under review

மாதர் மனோரஞ்சனி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
[[File:Mathar Manoranjani 1899.jpg|thumb|மாதர் மனோரஞ்சனி - பிப்ரவரி 1899]]
[[File:Mathar Manoranjani 1899.jpg|thumb|மாதர் மனோரஞ்சினி - பிப்ரவரி 1899]]
மாதர் மனோரஞ்சனி (1899) மகளிர் மாத இதழ். சென்னையிலிருந்து வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர், சி.எஸ். இராமசுவாமி ஐயர். பிரிட்டிஷார் ஆதரவு இதழாக மாதர் மனோரஞ்சனி செயல்பட்டது. சுமார் 18 ஆண்டுகாலம் வெளிவந்தது.
மாதர் மனோரஞ்சினி (1899) மகளிர் மாத இதழ். சென்னையிலிருந்து வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர், சி.எஸ். இராமசுவாமி ஐயர். பிரிட்டிஷார் ஆதரவு இதழாக மாதர் மனோரஞ்சினி செயல்பட்டது. சுமார் 18 ஆண்டுகாலம் வெளிவந்தது.
== பதிப்பு, வெளியீடு ==
== பதிப்பு, வெளியீடு ==
மாதர் மனோரஞ்சனி, மார்ச், 1899 முதல் சென்னையிலிருந்து வெளிவந்த மகளிர் மாத இதழ். திருவல்லிக்கேணி வீரராகவ முதலி தெருவில் இதன் அலுவலகம் செயல்பட்டது. இதழின் ஆசிரியராக சி.எஸ். இராமசுவாமி ஐயரும், மேலாளராக பி. வைத்தியநாத ஐயரும் செயல்பட்டனர். ஆரம்பத்தில் 16 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழ் சில ஆண்டுகளுக்குப் பின் 32 பக்கங்களில் வெளிவந்தது. இதழின் ஆண்டுச் சந்தா ஒரு ரூபாய் 12 அணா. தனி இதழின் விலை இரண்டரை அணா. சில ஆண்டுகளுக்குப் பின் இதழின் சந்தா இரண்டு ரூபாய் எட்டு அணாவானது. இதழ்களின் ஆண்டுத் தொகுப்பு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டது.
மாதர் மனோரஞ்சினி, மார்ச், 1899 முதல் சென்னையிலிருந்து வெளிவந்த மகளிர் மாத இதழ். திருவல்லிக்கேணி வீரராகவ முதலி தெருவில் இதன் அலுவலகம் செயல்பட்டது. இதழின் ஆசிரியராக சி.எஸ். இராமசுவாமி ஐயரும், மேலாளராக பி. வைத்தியநாத ஐயரும் செயல்பட்டனர். ஆரம்பத்தில் 16 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழ் சில ஆண்டுகளுக்குப் பின் 32 பக்கங்களில் வெளிவந்தது. இதழின் ஆண்டுச் சந்தா ஒரு ரூபாய் 12 அணா. தனி இதழின் விலை இரண்டரை அணா. சில ஆண்டுகளுக்குப் பின் இதழின் சந்தா இரண்டு ரூபாய் எட்டு அணாவானது. இதழ்களின் ஆண்டுத் தொகுப்பு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டது.

மாதர் மனோரஞ்சனி இதழின் முகப்பில், ''எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'' என்னும் ஔவையாரின் வாக்கு இடம் பெற்றது. கூடவே, ‘A Monthly Illustrated Journal Devoted to Female Education  என்ற குறிப்பும் இடம் பெற்றது. இதழின் முதல் பக்கத்தில் ''Tamil Zenana Magazine ,  A Monthly Illutrated Journal - Devoted to Female Education'' என்ற குறிப்புடன் வெளிவந்தது. பெண்களின் அந்தப்புர இதழாக இவ்விதழ் கருதப்பட்டது.
மாதர் மனோரஞ்சினி இதழின் முகப்பில், ''எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'' என்னும் ஔவையாரின் வாக்கு இடம் பெற்றது. கூடவே, ‘A Monthly Illustrated Journal Devoted to Female Education  என்ற குறிப்பும் இடம் பெற்றது. இதழின் முதல் பக்கத்தில் ''Tamil Zenana Magazine ,  A Monthly Illutrated Journal - Devoted to Female Education'' என்ற குறிப்புடன் வெளிவந்தது. பெண்களின் அந்தப்புர இதழாக இவ்விதழ் கருதப்பட்டது.
[[File:Mathar Manoranjani Magazine.jpg|thumb|மாதர் மனோரஞ்சனி இதழ்]]
[[File:Mathar Manoranjani Magazine.jpg|thumb|மாதர் மனோரஞ்சினி இதழ்]]

