under review

அருள் ஒளி அன்னை தெரேசா காவியம்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created; Para Added; Image Added:)
 
(Added First published date)
 
(8 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:Treresa Kaaviyam.jpg|thumb|அருள் ஒளி அன்னை தெரேசா காவியம்]]
[[File:Treresa Kaaviyam.jpg|thumb|அருள் ஒளி அன்னை தெரேசா காவியம்]]
அருள் ஒளி அன்னை தெரேசா காவியம் (1994), அன்னை தெரேசாவைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையன் இந்நூலை இயற்றினார். இந்நூல் மூன்று காண்டங்களையும், 256 உட் தலைப்புகளையும், 843 பாடல்களையும் கொண்டது.
அருள் ஒளி அன்னை தெரேசா காவியம் (1994), அன்னை தெரேசாவைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையன் இந்நூலை இயற்றினார். இந்நூல் மூன்று காண்டங்களையும், 262 உட் தலைப்புகளையும், 843 பாடல்களையும் கொண்டது.

== பதிப்பு, வெளியீடு ==
அருள் ஒளி அன்னை தெரேசா காவியம் நூலை, 1994-ல், புதுச்சேரி மலரொளி பதிப்பகம் வெளியிட்டது. மறுபதிப்பை திருச்சி கிறித்துவ ஆய்வு மையம், 2012-ல் வெளியிட்டது.

== ஆசிரியர் குறிப்பு ==
அருள் ஒளி அன்னை தெரேசா காவியத்தை இயற்றியவர் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் [[துரை. மாலிறையன்]]. இவர் ஆகஸ்டு 29, 1942-ல், புதுச்சேரியில், துரைசாமி-கோவிந்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இயற் பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றால் பிற்காலத்தில் மாலிறையன் என்று மாற்றிக் கொண்டார். தமிழில் வித்துவான் பட்டம் பெற்ற இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். துரை. மாலிறையன் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் [[அருள்நிறை மரியம்மை காவியம்]], அன்னை தெரேசா காவியம், [[இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்|இறைபேரொளி நபிகள் நாயகம் அருட்காவியம்]] போன்ற காப்பிய நூல்களும் அடக்கம்.

== நூல் அமைப்பு ==
அருள் ஒளி அன்னை தெரேசா காவியம், மூன்று காண்டங்களையும், 262 உட்தலைப்புகளையும், 843 பாடல்களையும் கொண்டுள்ளது. பெரும்பாலான பாடல்கள் அறுசீர் விருத்தத்தில் அமைந்துள்ளன. நூலின் நோக்கமாக, துரை. மாலிறையன், மண்ணில் வாழ்கின்ற உயிர்களுக்குத் தொண்டு செய்வதில் அன்னைத் தெரேசாவைப் போல வேறு யாரும் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்நூலைப் படைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

===== முதல் காண்டம் =====
அன்னை தெரேசா காவியத்தின் முதல் காண்டம் அன்னை தெரேசாவின் பிறப்பு, அவரது சமூக நற்பணிகள், அதனால் அவருக்குக் கிடைத்த பெருமைகளைப் பற்றிக் கூறுகிறது. இதில் 49 உட்தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. 201 பாடல்கள் இக்காண்டத்தில் அமைந்துள்ளன.

===== இரண்டாம் காண்டம் =====
அன்னை தெரேசா காவியத்தின் இரண்டாம் காண்டம், அன்னை தெரேசாவின் பல்வேறு விதமான தொண்டுகளைப் பற்றிக் கூறுகிறது. இக்காண்டம் 61 உட்தலைப்புகளைக் கொண்டது. இக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 308.

===== மூன்றாம் காண்டம் =====
அன்னை தெரேசா காவியத்தின் மூன்றாம் காண்டம், உலகத் தலைவர்கள் அன்னை தெரேசாவைப் பாராட்டியது குறித்தும், அன்னை தெரேசா பெற்ற பல்வேறு பட்டங்கள் குறித்தும், ஏழைகளுக்கு அவர் செய்த தொண்டுகளைப் பற்றியும் விளக்குகிறது. இக்காண்டத்தில் 102 உட்தலைப்புகள் உள்ளன. 239 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

