தம்மைத் தாமே வெளிப்படுத்திக்கொள்ளும் இடமாகவும் தம்மை ஒத்த பிறரின் வலிமையை உணர்ந்துகொள்ளும் இடமாகவும் 'பிரயாகை' நாவல் அமைந்துள்ளது.
 
துரோணர் கேட்கும் குருதட்சணையை வழங்குவதற்கான பாண்டவர்கள் களம் இறங்கிய முதற்போரில் வெல்வது துருபதனை மட்டுமல்ல; கௌரவர்களையும்தான்! கௌரவர்களை முன்செல்ல வைத்து, அவர்கள் போரில் தோற்கும் நிலை ஏற்படும்போது, பாண்டவர்கள் சென்று, கௌரவர்களைக் காப்பாற்றுவதன் வழியாகவே அவர்கள் கௌரவர்களையும் துருபதனையும் வென்றுவிடுகின்றனர்.  போரில் துருபதனை வென்றவுடன் யார் சொல்லுக்கும் செவிமடுக்காமல், அவனைத் தன் தேர்ச்சக்கரத்தில் கட்டி இழுத்து வரும் அர்சுணன். பாண்டவர்கள் சௌவீரநாட்டு மன்னனை வென்று அவனுடைய மணிமுடியைத் (பறவை இறகுகளால் ஆனது) தன் தாய் குந்தியின் தலையில் சூட்டி மகிழ்தல்.  இளைய யாதவருக்கும் குந்திக்கும் இடையே நிகழும் உரையாடல்கள். இளைய யாதவருக்கும் விதுரருக்கும் இடையில் நிகழும் முதல் சொல்லுரசல்.  இளைய யாதவரின் படைவியூகத்திறமை. அவர் தன்னுடைய தொடர்ச்சியான திட்டங்களால் மிகத் திறமையாகவும் விரைவாகவும் மதுராவை வெற்றிகொள்தல். பீமனுக்கும் இடும்பனுக்கும் இடையே நடக்கும் கடும் தனிப்போர். கடோத்கஜனின் அதீத வளர்ச்சி கண்டு வியக்கும் பீமனின் மனநிலை. கர்ணனின் முதற்போரைக் கண்டு அவனைத் தன் மனத்தளவில் போற்றும் அர்சுணன். ஏகலவ்யனின் வீரமும் ஆட்சியாளுமையும் குறிப்பிடத்தக்கவை. யாதவர்களை அவன் தொடர்ந்து விரட்டியடிக்கிறான். குந்தியிடம் குடிகொண்டுவிடும் பேரரசிக்குரிய தோரணை, திரௌபதையின் நிமிர்வு. அம்பெய்து ஐந்து மரப்பறவைகளையும் வீழ்த்தி, திரௌபதையை அடையும் அர்சுணன்.  இந்தக் காட்சிகளின் சித்தரிப்புகளின் வழியாக எழுத்தாளர் ஜெயமோகன் இளைய யாதவர், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை ஆகியோரின் அக, புற வலிமைகளை மிகச் சரியாக நிறுவியுள்ளார்.
 
துரோணர், சகுனி, விதுரர், இடும்பன், காந்தாரி, துரியோதனன், துச்சாதனன் ஆகியோரிடம் பேராற்றல் குறைவாகவே உள்ளது என்பதைக் காட்டுவதற்காகவே நாடகீய அடிப்படையில், சில நிகழ்வுகளை உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.
 
துரோணரின் காலடியில் துருபதனைப் பணிய வைக்கிறான் அர்சுணன். அப்போது துரோணரின் முகத்தில் ஏற்படும் புன்னகை அர்சுணனின் மனத்திற்குள் ஒரு நெருடலை உண்டாக்குகிறது. இதுநாள் வரை அர்சுணன் தன் குருவின் மீது கொண்ட தீராப் பற்றினை ஒரு கணப்பொழுதில் அது துடைத்தெடுத்துவிடுகிறது. அர்சுணனின் பார்வையில் துரோணர் பலபடிகள் கீழிறங்கிவிடுகிறார். தன் குருவின் ஆளுமையின் மீது அர்சுணன் கொண்டிருந்த பெருமயக்கம் தெளிவடைகிறது. அந்தத் திடீர்த் தெளிவை ஏற்றுக்கொள்ளாத அர்சுணனின் மனம் அலையாடுகிறது.  துருபதனைப் பழிவாங்கும் பெருஞ்சினத்தின் வழியாகத் துரோணர் தன் பேராற்றலை நழுவவிட்டுவிட்டார்.
 