== நோக்கம் ==
== நோக்கம் ==
மாதர் மனோரஞ்சனியின் முக்கிய நோக்கங்களாக பெண் கல்வி, திருமணச் சீர்திருத்தம், பெண்ணுக்குச் சம உரிமை கிடைக்கச் செய்தல், பெண்கள் முன்னேற்றம் போன்றவை  இருந்தன. இதழின் நோக்கம் குறித்து ஆசிரியர் சி. எஸ். இராமசுவாமி ஐயர், "இப்பத்திரிகையில் பெண்கள் கல்வித் தேர்ச்சிக்கும், அவர்கள் நற்குணச் செய்கைகள் போதிப்பதற்காகவும், தேகசுகம், பிள்ளை வளர்ப்பு, சமயல் முதலான பாகங்கள் முதலிய அநேக விஷயங்களில் அறிவு உண்டாக்குவதற்குமான சமாசாரங்களும் கதைகளும் அப்போதைக்கப்போது புதிது புதிதாக எழுதிவரக் கருதியிருக்கிறோம். பெண் கல்விப் பயிற்சியே எமது கருத்தாகையால், பெண்கள் தம் சகோதரிகள் க்ஷேமத்தின் பொருட்டு எழுதுபவைகளுக்கு இப்பத்திரிகையில் முதலிடங் கொடுப்போம். இப்பத்திரிகையால் தமிழ்நாட்டுப் பெண்கள் எள்ளளவேனும் கல்வியும் விவேகமும் அடைந்தார்களென்று ஏற்பட்டால் அதுவே எமக்குப் பெரிய பரிசு” என்று குறிப்பிட்டார். (மார்ச் 1899 இதழ்)
மாதர் மனோரஞ்சினியின் முக்கிய நோக்கங்களாக பெண் கல்வி, திருமணச் சீர்திருத்தம், பெண்ணுக்குச் சம உரிமை கிடைக்கச் செய்தல், பெண்கள் முன்னேற்றம் போன்றவை  இருந்தன. இதழின் நோக்கம் குறித்து ஆசிரியர் சி. எஸ். இராமசுவாமி ஐயர், "இப்பத்திரிகையில் பெண்கள் கல்வித் தேர்ச்சிக்கும், அவர்கள் நற்குணச் செய்கைகள் போதிப்பதற்காகவும், தேகசுகம், பிள்ளை வளர்ப்பு, சமயல் முதலான பாகங்கள் முதலிய அநேக விஷயங்களில் அறிவு உண்டாக்குவதற்குமான சமாசாரங்களும் கதைகளும் அப்போதைக்கப்போது புதிது புதிதாக எழுதிவரக் கருதியிருக்கிறோம். பெண் கல்விப் பயிற்சியே எமது கருத்தாகையால், பெண்கள் தம் சகோதரிகள் க்ஷேமத்தின் பொருட்டு எழுதுபவைகளுக்கு இப்பத்திரிகையில் முதலிடங் கொடுப்போம். இப்பத்திரிகையால் தமிழ்நாட்டுப் பெண்கள் எள்ளளவேனும் கல்வியும் விவேகமும் அடைந்தார்களென்று ஏற்பட்டால் அதுவே எமக்குப் பெரிய பரிசு” என்று குறிப்பிட்டார். (மார்ச் 1899 இதழ்)
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
மாதர் மனோரஞ்சனியில் மகளிர் நலன் சார்ந்த கட்டுரைகளும், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், புத்தக விமர்சனம், சமாசாரக் குறிப்பு, பொது சமாசாரக் குறிப்புகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவையும் இடம் பெற்றன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கும் இவ்விதழ் இடமளித்தது. நாடகங்களும் வெளியாகின. சிறார்களுக்கான கதைகளும் இடம் பெற்றன. விளம்பரங்களும் இவ்விதழில் வெளியாகின.  
மாதர் மனோரஞ்சினியில் மகளிர் நலன் சார்ந்த கட்டுரைகளும், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், புத்தக விமர்சனம், சமாசாரக் குறிப்பு, பொது சமாசாரக் குறிப்புகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவையும் இடம் பெற்றன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கும் இவ்விதழ் இடமளித்தது. நாடகங்களும் வெளியாகின. சிறார்களுக்கான கதைகளும் இடம் பெற்றன. விளம்பரங்களும் இவ்விதழில் வெளியாகின.  