== பாடல்கள் ==

====== அன்பே சமயம் ======
<poem>
புத்தரும் அன்பைத்தானே புகலிடம் என்றார் எந்தச்
சித்தரும் அன்பைத்தானே சிவமெனப் புகழ்ந்தார் வைண
வத்தாரும் அன்பைத்தானே வைத்தருள் மொழிந்தார் அன்னை
முத்தரும் அன்பைத்தானே முன்வைத்தே அருள்சுரந்தார்!
</poem>

====== மனிதர்களின் முதல் கடமை ======
<poem>
அமைதியில்லாதவர்க்கும் ஆறுதல் அளிக்க வேண்டும்
அமைகின்ற அன்புள்ளத்தால் அவர்களைக் காக்க வேண்டும்
சுமை வாழ்க்கை ஆகாவாறு சுற்றிலும் உள்ளவர் மேல்
நமதன்பைச் செலுத்துதல்தான் நம்முதல் கடமையாகும்!
</poem>

====== அன்னை தெரேசா பொருள் வேண்டுதல் ======
<poem>
இருகையை நீட்டிநீட்டி ஏதேனும் கொடுங்கள் என்று வருகையில்
உன்னிடம் பொருளிருந்தால் உதவுபோய் வீணில் இங்கே
என்னிடம்பொருளைக் கேட்டே எரிச்சல் பண்ணாதே எனினும்
தன்னிடம் பொன்னிருந்தும் தர மனம் இன்றிப் பொய்யே
மன்னிடும் நெஞ்சமாந்தன் மதிப்பின்றிப் பேசி வைத்தான்
அன்னையோ கைகள் நீட்டி அவனிடம் கெஞ்சி உம்பால்
பொன்னையோ மணியைத் தானோ போருகென் றுரைக்கவில்லை
சின்னதோர் பொருள் தந்தாலும் சிறப்பெனக் கொள்வேன் என்றார்
</poem>

====== தொண்டின் பெருமை ======
<poem>
அருளெலாம் உருக்கொண்டாற்போல் அன்னையும் உருவெடுத்தார்
இருளெலாம் நீக்கத் தோன்றும் எழிற்கதிர்ச் சூரியன் போல்
பெரும்பணிக் கதிர்கள் நீட்டிப் பேணியே வறுமை போக்கி
ஒருமணி என ஒளிர்ந்தார் உயர்த்திடும் தொண்டினாலே!

புண்மருந் திட்டுக் காத்தும் புதுத்துணிக் கட்டுப் போட்டும்
கண்மருந் திட்டுக் காத்தும் காதில்சீழ் துடைத்துக் காத்தும்
உண்மருந் திட்டுத் தீய்க்கும் உறுபசி போக்கிக் காத்தும்
மண்மருந்தாக அன்னை மலர்ந்திங்குத் தொண்டு செய்தார்

தாயற்ற குழந்தை கட்குத் தாயாகிக் காத்த தோடு
பாயற்ற ஏழை கட்கும் பாய் தந்தார் உணவைத் தந்தார்
வாயற்ற ஏழையோர் தம் வயிலுற்ற பசியைப் போக்கத்
தாயுற்ற தவிப்பை எந்தத் தறிநாடா உற்ற தம்மா?
</poem>

====== அன்னை தெரேசாவின் பெருமை ======
<poem>
அரியவள் நீயே அன்பை அளிப்பவள் நீயே தாய்க்கும்
பெரியவள் நீயே எம்மைப் பிரியாமல் இருப்பவள் நீயே
உரியவள் நீயே எங்கள் உடைமையும் நீயே மேன்மை
புரிபவள் தமிழே நீ உன் பொன்னடி வணங்குவேனே!
</poem>

== மதிப்பீடு ==
கிறிஸ்தவக் காப்பியங்களில், அருட் தொண்டரான அன்னை தெரேசாவைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரே காப்பியம் அருள் ஒளி அன்னை தெரேசா காவியம். பல்வேறு இலக்கியங்கள் கூறும் செய்திகளை அன்னை தெரேசாவின் வாழ்க்கை மற்றும் செயல்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார் ஆசிரியர், துரை. மாலிறையன். புத்தர், நபிகள் நாயகம், [[இராமலிங்க வள்ளலார்|வள்ளலார்]], ராமகிருஷ்ண பரமஹம்சர், காந்தி போன்ற தலைவர்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளுடன் அன்னையின் செயல்பாடுகளைப் பொருத்தமான இடங்களில் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். உவமை, உருவகச் சிறப்பு, வர்ணனைகள் போன்ற இலக்கிய நயங்களுடன் துரை. மாலிறையனால் இயற்றப்பட்ட இக்காப்பியம், குறிப்பிடத்தக்கதொரு கிறிஸ்தவக் காப்பியமாக கருதப்படுகிறது.

