under review

தியடோர் பாஸ்கரன்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 32: Line 32:
ஆங்கிலத்தில் சுற்றுச்சூழலியல் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்த [[மா. கிருஷ்ணன்]] தியடோர் பாஸ்கரனின் முன்னுதாரணமாக திகழ்ந்தார். சூழியல் சார்ந்த பயணக்குறிப்புகள், நடைச்சித்திரங்கள் ஆகியவற்றை ஆங்கில இதழ்களில் எழுதினார். உயிர்மை இலக்கிய இதழின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் கோரியதற்கேற்ப 2002-ல் சூழியல் சார்ந்த கட்டுரைகளை தமிழிலும் எழுத ஆரம்பித்தார். ஒரு மொழியில் ஓர் அறிவுத்துறை நிலைகொள்ளவேண்டுமென்றால் அம்மொழியிலேயே கலைச்சொற்கள் தேவை என்பது தியடோர் பாஸ்கரனின் கருத்து. ஆகவே தமிழில் ஏற்கனவே இருந்து, புழக்கத்தில் இருந்து மறைந்துபோன சொற்களை கண்டடைந்து பயன்படுத்தினார். புதிய சொற்களையும் உருவாக்கினார்.சூழியல் சாந்த நூல்களையும் மொழியாக்கம் செய்தார்.

தியடோர் பாஸ்கரனின்  'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, 'தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.  உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை 'கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி தியடோர் பாஸ்கரன் எழுதிய The Dance of the Sarus (ஆக்ஸ்போர்ட் பல்கலை பதிப்பதம்) 1996-ல் வெளிவந்தது. பெங்குயின் பதிப்பகம் தியடோர் பாஸ்கரனை  தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 இல் வெளியிட்டது. தியடோர் பாஸ்கரன்
தியடோர் பாஸ்கரனின்  'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, 'தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.  உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை 'கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி தியடோர் பாஸ்கரன் எழுதிய The Dance of the Sarus (ஆக்ஸ்போர்ட் பல்கலை பதிப்பதம்) 1996-ல் வெளிவந்தது. பெங்குயின் பதிப்பகம் தியடோர் பாஸ்கரனை  தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 -ல் வெளியிட்டது. தியடோர் பாஸ்கரன்
[[File:தியடோர் பாஸ்கரன் மனைவியுடன் 1990.jpg|thumb|தியடோர் பாஸ்கரன் மனைவியுடன் 1990]]
[[File:தியடோர் பாஸ்கரன் மனைவியுடன் 1990.jpg|thumb|தியடோர் பாஸ்கரன் மனைவியுடன் 1990]]
தியடோர் பாஸ்கரன் குரங்குகள் பாதுகாப்புக் கழகம் (International Primate Protection League) அமைப்பின் தென்னிந்திய காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்.

== விருதுகள் ==
== விருதுகள் ==
* தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை 1997இல் பெற்றார்.
* தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை 1997-ல் பெற்றார்.
* கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2013 பெற்றார்  
* கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2013 பெற்றார்  
* வனவிலங்கு பாதுகாப்பில் அவரது பங்கு சரணாலய இயற்கை அறக்கட்டளையால் சரணாலய வாழ்நாள் சேவை விருது 2020 வழங்கப்பட்டது.  
* வனவிலங்கு பாதுகாப்பில் அவரது பங்கு சரணாலய இயற்கை அறக்கட்டளையால் சரணாலய வாழ்நாள் சேவை விருது 2020 வழங்கப்பட்டது.  
Line 95: Line 95:
*[https://oliyudayon.blogspot.com/2010/04/blog-post.html என்னைக் கவர்ந்த ஆளுமை ஒளியுடையோன்]  
*[https://oliyudayon.blogspot.com/2010/04/blog-post.html என்னைக் கவர்ந்த ஆளுமை ஒளியுடையோன்]  
*[https://web.archive.org/web/20140612064429/http://omnibus.sasariri.com/2013/05/blog-post_7575.html மீதி வெள்ளித்திரையில் கிருஷ்ணகுமார் ஆதவன்]
*[https://web.archive.org/web/20140612064429/http://omnibus.sasariri.com/2013/05/blog-post_7575.html மீதி வெள்ளித்திரையில் கிருஷ்ணகுமார் ஆதவன்]
*[https://web.archive.org/web/20110713134307/http://www.kalachuvadu.com/issue-89/interview.asp சினிமா பற்றி பேசுவதற்கான கலைச்சொற்களே இங்கு இல்லை. பேட்டி]
*[https://web.archive.org/web/20110713134307/http://www.kalachuvadu.com/issue-89/interview.asp சினிமா பற்றி பேசுவதற்கான கலைச்சொற்களே இங்கு -ல்லை. பேட்டி]
*[https://www.jeyamohan.in/138764/ கையிலிருக்கும் பூமி- வெண்ணி]
*[https://www.jeyamohan.in/138764/ கையிலிருக்கும் பூமி- வெண்ணி]
*[https://www.jeyamohan.in/97477/ கல்மேல் நடந்த காலம் கடலூர் சீனு]
*[https://www.jeyamohan.in/97477/ கல்மேல் நடந்த காலம் கடலூர் சீனு]
Line 103: Line 103:
== காணொளி ==
== காணொளி ==
* [https://www.youtube.com/watch?v=59cKL8tlWaI தியடோர் பாஸ்கரன் விஷ்ணுபுரம் நண்பர்களுடன் கலந்துரையாடல்]
* [https://www.youtube.com/watch?v=59cKL8tlWaI தியடோர் பாஸ்கரன் விஷ்ணுபுரம் நண்பர்களுடன் கலந்துரையாடல்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|14-Mar-2023, 19:06:39 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 16:17, 13 June 2024