பெண்கள் தங்களின் உடலின் பாகங்களில் பச்சை குத்திக் கொள்வதைக் குறித்து, “பெண்களில் பெரும்பான்மையோர், நெற்றியிலும் கைகால்களிலும் பலவிதமாய்ப் பச்சைக் குத்திக் கொள்கின்றனர். அதனால் பணச்செலவு, கஷ்டம் உண்டு. அன்பான தெய்வம் தரும் தேகத்தைக் கெடுப்பது. அழகுக்காக என்கின்றனர். இது தவறு. தேகத்தை அலங்கரிக்க வேறு வழிகள் உண்டு. அது செவ்வையாய்ப் படித்து, கல்வியால் தங்களை அலங்கரித்துக் கொள்வது” என்ற குறிப்பின் மூலம் பெண் கல்வியை வலியுறுத்தியது.

===== கதைகள் =====
===== கதைகள் =====
மாதர் மனோரஞ்சனி இதழில் பர்டிடாவின் கதை, மிருகமும் அழகியும் கதை, அன்னபூரணி கதை, சுகந்நியா நீதிக்கதைகள், மாயாபுரி விநோதக் கதை, சத்தியவதி கதை, இந்திய இரவுக் கதைகள், வைரமும் தவளைக் குஞ்சும், ஓணான் சம்சார வாழ்க்கை, ஒரு குரங்கின் கதை, ஆட் கொல்லி, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - போன்ற தலைப்புகளில் சிறுகதைகள் வெளியாகின.
மாதர் மனோரஞ்சினி இதழில் பர்டிடாவின் கதை, மிருகமும் அழகியும் கதை, அன்னபூரணி கதை, சுகந்நியா நீதிக்கதைகள், மாயாபுரி விநோதக் கதை, சத்தியவதி கதை, இந்திய இரவுக் கதைகள், வைரமும் தவளைக் குஞ்சும், ஓணான் சம்சார வாழ்க்கை, ஒரு குரங்கின் கதை, ஆட் கொல்லி, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - போன்ற தலைப்புகளில் சிறுகதைகள் வெளியாகின.