== உசாத்துணை ==

* [https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1916-9557-6699-1841 அருள் ஒளி அன்னை தெரேசா காவியம் நூல்: மெரீனா புக்ஸ் தளம்]
* கிறித்தவக் காப்பியங்கள் - முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு, 2013.

{{Finalised}}

{{Fndt|17-Sep-2023, 05:38:12 IST}}

{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 14:02, 13 June 2024

அருள் ஒளி அன்னை தெரேசா காவியம்

அருள் ஒளி அன்னை தெரேசா காவியம் (1994), அன்னை தெரேசாவைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையன் இந்நூலை இயற்றினார். இந்நூல் மூன்று காண்டங்களையும், 262 உட் தலைப்புகளையும், 843 பாடல்களையும் கொண்டது.

பதிப்பு, வெளியீடு

அருள் ஒளி அன்னை தெரேசா காவியம் நூலை, 1994-ல், புதுச்சேரி மலரொளி பதிப்பகம் வெளியிட்டது. மறுபதிப்பை திருச்சி கிறித்துவ ஆய்வு மையம், 2012-ல் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

அருள் ஒளி அன்னை தெரேசா காவியத்தை இயற்றியவர் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் துரை. மாலிறையன். இவர் ஆகஸ்டு 29, 1942-ல், புதுச்சேரியில், துரைசாமி-கோவிந்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இயற் பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றால் பிற்காலத்தில் மாலிறையன் என்று மாற்றிக் கொண்டார். தமிழில் வித்துவான் பட்டம் பெற்ற இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். துரை. மாலிறையன் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் அருள்நிறை மரியம்மை காவியம், அன்னை தெரேசா காவியம், இறைபேரொளி நபிகள் நாயகம் அருட்காவியம் போன்ற காப்பிய நூல்களும் அடக்கம்.

நூல் அமைப்பு

அருள் ஒளி அன்னை தெரேசா காவியம், மூன்று காண்டங்களையும், 262 உட்தலைப்புகளையும், 843 பாடல்களையும் கொண்டுள்ளது. பெரும்பாலான பாடல்கள் அறுசீர் விருத்தத்தில் அமைந்துள்ளன. நூலின் நோக்கமாக, துரை. மாலிறையன், மண்ணில் வாழ்கின்ற உயிர்களுக்குத் தொண்டு செய்வதில் அன்னைத் தெரேசாவைப் போல வேறு யாரும் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்நூலைப் படைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் காண்டம்

அன்னை தெரேசா காவியத்தின் முதல் காண்டம் அன்னை தெரேசாவின் பிறப்பு, அவரது சமூக நற்பணிகள், அதனால் அவருக்குக் கிடைத்த பெருமைகளைப் பற்றிக் கூறுகிறது. இதில் 49 உட்தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. 201 பாடல்கள் இக்காண்டத்தில் அமைந்துள்ளன.

இரண்டாம் காண்டம்

அன்னை தெரேசா காவியத்தின் இரண்டாம் காண்டம், அன்னை தெரேசாவின் பல்வேறு விதமான தொண்டுகளைப் பற்றிக் கூறுகிறது. இக்காண்டம் 61 உட்தலைப்புகளைக் கொண்டது. இக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 308.

மூன்றாம் காண்டம்

அன்னை தெரேசா காவியத்தின் மூன்றாம் காண்டம், உலகத் தலைவர்கள் அன்னை தெரேசாவைப் பாராட்டியது குறித்தும், அன்னை தெரேசா பெற்ற பல்வேறு பட்டங்கள் குறித்தும், ஏழைகளுக்கு அவர் செய்த தொண்டுகளைப் பற்றியும் விளக்குகிறது. இக்காண்டத்தில் 102 உட்தலைப்புகள் உள்ளன. 239 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாடல்கள்

அன்பே சமயம்

புத்தரும் அன்பைத்தானே புகலிடம் என்றார் எந்தச்
சித்தரும் அன்பைத்தானே சிவமெனப் புகழ்ந்தார் வைண
வத்தாரும் அன்பைத்தானே வைத்தருள் மொழிந்தார் அன்னை
முத்தரும் அன்பைத்தானே முன்வைத்தே அருள்சுரந்தார்!

