under review

சூ. இன்னாசி: Difference between revisions

From Tamil Wiki
(→‎பிறப்பு, கல்வி: படம் சேர்க்கப்பட்டது.)
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 21: Line 21:
சூ. இன்னாசி, பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அவற்றில் சில முதல் பதிப்புகளாகவும் வேறு சில மறுபதிப்புகளாகவும் உருவாக்கம் பெற்றன.
சூ. இன்னாசி, பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அவற்றில் சில முதல் பதிப்புகளாகவும் வேறு சில மறுபதிப்புகளாகவும் உருவாக்கம் பெற்றன.
== விருதுகள் ==
== விருதுகள் ==
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு - திருத்தொண்டர் காப்பியம் நூலுக்காக மரபுக்கவிதை வகைமையில்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு - திருத்தொண்டர் காப்பியம் நூலுக்காக மரபுக்கவிதை வகைமையில்.
== மறைவு ==
== மறைவு ==
சூ. இன்னாசி, அக்டோபர் 6, 2010-ல், தனது 76 ஆம் வயதில் காலமானார்.  
சூ. இன்னாசி, அக்டோபர் 6, 2010-ல், தனது 76-ம் வயதில் காலமானார்.  
== நினைவு ==
== நினைவு ==
சூ. இன்னாசியின் நினைவாக அவர் பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது. அதன் மூலம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெறுகின்றன.  
சூ. இன்னாசியின் நினைவாக அவர் பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது. அதன் மூலம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெறுகின்றன.  
Line 127: Line 127:
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0002619_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D.pdf தேம்பாவணித் திறன் சூ. இன்னாசி இணையநூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0002619_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D.pdf தேம்பாவணித் திறன் சூ. இன்னாசி இணையநூலகம்]
*[https://rssairam.blogspot.com/2012/08/1876.html தமிழ் இலக்கணவியல் சூ. இன்னாசி தொகுத்தவை]
*[https://rssairam.blogspot.com/2012/08/1876.html தமிழ் இலக்கணவியல் சூ. இன்னாசி தொகுத்தவை]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|26-Mar-2023, 07:43:07 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:49, 13 June 2024

பேராசிரியர், எழுத்தாளர் முனைவர் சூ. இன்னாசி

சூ. இன்னாசி (சூசையாப் பிள்ளை இன்னாசி; பிறப்பு: செப்டம்பர் 13, 1934-அக்டோபர் 6, 2010) எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், தமிழ் அறிஞர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கண, இலக்கியங்களை ஆராய்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதினார். பதிப்பித்தார். கிறிஸ்தவ காப்பியமான திருத்தொண்டர் காப்பியம் எழுதினார்.

பிறப்பு, கல்வி

சூசையாப் பிள்ளை இன்னாசி என்னும் சூ. இன்னாசி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வயலோகம் என்ற சிற்றூரில், செப்டம்பர் 13, 1934 அன்று, சூசையாப் பிள்ளை-லூர்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருமயம் சத்தியமூர்த்தி ஆரம்பப் பாடசாலையில் தொடக்கக் கல்வி கற்றார். உயர்நிலைக் கல்வியை தேவகோட்டை டிபிரிட்டோ உயர்நிலைப் பள்ளியில 1951ல் முடித்தார். புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பயின்று தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வீரமாமுனிவரின் சதுரகராதி பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் புலத்தில் ஆய்வு செய்து முது முனைவர் (D.Litt) பட்டம் பெற்றார்.

சூ. இன்னாசி

தனி வாழ்க்கை

சூ. இன்னாசி 1953 முதல் புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிகளில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். 1983-ல், சென்னைப் பல்கலைக்கழகக்தின் கிறித்தவத் தமிழ் இலக்கியத் துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1993-ல், பணி ஓய்வுக்குப் பின்னும் பணி நீட்டிக்கப்பட்டு 1999 வரைபணியாற்றி ஓய்வு பெற்றார்.