===== கட்டுரைகள் =====
===== கட்டுரைகள் =====
[[ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள்|ஆர்.எஸ். சுப்பலக்ஷ்மி அம்மாள்]] எழுதிய உத்தர ராம சரிதம் மாதர் மனோரஞ்சனியில் தொடராக வெளியானது. சாவித்திரி சரித்திரம், மரகதவல்லி - சுந்தரவல்லி சரித்திரம், திருவள்ளுவ நாயனார் மனைவியாகிய வாசுகியம்மாளின் சரித்திரம், ராணி பவானி,  லேடி ஜேன்கிரே, நூர்ஜஹான் சரித்திரம், அலெக்ஸான்டிரினா மகாராணியார் சரித்திரம் போன்ற தலைப்புகளில் வரலாற்றுத் தொடர்கள் வெளியாகின. [[தி இந்தியன் லேடீஸ் மேகஸின்|தி இந்தியன் லேடீஸ் மேகஸி]]னிலிருந்து பல சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு இவ்விதழில் வெளியாகின. என் சகோதரிகளுக்கோர் கபடமற்ற கடிதம் என்ற தலைப்பில், பெண் கல்வியை வலியுறுத்தி ஒரு கட்டுரை வெளியானது. பெண் கல்வி, மைசூரில் பெண்கல்வி விருத்தி, குழந்தைகளைப் பழக்கும் முறை, மிஸ்ஸஸ் அம்சாம்பாள், இந்து ஸ்திரீகளின் நிலைமை, இந்திய மாதர்களுக்கு ஓர் ஆலோசனை, புருஷனும் பெண்சாதியும், மிஸ்ஸஸ் அரண்டலும் இந்து மாதரும், இந்திய மாதர்களுக்கு ஓர் ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் பெண்களின் தொகை ஏன் அதிகப்படவில்லை?, மகளிர் நிலைமையும் மனத்துயரும்,மிஸ்ஸஸ் கமலா சத்தியநாதன் போன்ற தலைப்புகளில் பெண்கள் நலம் சார்ந்த கட்டுரைகள் வெளியாகின.
[[ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள்|ஆர்.எஸ். சுப்பலக்ஷ்மி அம்மாள்]] எழுதிய உத்தர ராம சரிதம் மாதர் மனோரஞ்சினியில் தொடராக வெளியானது. சாவித்திரி சரித்திரம், மரகதவல்லி - சுந்தரவல்லி சரித்திரம், திருவள்ளுவ நாயனார் மனைவியாகிய வாசுகியம்மாளின் சரித்திரம், ராணி பவானி,  லேடி ஜேன்கிரே, நூர்ஜஹான் சரித்திரம், அலெக்ஸான்டிரினா மகாராணியார் சரித்திரம் போன்ற தலைப்புகளில் வரலாற்றுத் தொடர்கள் வெளியாகின. [[தி இந்தியன் லேடீஸ் மேகஸின்|தி இந்தியன் லேடீஸ் மேகஸி]]னிலிருந்து பல சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு இவ்விதழில் வெளியாகின. என் சகோதரிகளுக்கோர் கபடமற்ற கடிதம் என்ற தலைப்பில், பெண் கல்வியை வலியுறுத்தி ஒரு கட்டுரை வெளியானது. பெண் கல்வி, மைசூரில் பெண்கல்வி விருத்தி, குழந்தைகளைப் பழக்கும் முறை, மிஸ்ஸஸ் அம்சாம்பாள், இந்து ஸ்திரீகளின் நிலைமை, இந்திய மாதர்களுக்கு ஓர் ஆலோசனை, புருஷனும் பெண்சாதியும், மிஸ்ஸஸ் அரண்டலும் இந்து மாதரும், இந்திய மாதர்களுக்கு ஓர் ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் பெண்களின் தொகை ஏன் அதிகப்படவில்லை?, மகளிர் நிலைமையும் மனத்துயரும்,மிஸ்ஸஸ் கமலா சத்தியநாதன் போன்ற தலைப்புகளில் பெண்கள் நலம் சார்ந்த கட்டுரைகள் வெளியாகின.

== பங்களிப்பாளர்கள் ==
== பங்களிப்பாளர்கள் ==
Line 30: Line 30:
மற்றும் பலர்
மற்றும் பலர்
== இதழ் நிறுத்தம் ==
== இதழ் நிறுத்தம் ==
1917 ஆம் ஆண்டில் இவ்விதழ் நின்று போனது.
1917-ம் ஆண்டில் இவ்விதழ் நின்று போனது.
== ஆவணம் ==
== ஆவணம் ==
மாதர் மனோரஞ்சனி இதழ்களின் சில பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மாதர் மனோரஞ்சினி இதழ்களின் சில பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
== வரலாற்று இடம் ==
== வரலாற்று இடம் ==
பெண் கல்வி மற்றும் பெண்கள் நலத்தை வலியுறுத்தி, பெண்களுக்காக வெளியான ‘[[அமிர்தவசனி]], [[சுகுணபோதினி]], [[பெண்கல்வி]]  போன்ற அக்காலத்து இதழ்களின் வரிசையில் ''மாதர் மனோரஞ்சனி'' இதழ் இடம் பெறுகிறது.
பெண் கல்வி மற்றும் பெண்கள் நலத்தை வலியுறுத்தி, பெண்களுக்காக வெளியான ‘[[அமிர்தவசனி]], [[சுகுணபோதினி]], [[பெண்கல்வி]]  போன்ற அக்காலத்து இதழ்களின் வரிசையில் ''மாதர் மனோரஞ்சினி'' இதழ் இடம் பெறுகிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.tamildigitallibrary.in/book-list-view-book?cid=21&id=jZY9lup2kZl6TuXGlZQdjZI6luIy&tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF மாதர் மனோரஞ்சனி இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்]
[https://www.tamildigitallibrary.in/book-list-view-book?cid=21&id=jZY9lup2kZl6TuXGlZQdjZI6luIy&tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF மாதர் மனோரஞ்சினி இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்]
 