‘சகுனியின் ஆற்றல்’ என்பது, ஒருபோதும் பேராற்றலாக உருவெடுக்க முடியாதது என்பதனை நாம் அவன் அஸ்தினபுரியை விட்டுத் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் பயணத்தின் வழியாக அறிய முடிகிறது. போரில் தோற்றுத் திரும்பும் முதுவீரனின் மனநிலையோடுதான் சகுனி தன் நாட்டுக்குத் திரும்புகிறான். மாபெரும் கனவோடு அஸ்தினபுரியில் இத்தனை ஆண்டுகாலம் தங்கியிருந்த சகுனி, இனித் தன் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்ற மனநிலைக்கு வந்த பின்னரே தன் நாட்டுக்குத் திரும்புகிறான். சகுனியிடம் நிறைந்திருப்பது சூது நிறைந்த சொல்லாற்றல் மட்டும்தான். அவர் தன்னுடைய பாதிப் பயணத்தில் பயணத்தைக் கைவிட்டு, மீண்டும் அஸ்தினபுரிக்குத் திரும்ப நினைக்கிறார். அப்போது அவருக்குக் கிடைப்பவர் கணிகர். கணிகரின் உள்ளமே சூதால் ஆனதுதான். சூதால் பெருகிய சொல்லாற்றல் கொண்டவர் கணிகர். அவர் சகுனியின் ‘சிந்தனைத்துணை’யாக அமைவது, சகுனியின் சொல்லாற்றலுக்கு ஒரு ‘துணைச்சொல்’லாகவே அமைகிறது.
 
இளைய யாதவரிடம் விதுரர், “என் ஆணையில்லாமல் அஸ்தினபுரியின் படை புறப்படாது” என்று கூறுகிறார். எந்த நாட்டிலும் அமைச்சரின் ஆணையை ஏற்று படை புறப்படுவதில்லை. இதை உணராமல் தன் மீதும் தன் நாடு தனக்களித்திருக்கும் அதிகாரத்தின் மீதும் நம்பிக்கைகொண்டே, விதுரர் இவ்வாறு பேசிவிடுகிறார். அதனால்தான், இளைய யாதவர் தன்னிடம் யாதவ அரசி குந்தியின் முத்திரையிட்ட ஓலை இருப்பதாகக் கூறி, “அஸ்தினபுரியின் படை புறப்பட உங்களின் அனுமதி தேவையில்லை” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். விதுரர் நிலைகுலைந்து போவதும் இந்தத் தருணத்தில்தான். விதுரரின் பேராற்றலின்மை வெளிப்படும் புள்ளி இந்த இடம்தான். அதிலிருந்து அவரால் மீளவே முடிவதில்லை.
 
துரியோதனன் பலராமரிடம் செல்வதும் கர்ணன் பரசுராமரிடம் செல்வதும் தம்முடைய ஆற்றலைப் பேராற்றலாக வளர்த்துக்கொள்வதற்கே. அவர்களுக்கு லட்சியமே தம் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டே இருப்பதுதான். நிறைவுபெற்ற, முழுமையுற்ற பேராற்றலைப் பெறவே அவர்கள் விழைகின்றனர். துரியோதனன் பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் உதவ அஸ்தினபுரியின் படையைக் கொண்டு வருவதாக உறுதியளிப்பதும் அது முடியாததால் தலைகுனிவதும் அவனின் பேராற்றலின்மையையே வெளிப்படுத்துகிறது. 
 