மனிதர்களின் முதல் கடமை

அமைதியில்லாதவர்க்கும் ஆறுதல் அளிக்க வேண்டும்
அமைகின்ற அன்புள்ளத்தால் அவர்களைக் காக்க வேண்டும்
சுமை வாழ்க்கை ஆகாவாறு சுற்றிலும் உள்ளவர் மேல்
நமதன்பைச் செலுத்துதல்தான் நம்முதல் கடமையாகும்!

அன்னை தெரேசா பொருள் வேண்டுதல்

இருகையை நீட்டிநீட்டி ஏதேனும் கொடுங்கள் என்று வருகையில்
உன்னிடம் பொருளிருந்தால் உதவுபோய் வீணில் இங்கே
என்னிடம்பொருளைக் கேட்டே எரிச்சல் பண்ணாதே எனினும்
தன்னிடம் பொன்னிருந்தும் தர மனம் இன்றிப் பொய்யே
மன்னிடும் நெஞ்சமாந்தன் மதிப்பின்றிப் பேசி வைத்தான்
அன்னையோ கைகள் நீட்டி அவனிடம் கெஞ்சி உம்பால்
பொன்னையோ மணியைத் தானோ போருகென் றுரைக்கவில்லை
சின்னதோர் பொருள் தந்தாலும் சிறப்பெனக் கொள்வேன் என்றார்

தொண்டின் பெருமை

அருளெலாம் உருக்கொண்டாற்போல் அன்னையும் உருவெடுத்தார்
இருளெலாம் நீக்கத் தோன்றும் எழிற்கதிர்ச் சூரியன் போல்
பெரும்பணிக் கதிர்கள் நீட்டிப் பேணியே வறுமை போக்கி
ஒருமணி என ஒளிர்ந்தார் உயர்த்திடும் தொண்டினாலே!

புண்மருந் திட்டுக் காத்தும் புதுத்துணிக் கட்டுப் போட்டும்
கண்மருந் திட்டுக் காத்தும் காதில்சீழ் துடைத்துக் காத்தும்
உண்மருந் திட்டுத் தீய்க்கும் உறுபசி போக்கிக் காத்தும்
மண்மருந்தாக அன்னை மலர்ந்திங்குத் தொண்டு செய்தார்

தாயற்ற குழந்தை கட்குத் தாயாகிக் காத்த தோடு
பாயற்ற ஏழை கட்கும் பாய் தந்தார் உணவைத் தந்தார்
வாயற்ற ஏழையோர் தம் வயிலுற்ற பசியைப் போக்கத்
தாயுற்ற தவிப்பை எந்தத் தறிநாடா உற்ற தம்மா?

அன்னை தெரேசாவின் பெருமை

அரியவள் நீயே அன்பை அளிப்பவள் நீயே தாய்க்கும்
பெரியவள் நீயே எம்மைப் பிரியாமல் இருப்பவள் நீயே
உரியவள் நீயே எங்கள் உடைமையும் நீயே மேன்மை
புரிபவள் தமிழே நீ உன் பொன்னடி வணங்குவேனே!

மதிப்பீடு

கிறிஸ்தவக் காப்பியங்களில், அருட் தொண்டரான அன்னை தெரேசாவைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரே காப்பியம் அருள் ஒளி அன்னை தெரேசா காவியம். பல்வேறு இலக்கியங்கள் கூறும் செய்திகளை அன்னை தெரேசாவின் வாழ்க்கை மற்றும் செயல்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார் ஆசிரியர், துரை. மாலிறையன். புத்தர், நபிகள் நாயகம், வள்ளலார், ராமகிருஷ்ண பரமஹம்சர், காந்தி போன்ற தலைவர்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளுடன் அன்னையின் செயல்பாடுகளைப் பொருத்தமான இடங்களில் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். உவமை, உருவகச் சிறப்பு, வர்ணனைகள் போன்ற இலக்கிய நயங்களுடன் துரை. மாலிறையனால் இயற்றப்பட்ட இக்காப்பியம், குறிப்பிடத்தக்கதொரு கிறிஸ்தவக் காப்பியமாக கருதப்படுகிறது.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2023, 05:38:12 IST