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|05-Sep-2023, 10:00:59 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:06, 13 June 2024

மாதர் மனோரஞ்சினி - பிப்ரவரி 1899

மாதர் மனோரஞ்சினி (1899) மகளிர் மாத இதழ். சென்னையிலிருந்து வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர், சி.எஸ். இராமசுவாமி ஐயர். பிரிட்டிஷார் ஆதரவு இதழாக மாதர் மனோரஞ்சினி செயல்பட்டது. சுமார் 18 ஆண்டுகாலம் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

மாதர் மனோரஞ்சினி, மார்ச், 1899 முதல் சென்னையிலிருந்து வெளிவந்த மகளிர் மாத இதழ். திருவல்லிக்கேணி வீரராகவ முதலி தெருவில் இதன் அலுவலகம் செயல்பட்டது. இதழின் ஆசிரியராக சி.எஸ். இராமசுவாமி ஐயரும், மேலாளராக பி. வைத்தியநாத ஐயரும் செயல்பட்டனர். ஆரம்பத்தில் 16 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழ் சில ஆண்டுகளுக்குப் பின் 32 பக்கங்களில் வெளிவந்தது. இதழின் ஆண்டுச் சந்தா ஒரு ரூபாய் 12 அணா. தனி இதழின் விலை இரண்டரை அணா. சில ஆண்டுகளுக்குப் பின் இதழின் சந்தா இரண்டு ரூபாய் எட்டு அணாவானது. இதழ்களின் ஆண்டுத் தொகுப்பு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டது.

மாதர் மனோரஞ்சினி இதழின் முகப்பில், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்னும் ஔவையாரின் வாக்கு இடம் பெற்றது. கூடவே, ‘A Monthly Illustrated Journal Devoted to Female Education என்ற குறிப்பும் இடம் பெற்றது. இதழின் முதல் பக்கத்தில் Tamil Zenana Magazine , A Monthly Illutrated Journal - Devoted to Female Education என்ற குறிப்புடன் வெளிவந்தது. பெண்களின் அந்தப்புர இதழாக இவ்விதழ் கருதப்பட்டது.

மாதர் மனோரஞ்சினி இதழ்

நோக்கம்

மாதர் மனோரஞ்சினியின் முக்கிய நோக்கங்களாக பெண் கல்வி, திருமணச் சீர்திருத்தம், பெண்ணுக்குச் சம உரிமை கிடைக்கச் செய்தல், பெண்கள் முன்னேற்றம் போன்றவை இருந்தன. இதழின் நோக்கம் குறித்து ஆசிரியர் சி. எஸ். இராமசுவாமி ஐயர், "இப்பத்திரிகையில் பெண்கள் கல்வித் தேர்ச்சிக்கும், அவர்கள் நற்குணச் செய்கைகள் போதிப்பதற்காகவும், தேகசுகம், பிள்ளை வளர்ப்பு, சமயல் முதலான பாகங்கள் முதலிய அநேக விஷயங்களில் அறிவு உண்டாக்குவதற்குமான சமாசாரங்களும் கதைகளும் அப்போதைக்கப்போது புதிது புதிதாக எழுதிவரக் கருதியிருக்கிறோம். பெண் கல்விப் பயிற்சியே எமது கருத்தாகையால், பெண்கள் தம் சகோதரிகள் க்ஷேமத்தின் பொருட்டு எழுதுபவைகளுக்கு இப்பத்திரிகையில் முதலிடங் கொடுப்போம். இப்பத்திரிகையால் தமிழ்நாட்டுப் பெண்கள் எள்ளளவேனும் கல்வியும் விவேகமும் அடைந்தார்களென்று ஏற்பட்டால் அதுவே எமக்குப் பெரிய பரிசு” என்று குறிப்பிட்டார். (மார்ச் 1899 இதழ்)

உள்ளடக்கம்

மாதர் மனோரஞ்சினியில் மகளிர் நலன் சார்ந்த கட்டுரைகளும், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், புத்தக விமர்சனம், சமாசாரக் குறிப்பு, பொது சமாசாரக் குறிப்புகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவையும் இடம் பெற்றன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கும் இவ்விதழ் இடமளித்தது. நாடகங்களும் வெளியாகின. சிறார்களுக்கான கதைகளும் இடம் பெற்றன. விளம்பரங்களும் இவ்விதழில் வெளியாகின.