கர்ணனின் மடியில் பரசுராமர் துயிலும் போது, கர்ணன் தன் தொடையைத் துளைக்கத் துணிந்த வண்டிடம் தன்னுடைய மன, உடல் உறுதிகளை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், அவன் பரசுராமரின் சினத்திற்கு ஆளாக நேர்ந்திருக்காது. அவன் தன்னை ஒவ்வொரு கணமும் சத்திரியன் என்றே நினைத்ததால்தான், அவனால், வண்டு ஏற்படுத்திய வலியைத் தாங்கிக்கொள்ள நேர்ந்தது. அதுவே, அவனைச் ‘சத்திரியன்’ என்று நிறுவிவிட்டது. அதனால்தான் பரசுராமர் அவனைச் சபித்தார்.
 
பீமனுக்கும் இடும்பனுக்கும் இடையிலான கொல்போரில் இறுதித் தருணத்தில் பீமன் தோற்கும் நிலை ஏற்படும்போது, அனுமனின் அருள் ஒரு குரங்கின் வழியாகப் பீமனுக்குக் கிடைக்கிறது. ‘வலுகுறைந்த மெல்லிய கிளைகளில் மட்டும் ஏறிச் செல்’ என்று அந்தக் குரங்கு தன்மொழியில் கூறுகிறது. அதனைச் செயல்படுத்துவதன் வழியாகவே பீமனால் இடும்பனைச் சரிக்க முடிகிறது. இடும்பனின் பேராற்றல் நிலைகொள்ள இயலாமல் போவது வலுகுறைந்த கிளைகளில்தான்.

பாரதவர்ஷத்தின் சிறந்த வில்லாளிகளுள் ஒருவனாகத் தன்னைத் தன் விற்திறத்தின் பேராற்றலாலேயே நிறுவிக் கொண்டுவிட்டான் ஏகலவ்யன். இளைய யாதவரால் மதுரா தாக்கப்படும்போதும்கூட யாராலும் ஏகலவ்யனைக் கொல்ல முடியவில்லை. ஏகலவ்யன் தப்பிவிடுகிறான்.
துரோணர் கேட்கும் குருதட்சணையை வழங்குவதற்கான பாண்டவர்கள் களம் இறங்கிய முதற்போரில் பாண்டவர்கள் சென்று கௌரவர்களைக் காப்பாற்றுவதன் வழியாக அவர்கள் கௌரவர்களையும் துருபதனையும் வெல்வதும்,  போரில் துருபதனை வென்றவுடன் யார் சொல்லுக்கும் செவிமடுக்காமல், அவனைத் தன் தேர்ச்சக்கரத்தில் கட்டி இழுத்து அர்ஜுனன் இழுத்து வருவதும், பாண்டவர்கள் சௌவீரநாட்டு மன்னனை வென்று அவனுடைய மணிமுடியை குந்தியின் தலையில் சூட்டி மகிழ்தலும் பிரயாகையில் விரிவான சம்பவங்களாகப் பேசப்படுகின்றன. இளைய யாதவருக்கும் குந்திக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், இளைய யாதவருக்கும் விதுரருக்கும் இடையில் நிகழும் முதல் சொல்லுரசல், இளைய யாதவரின் படைவியூகத்திறமை, அவர் தன்னுடைய தொடர்ச்சியான திட்டங்களால் மிகத் திறமையாகவும் விரைவாகவும் மதுராவை வெற்றிகொள்தல் என இளைய யாதவரின் அரசியல் நுழைவும் பிரயாகையில் விரிவாகப் பேசப்படுகிறது.  