To read the article in English: Theodore Baskaran. ‎

Theodore-1.jpg
தியடோர் பாஸ்கரன் 1979
தியடோர் பாஸ்கரன் இயல் விருது
தியடோர் பாஸ்கரன் மனைவியுடன்
தியடோர் பாஸ்கரன் தாய் தந்தையுடன் குழந்தையாக
தியடோர் பாஸ்கரன் மனைவியுடன் 1998
தியடோர் பாஸ்கரன் ராஜீவ்காந்தியுடன் 1985

சு. தியடோர் பாஸ்கரன் (பிறப்பு: ஏப்ரல் 1, 1940) தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர். தமிழில் சுற்றுச்சூழலியல் மற்றும் கானியல் சார்ந்த எழுத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். தமிழகக் கலை, தொல்லியல் சார்ந்தும் எழுதிவருகிறார். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதுகிறார்.

பிறப்பு, இளமை

தியடோர் பாஸ்கரன் தாராபுரத்தில் தனலட்சுமி, சுந்தர ராஜ் இணையருக்கு ஏப்ரல் 1, 1940-ல் பிறந்தார். பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து பின்னர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் 1960-ல் முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

Theodar baskaran.jpg

தியடோர் பாஸ்கரன் பட்டம் பெற்றவுடன், தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார். பின்னர் 1964-ல் இந்திய தபால் துறையில் சேர்ந்தார். திருச்சியில் இரண்டாண்டுகள் கோட்ட மேலாளராகப் பணிபுரிந்தபின் வேலூருக்கும் பின்னர் மேகாலயாவிற்கும் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவர் மேகாலயாவிலிருந்த போது 1971-ல் வங்காளதேச விடுதலைப் போர் மூண்டது. அப்போது பாஸ்கரன் தபால் தந்தித் துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் தனி அதிகாரியாக (Special Officer For War Efforts) நியமிக்கப்பட்டார். தபால் துறையில் பணிபுரிந்து கொண்டே திரைப்பட வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தபால் துறையில் தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக (Chief Postmaster General) ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001) பணியாற்றினார். ஐ.நா. சபையின் சார்பில் கென்யா நாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இரண்டு முறை இயற்கைக்கான உலக நிதியகத்தின் (WWF) அறங்காவலராக இருந்தார்.

தியடோர் பாஸ்கரன் மனைவி திலகா.மகள் நித்திலா, மகன் அருள். தியடோர் பாஸ்கரனின் மனைவி திலகா பாஸ்கரன் ஓர் எழுத்தாளர், உணவியல் சார்ந்தும் மருத்துவம் சார்ந்தும் எழுதியிருக்கிறார். அவருடைய தம்பி சு.கி.ஜெயகரன் நிலவியலாளர், எழுத்தாளர்.