பெண்கள் தங்களின் உடலின் பாகங்களில் பச்சை குத்திக் கொள்வதைக் குறித்து, “பெண்களில் பெரும்பான்மையோர், நெற்றியிலும் கைகால்களிலும் பலவிதமாய்ப் பச்சைக் குத்திக் கொள்கின்றனர். அதனால் பணச்செலவு, கஷ்டம் உண்டு. அன்பான தெய்வம் தரும் தேகத்தைக் கெடுப்பது. அழகுக்காக என்கின்றனர். இது தவறு. தேகத்தை அலங்கரிக்க வேறு வழிகள் உண்டு. அது செவ்வையாய்ப் படித்து, கல்வியால் தங்களை அலங்கரித்துக் கொள்வது” என்ற குறிப்பின் மூலம் பெண் கல்வியை வலியுறுத்தியது.

கதைகள்

மாதர் மனோரஞ்சினி இதழில் பர்டிடாவின் கதை, மிருகமும் அழகியும் கதை, அன்னபூரணி கதை, சுகந்நியா நீதிக்கதைகள், மாயாபுரி விநோதக் கதை, சத்தியவதி கதை, இந்திய இரவுக் கதைகள், வைரமும் தவளைக் குஞ்சும், ஓணான் சம்சார வாழ்க்கை, ஒரு குரங்கின் கதை, ஆட் கொல்லி, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - போன்ற தலைப்புகளில் சிறுகதைகள் வெளியாகின.

கட்டுரைகள்

ஆர்.எஸ். சுப்பலக்ஷ்மி அம்மாள் எழுதிய உத்தர ராம சரிதம் மாதர் மனோரஞ்சினியில் தொடராக வெளியானது. சாவித்திரி சரித்திரம், மரகதவல்லி - சுந்தரவல்லி சரித்திரம், திருவள்ளுவ நாயனார் மனைவியாகிய வாசுகியம்மாளின் சரித்திரம், ராணி பவானி, லேடி ஜேன்கிரே, நூர்ஜஹான் சரித்திரம், அலெக்ஸான்டிரினா மகாராணியார் சரித்திரம் போன்ற தலைப்புகளில் வரலாற்றுத் தொடர்கள் வெளியாகின. தி இந்தியன் லேடீஸ் மேகஸினிலிருந்து பல சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு இவ்விதழில் வெளியாகின. என் சகோதரிகளுக்கோர் கபடமற்ற கடிதம் என்ற தலைப்பில், பெண் கல்வியை வலியுறுத்தி ஒரு கட்டுரை வெளியானது. பெண் கல்வி, மைசூரில் பெண்கல்வி விருத்தி, குழந்தைகளைப் பழக்கும் முறை, மிஸ்ஸஸ் அம்சாம்பாள், இந்து ஸ்திரீகளின் நிலைமை, இந்திய மாதர்களுக்கு ஓர் ஆலோசனை, புருஷனும் பெண்சாதியும், மிஸ்ஸஸ் அரண்டலும் இந்து மாதரும், இந்திய மாதர்களுக்கு ஓர் ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் பெண்களின் தொகை ஏன் அதிகப்படவில்லை?, மகளிர் நிலைமையும் மனத்துயரும்,மிஸ்ஸஸ் கமலா சத்தியநாதன் போன்ற தலைப்புகளில் பெண்கள் நலம் சார்ந்த கட்டுரைகள் வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

1917-ம் ஆண்டில் இவ்விதழ் நின்று போனது.

ஆவணம்

மாதர் மனோரஞ்சினி இதழ்களின் சில பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

பெண் கல்வி மற்றும் பெண்கள் நலத்தை வலியுறுத்தி, பெண்களுக்காக வெளியான ‘அமிர்தவசனி, சுகுணபோதினி, பெண்கல்வி போன்ற அக்காலத்து இதழ்களின் வரிசையில் மாதர் மனோரஞ்சினி இதழ் இடம் பெறுகிறது.

உசாத்துணை

மாதர் மனோரஞ்சினி இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Sep-2023, 10:00:59 IST