அஸ்தினபுரியின் அரியணையைப் பாண்டுவுக்குப் பெற்றுத் தந்ததில் பெரும்பங்கு வகித்தது விதுரரின் வாக்குத் திறமை என்றால், பாண்டுவுக்கு உரிய அரியணையைத் தருமனுக்குப் பெற்றுத்தருவது குந்தியின் வாக்குத் திறமையே!  விதுரரும் திருதராஷ்டிரனின் உளநிலையை அறிந்தே அவ்வாறு பேசி, பாண்டுவுக்கு அரியணையைப் பெற்றுத் தந்தார். குந்தியும் திருதராஷ்டிரனின் உளநிலையை அறிந்தே இவ்வாறு பேசி, தருமனுக்கு அரியணையைப் பெற்றுத் தருகிறார். தன் வாக்குத்திறத்தால் பேராற்றல் கொண்ட சக்கரவர்த்தினியாகக் குந்தி நிலைகொள்கிறார்.  
பீமனுக்கும் இடும்பனுக்கும் இடையே நடக்கும் கடும் தனிப்போர், பீமன் இடும்பியை மணப்பது, கடோத்கஜனின் குழந்தைப் பருவமும் , வளர்ச்சியும் என பாண்டவர்கள் மணவாழ்வின் துவக்கம் பிரயாகையில் காட்டப்படுகிறது. கர்ணனின் முதற்போரைக் கண்டு அவனைத் தன் மனத்தளவில் வியக்கும் அர்ஜுனன், தொடர்ந்து யாதவர்களை விரட்டியடிக்கும் ஏகலவ்யனின் வீரமும் ஆட்சியாளுமையும் பிரயாகை நாவலில் காட்டப்படுகின்றன.  

திரௌபதியின் மணத்தன்னேற்பு விழாவில் நிர்ணயிக்கப்பட்ட பந்தையத்தில் இளைய யாதவரும் கலந்துகொள்கிறான். ‘அவரால் மட்டுமே இனி இந்தப் போட்டியில் வெல்ல முடியும்’ என்று அனைவரும் நினைத்திருக்கும் தருணத்தில், ஐந்தாவது மரப்பறவையின் மீது மட்டும் அம்பினை எய்யாமல், அழியா ஊழின் பெருவழியை உய்த்துணர்ந்து, தன்னுடைய வில்லைத் தாழ்த்திக்கொள்வது இளைய யாதவரின் உலகாளும் பேராற்றலன்றி வேறு என்ன?
குந்தியிடம் குடிகொண்டுவிடும் பேரரசிக்குரிய தோரணை, திரௌபதையின் நிமிர்வு. அம்பெய்து ஐந்து மரப்பறவைகளையும் வீழ்த்தி, திரௌபதையை அடையும் அர்ஜூனன். இந்தக் காட்சிகளின் சித்தரிப்புகள் வழியாக நாவல் இளைய யாதவர், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை ஆகியோரின் அக, புற வலிமைகளை விவரிக்கிறது.

திரௌபதியின் மனத்தைத் தன் பக்கம் ஈர்க்க பீமன்னுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. திரௌபதையின் அணித்தேரைத் தன் உடல் வலுவாலேயே பீமன் இழுத்துச் செல்கிறார். பீமன், திரௌபதியிடம், ‘‘தாங்கள் ஆணையிட்டால் என்னால் அணித்தேரைச் சுமந்துவரவும் முடியும்” என்று இயல்பாகக் கூறுவது, பீமன் அடைந்திருக்கும் பேராற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது.  
துரோணரின் வஞ்சத்தை நேரில்கண்டு அவரிடம் மெல்லிய விலக்கம் அடைவது, விற்திறனால் திரெளபதியின் மணத்தன்னேற்பில் வெல்வது என அர்ஜுனன் அடையும் மாற்றங்களும் பிரயாகையில் பேசப்படுகின்றன. சூதால் பெருகிய சொல்லாற்றல் கொண்ட கணிகர் சகுனியின் 'சிந்தனைத்துணை'யாக அமைவது பிரயாகையில் விவரிக்கப்படுகிறது.  