அறிவுலகப் பங்களிப்பு

Theodore.jpg
தொடக்கம்

தியடோர் பாஸ்கரன் கலை மற்றும் வரலாற்றாய்வு சார்ந்த கட்டுரைகளை 1967 முதல் ஆங்கில நாளிதழ்களில் எழுதிவந்தார். தமிழக தொல்லியல்தடையங்கள் பற்றியும், சமண பௌத்த பண்பாடு பற்றியும் எழுதினார். கசடதபற இதழ் சார்ந்த குழுவினரான கிரியா எஸ்.ராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியவர்களோடு தொடர்பு உருவானது. அப்பொழுது யுனைடட் ஸ்டேட்ஸ் இன்ஃப்ர்மேஷன் சர்வீஸ் அரங்கத்தில் திரையிடப்பட்ட, ஆனந்த குமாரசுவாமியின் வாழ்க்கை பற்றி சிதானந்ததாஸ் குப்தா இயக்கிய DANCE OF SIVA என்ற படத்தைப்பார்த்து அதைப்பற்றி கசடதபற மார்ச் , 1975 இதழில் தன் முதல் கட்டுரையான 'சிவதாண்டவம் ஓர் அஞ்சலி' யை தேவபிச்சை என்ற பெயரில் எழுதினார்.

தொல்லியல், வரலாறு

தியடோர் பாஸ்கரன் மாணவராக இருக்கையில் இந்திய தொல்லியல் துறையின் முன்னோடிகளில் ஒருவராந மார்ட்டிமர் வீலரை சந்தித்திருக்கிறார். வரலாற்றாய்வாளர்களான கிரேஸ் மார்லி, மயிலை சீனி. வேங்கடசாமி ,சுரேஷ் பிள்ளை, சமண ஆய்வாளரான ஜீவபந்து ஶ்ரீபால் ஆகியோருடன் அறிமுகம் உருவாகியது. ஆங்கில இதழ்களில் வரலாறு, தொல்லியல் பற்றிய கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வந்தார். பின்னர் தமிழிலும் வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுநூல்களை எழுதினார். தமிழில் கல்மேல் நடந்த காலம் தொல்லியல் சார்ந்து தியடோர் பாஸ்கரன் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கது.

திரைப்படம்

தியடோர் பாஸ்கரன் 1970-ல் பெனெலொப் ஹூஸ்டன் (Penelope houston) எழுதிய The Contemporary cinema என்ற நூலை வாசித்தார். அதன் தாக்கத்தில் திரைப்படங்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 1974-ல் புனே தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக ஆனார். 1974-ல் அவருக்கு Indian Council of Historical Research அமைப்பின் நிதிநல்கை கிடைத்தது. அதை பயன்படுத்தி சுதந்திரப்போராட்டத்தில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு பற்றி ஆய்வு செய்தார். அலிகர் வரலாற்றாய்வு கருத்தரங்கில் (Indian History Congress) 1976ல் பிரிட்டிஷ் இந்தியாவில் திரைப்படத் தணிக்கை முறை அரசியல் கட்டுப்பாட்டுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டதைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். பின்னர் அக்கட்டுரையை The Message Bearers: The nationalist politics and the entertainment media in South India, 1880–1945, Chennai என்னும் நூலாக 1981ல் க்ரியா பதிப்பகம் வழியாக வெளியிட்டார்.

தொடர்ந்து ஊமைப்படங்கள் பற்றி The Eye of the Serpent: An introduction to Tamil cinema (1996) போன்ற நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார்.தமிழில் 1988ல் இனி இதழில் தேவபிச்சை என்ற பெயரில் திரைப்படப் பாடல்கள் பற்றிய கட்டுரையை எழுதினார். தொடர்ந்து சினிமா குறித்த ஆய்வுநூல்களை தமிழில் எழுதியிருக்கிறார்.