சூ. இன்னாசியின் மனைவி செசிலி மேரி.

பேராசிரியர் சூ. இன்னாசி புத்தகங்கள்

இலக்கிய வாழ்க்கை

சூ. இன்னாசி, கல்லூரி இதழ்களிலும், இலக்கிய ஆய்விதழ்களிலும் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதினார். சென்னைப் பல்கலைக் கழகம் மூலம் பல நூல்களை வெளியிட்டார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார். கிறித்தவத் தமிழ் இலக்கியம் தொடர்பான கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார். இலக்கணம், மொழியியல், அகராதி, மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், புதினம், சிறுகதை, இதழியல் என்று இலக்கியத்தின் பல களங்களில் செயல்பட்டார்.

சூ. இன்னாசி, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நிகழ்ந்த கருத்தரங்குகளில் உரையாற்றினார். சிங்கப்பூர், மலேசியாவில் ‘சைவம்’ குறித்துச் சிறப்புரையாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

சூ. இன்னாசி எழுதிய ‘கவிதைச் செல்வம்’ என்ற கிறித்தவக் கலைக் களஞ்சிய நூலில், கிறிஸ்தவ இலக்கியங்களை அந்தாதி, அம்மானை, ஆற்றுப்படை, உலா, கலம்பகம், காப்பியம், கீர்த்தனை, கும்மி, குறவஞ்சி, சதகம், சிந்து, தூது, தொகுப்பு, நாடகம், பதிகம், பள்ளு, பிள்ளைத்தமிழ், புலம்பல், மாலைகள், வண்ணம், வழிபாட்டுப் பாடல்கள், வாழ்வியல் விவிலியம் என வகைப்படுத்தி அகரவரிசைப்படி தொகுத்தார். நூல்களை எழுதியவர் பெயர், எழுதப்பட்ட ஆண்டு, வெளியிட்ட பதிப்பகம் போன்ற செய்திகளும் அத்தொகுப்பில் இடம் பெற்றன.

கிறித்தவ இலக்கியங்கள், கிறித்தவ இதழ்கள் மற்றும் கிறித்தவ இலக்கியப் படைப்பாளிகள் பற்றிய விவரங்களை நூல்களாகத் தொகுத்தார். சென்னைப் பல்கலைக்கழகம் அவற்றை வெளியிட்டது. சூ. இன்னாசி எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். ஆங்கிலத்திலும் சில நூல்களை எழுதினார்.

பதிப்புலகம்

சூ. இன்னாசி, பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அவற்றில் சில முதல் பதிப்புகளாகவும் வேறு சில மறுபதிப்புகளாகவும் உருவாக்கம் பெற்றன.

விருதுகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு - திருத்தொண்டர் காப்பியம் நூலுக்காக மரபுக்கவிதை வகைமையில்.

மறைவு

சூ. இன்னாசி, அக்டோபர் 6, 2010-ல், தனது 76-ம் வயதில் காலமானார்.

நினைவு

சூ. இன்னாசியின் நினைவாக அவர் பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது. அதன் மூலம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெறுகின்றன.

‘சூ. இன்னாசி நூல்களில் சமுதாய முன்னேற்றக் கருத்துக்கள்' என்ற தலைப்பில் மாணவி கி. தீபா. ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். இவர் படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து மாணவர்கள் சிலர் முனைவர் பட்டம் பெற்றனர்.

ஆவணம்

தமிழிணையம் மின்னூலகத்திலும் ஆர்கைவ் தளத்திலும் சூ. இன்னாசியின் நூல்கள் சில சேகரிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் இலக்கண, இலக்கிய ஆய்வு நூல்கள் மட்டுமல்லாது பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் சூ. இன்னாசி எழுதினார். தனது இலக்கிய முயற்சிகளுக்காக, கிறித்தவ இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை வரிசையில், சூ. இன்னாசி மதிப்பிடப் படுகிறார்.