திரௌபதி பாஞ்சாலத்தின் தொல்குல வழக்கத்தின் அடிப்படையில், தானும் ஐந்து கணவர்களை அடையவே விரும்புகிறாள். அதை அவள் தன் தாயிடம் கூறவும் செய்கிறாள். ‘ஐந்து விதமான தனித்திறன் கொண்டவர்களைக் கணவர்களாக அடைவதன் வழியாகத்தான் தான் பேராற்றல் மிக்கவளாகத் திகழ முடியும்’ என்று நம்புகிறாள்.  திரௌபதியின் இந்த முடிவுக்கு ஒத்த முறையில்தான் குந்தியின் பெருந்திட்டமும் இருப்பதால், அவளுக்கு இவ்வாறு திரௌபதி ஐவரைக் கணவர்களாக அடைவதில் எந்தத் தடையும் ஏற்படவில்லை.  திரௌபதி தன்னை நெருப்பாகவே ஒவ்வொரு கணமும் கருதுகிறாள். அந்த நெருப்பை அணையவிடாமல், அதற்குத் தொடர்ந்து தீனியிடும் பெரும்பொருட்களாகவே பாண்டவர் ஐவரையும் கருதுகிறாள். ‘அவர்களின் பேராற்றலால்தான் தன்னுடைய பெருநெருப்பு தொடர்ந்து எரிய முடியும்’ என்று நினைக்கிறாள். தன்னுடைய பெருநெருப்பு எரிவதே தன்னுடைய ‘பேராற்றல்’ என்று அவள் கருதுகிறாள்.
துரியோதனன் பலராமரிடம் போர்க்கலை பயிலச் செல்வதும் கர்ணன் பரசுராமரிடம் போர்க்கலை பயிலச் செல்வதும் அந்த சூழலின்போது நிகழ்பவையும் நாவலில் விரிவாகக் காட்டப்படுகின்றன.  
 
பேராற்றல் நிறைந்தவர்களுக்கும் பேராற்றல் குறைந்தவர்களுக்கும் இடையில் நிகழும் உடல், மனப் போராட்டங்களாகவே ‘பிரயாகை’ விரிந்துள்ளது.  

பேராற்றல் நிறைந்தவர்களுக்கும் அவர்தம் போட்டியாளர்களுக்குமிடையே இடையில் நிகழும் நிலைப்பாடுகளுக்கான களங்களும், சம்பவங்களுமாக 'பிரயாகை' விரிந்துள்ளது.
== கதை மாந்தர் ==
== கதை மாந்தர் ==
இளைய யாதவர், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் துரோணர், சகுனி, விதுரர், இடும்பன், காந்தாரி, துரியோதனன், துச்சாதனன், பலராமர், பரசுராமர் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://venmurasudiscussions.blogspot.com/ வெண்முரசு விவாதங்கள் (venmurasudiscussions.blogspot.com)]
* [https://venmurasudiscussions.blogspot.com/ வெண்முரசு விவாதங்கள் (venmurasudiscussions.blogspot.com)]
* [https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]

*[https://www.jeyamohan.in/144790/ ‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
*[https://www.jeyamohan.in/144790/ 'பிரயாகை' வாசிப்பு- முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
== அடிக்குறிப்புகள் ==
<references />
 
{{Finalised}}
 
{{Fndt|24-Dec-2022, 08:38:33 IST}}

== இணைப்புகள் ==
<references />
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:40, 12 October 2026

பிரயாகை ('வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதி)

பிரயாகை[1] ('வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதி) துரோணர் தன் சீடர்களிடம் குருதட்சிணை கேட்பதில் தொடங்குகிறது. அவர் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப் பிடிக்கின்றனர். இளைய யாதவர் (ஸ்ரீகிருஷ்ணர்) தன் நாட்டினை மீட்பதற்காக தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறார். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் 'பிரயாகை' நிறைவுறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதியான 'பிரயாகை' எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் அக்டோபர் 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜனவரி 2015-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் பிரயாகையை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

'வெண்முரசு' நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

இளைய யாதவர் (ஸ்ரீகிருஷ்ணர்), பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை என பேராற்றல் மிக்கவர்கள் தம்மைத் தாமே வெளிப்படுத்திக்கொள்ளும் இடமாகவும் தம்மை ஒத்த பிறரின் வலிமையை உணர்ந்துகொள்ளும் இடமாகவும் 'பிரயாகை' நாவல் அமைந்துள்ளது.

துரோணர் கேட்கும் குருதட்சணையை வழங்குவதற்கான பாண்டவர்கள் களம் இறங்கிய முதற்போரில் பாண்டவர்கள் சென்று கௌரவர்களைக் காப்பாற்றுவதன் வழியாக அவர்கள் கௌரவர்களையும் துருபதனையும் வெல்வதும், போரில் துருபதனை வென்றவுடன் யார் சொல்லுக்கும் செவிமடுக்காமல், அவனைத் தன் தேர்ச்சக்கரத்தில் கட்டி இழுத்து அர்ஜுனன் இழுத்து வருவதும், பாண்டவர்கள் சௌவீரநாட்டு மன்னனை வென்று அவனுடைய மணிமுடியை குந்தியின் தலையில் சூட்டி மகிழ்தலும் பிரயாகையில் விரிவான சம்பவங்களாகப் பேசப்படுகின்றன. இளைய யாதவருக்கும் குந்திக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், இளைய யாதவருக்கும் விதுரருக்கும் இடையில் நிகழும் முதல் சொல்லுரசல், இளைய யாதவரின் படைவியூகத்திறமை, அவர் தன்னுடைய தொடர்ச்சியான திட்டங்களால் மிகத் திறமையாகவும் விரைவாகவும் மதுராவை வெற்றிகொள்தல் என இளைய யாதவரின் அரசியல் நுழைவும் பிரயாகையில் விரிவாகப் பேசப்படுகிறது.

பீமனுக்கும் இடும்பனுக்கும் இடையே நடக்கும் கடும் தனிப்போர், பீமன் இடும்பியை மணப்பது, கடோத்கஜனின் குழந்தைப் பருவமும் , வளர்ச்சியும் என பாண்டவர்கள் மணவாழ்வின் துவக்கம் பிரயாகையில் காட்டப்படுகிறது. கர்ணனின் முதற்போரைக் கண்டு அவனைத் தன் மனத்தளவில் வியக்கும் அர்ஜுனன், தொடர்ந்து யாதவர்களை விரட்டியடிக்கும் ஏகலவ்யனின் வீரமும் ஆட்சியாளுமையும் பிரயாகை நாவலில் காட்டப்படுகின்றன.

குந்தியிடம் குடிகொண்டுவிடும் பேரரசிக்குரிய தோரணை, திரௌபதையின் நிமிர்வு. அம்பெய்து ஐந்து மரப்பறவைகளையும் வீழ்த்தி, திரௌபதையை அடையும் அர்ஜூனன். இந்தக் காட்சிகளின் சித்தரிப்புகள் வழியாக நாவல் இளைய யாதவர், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை ஆகியோரின் அக, புற வலிமைகளை விவரிக்கிறது.

துரோணரின் வஞ்சத்தை நேரில்கண்டு அவரிடம் மெல்லிய விலக்கம் அடைவது, விற்திறனால் திரெளபதியின் மணத்தன்னேற்பில் வெல்வது என அர்ஜுனன் அடையும் மாற்றங்களும் பிரயாகையில் பேசப்படுகின்றன. சூதால் பெருகிய சொல்லாற்றல் கொண்ட கணிகர் சகுனியின் 'சிந்தனைத்துணை'யாக அமைவது பிரயாகையில் விவரிக்கப்படுகிறது.

துரியோதனன் பலராமரிடம் போர்க்கலை பயிலச் செல்வதும் கர்ணன் பரசுராமரிடம் போர்க்கலை பயிலச் செல்வதும் அந்த சூழலின்போது நிகழ்பவையும் நாவலில் விரிவாகக் காட்டப்படுகின்றன.

பேராற்றல் நிறைந்தவர்களுக்கும் அவர்தம் போட்டியாளர்களுக்குமிடையே இடையில் நிகழும் நிலைப்பாடுகளுக்கான களங்களும், சம்பவங்களுமாக 'பிரயாகை' விரிந்துள்ளது.

கதை மாந்தர்

இளைய யாதவர், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் துரோணர், சகுனி, விதுரர், இடும்பன், காந்தாரி, துரியோதனன், துச்சாதனன், பலராமர், பரசுராமர் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2022, 08:38:33 IST