பேராசிரியர் முனைவர் சூ. இன்னாசி நூல்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • கவியலங்கல்
  • பதினெண்கீழ்க்கணக்கர்
  • இன்னாசி கவிதைகள்
கட்டுரை நூல்கள்
பதிப்பித்தவை
  • சதுரகராதி
  • வெற்றிமாலை
  • கருத்தரங்கக் கட்டுரைகள்
  • பாரதியியல்
  • சமயமும் சமுதாயமும்
  • இந்தியமொழி இலக்கியங்களுக்குக் கிறித்தவர் பங்களிப்பு
  • இந்திய மொழி, இலக்கியங்களுக்கிடையேயுள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்
  • இந்தியச் சூழ்நிலையில் சமுதாயம்
  • சமயம், இலக்கியம்
  • தமிழியல் கட்டுரைகள்
  • தமிழ்ப்பண்பாடு-பன்முகப்பார்வை
  • பிரடரிக் ஓசானாம் வாழ்க்கை வரலாறு
எழுதியவை
  • சதுரகராதி ஆராய்ச்சி (முனைவர் பட்ட ஆய்வு)
  • வீரமாமுனிவ மாலைகள்
  • திருக்குறள்-வீரமாமுனிவர் உரை
  • சௌமியத்துறை
  • கிறித்தவ நாடக இலக்கியம்
  • கவிதைச் செல்வம்
  • புதினப் படைப்புகள்
  • தமிழியல் கட்டுரைகள்
  • சிறுகதைச் செல்வம்
  • இதழியல்
  • வீரமாமுனிவர்
  • கிறித்தவமும் தமிழகமும்
  • குறிஞ்சிப்பாட்டு
  • பாரதி இயல்
  • தேம்பாவணித் திறன்
  • திருத்தொண்டர் காப்பியம்
  • எழுத்தியல்
  • சொல்லியல்
  • இலக்கணச் சிந்தனைகள்
  • மொழியியல்
  • சிந்தனைக் களங்கள்
  • பத்துக்கட்டுரை
  • திருமொழியுள் ஒருமொழி
  • கிறித்தவ இலக்கியச் சிந்தனைகள்
  • இலக்கிய மலர்கள்
  • தேம்பாவணித் தேன்
  • இலக்கியப் புதையல்
  • திட்டூர் தேசிகர் இலக்கியங்கள்
  • திட்டூர் தேசிகர் சிந்தனைகள்
  • கிறித்தவத் தமிழ்க் கொடை
  • இந்திய மொழிக் கொடை
  • திருந்தியவன்
  • நம் கடமை
  • அறத்தால் வருவதே இன்பம்
  • அன்பளிப்பு
  • தேசத் தியாகி
  • நன்கொடை
  • ஐஞ்சிறு குழு
  • பாரதி மொழிவழி நாடகங்கள்
  • பெருவஞ்ச மூலம்
  • அவன் அவனானான்
  • சிக்கனம்
  • கிழக்கே மறைந்த கதிரவன்
  • பேராசிரியர் ந. சஞ்சீவியின் தமிழ்க் கொடை
  • கிறித்தவ இலக்கிய அகராதி
  • சிந்தனைத் துளிகள்
  • எண்ணக் குமிழிகள்
  • சமயப் பொதுமை
  • சேவைச் செம்மல்
ஆங்கில நூல்கள்
  • Perspectives in Tamil Language and Literature
  • Dimensions of Tamil Christian Literature
  • Christian Contibution to Indian Languages and Literatures
  • Christian Contribution to Indian Literatures
  • Society Religion and Literature (Editor)
  • Tolerence and Literature (Editor)
  • Humanism and Literature (Editor)
  • Social Justice in Indian Literature (Editor)
  • Feminist Values in Indian Literature (Editor)
  • Social Emancipation in Indian Literature (Editor)
  • Multi-Culturalism ain Indian Literature (Editor)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2023, 07:43:07 IST