தியடோர் பாஸ்கரன் பெங்களூர் தேசிய உயர்கல்வி துறையில் (National Institute of Advanced Studies) முதுநிலை ஆய்வாளராக பணியாற்றினார். பிரின்ஸ்டன் பல்கலை, ஆஸ்திரேலிய தேசியப் பல்கலை, சிகாகோ பல்கலை உள்ளிட்ட கல்விநிலையங்களில் இந்திய திரைப்படம் பற்றி உரையாற்றியிருக்கிறார். 2001-ல் மிச்சிகன் பல்கலையில் வருகை தரு பேராசிரியராக இந்திய திரைப்படங்கள் பற்றி கற்பித்தார். தியடோர் பாஸ்கரன் இந்திய திரைப்படவிருதுகளுக்கான நடுவராக பணிபுரிந்துள்ளார். அவள் பெயர் தமிழரசி என்னும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சூழியல்

ஆங்கிலத்தில் சுற்றுச்சூழலியல் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்த மா. கிருஷ்ணன் தியடோர் பாஸ்கரனின் முன்னுதாரணமாக திகழ்ந்தார். சூழியல் சார்ந்த பயணக்குறிப்புகள், நடைச்சித்திரங்கள் ஆகியவற்றை ஆங்கில இதழ்களில் எழுதினார். உயிர்மை இலக்கிய இதழின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் கோரியதற்கேற்ப 2002-ல் சூழியல் சார்ந்த கட்டுரைகளை தமிழிலும் எழுத ஆரம்பித்தார். ஒரு மொழியில் ஓர் அறிவுத்துறை நிலைகொள்ளவேண்டுமென்றால் அம்மொழியிலேயே கலைச்சொற்கள் தேவை என்பது தியடோர் பாஸ்கரனின் கருத்து. ஆகவே தமிழில் ஏற்கனவே இருந்து, புழக்கத்தில் இருந்து மறைந்துபோன சொற்களை கண்டடைந்து பயன்படுத்தினார். புதிய சொற்களையும் உருவாக்கினார்.சூழியல் சாந்த நூல்களையும் மொழியாக்கம் செய்தார்.

தியடோர் பாஸ்கரனின் 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, 'தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை 'கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி தியடோர் பாஸ்கரன் எழுதிய The Dance of the Sarus (ஆக்ஸ்போர்ட் பல்கலை பதிப்பதம்) 1996-ல் வெளிவந்தது. பெங்குயின் பதிப்பகம் தியடோர் பாஸ்கரனை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 -ல் வெளியிட்டது. தியடோர் பாஸ்கரன்

தியடோர் பாஸ்கரன் மனைவியுடன் 1990

தியடோர் பாஸ்கரன் குரங்குகள் பாதுகாப்புக் கழகம் (International Primate Protection League) அமைப்பின் தென்னிந்திய காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்.

விருதுகள்

  • தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை 1997-ல் பெற்றார்.
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2013 பெற்றார்
  • வனவிலங்கு பாதுகாப்பில் அவரது பங்கு சரணாலய இயற்கை அறக்கட்டளையால் சரணாலய வாழ்நாள் சேவை விருது 2020 வழங்கப்பட்டது.
  • குருகு இணைய இதழ் 2023 மார்ச் மாதம் தியடோர் பாஸ்கரன் மலர் வெளியிட்டது

அறிவியக்க இடம்

தியடோர் பாஸ்கரன் தமிழ் திரைப்பட வரலாற்றாசிரியர்களில் முன்னோடியின் இடம் கொண்டவர். தமிழ் சூழியல் எழுத்திலும் முன்னோடியாக கருதப்படுகிறார். தியடோர் பாஸ்கரனின் எழுத்துநடை நுணுக்கமான செய்திகளை மிக இயல்பாக விவரிக்கும் தன்மையாலும், சங்க இலக்கியத்தில் இருந்தும் தொல்லியலில் இருந்தும் பெற்றுக்கொண்ட பண்பாட்டுக் குறிப்புகளாலும் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தக்க இலக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.

'தமிழ் சொற்களஞ்சியத்தை செம்மைபடுத்தியதிலும் இளம் தலைமுறையினரிடம் சூழியல் தொடர்பான விழிப்புணர்வை விதைத்ததிலும் தமிழ் மொழிக்கும் அதன் பண்பாட்டிற்கும் அவருடைய பங்களிப்பானது என்றென்றைக்குமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் மகத்தானதுமாகும்.' என தொல்லியலாளர் ஜோப் தாமஸ் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

தமிழ்

சூழியல்

  • மழைக்காலமும் குயிலோசையும்,(மா.கிருஷ்ணன்) (தொகுப்பாசிரியர்) (2003)
  • இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)
  • தாமரை பூத்த தடாகம் (2005)
  • நம்மைச்சுற்றிக் கானுயிர் 2014
  • இந்திய நாயினங்கள் 2017
  • கையில் இருக்கும் பூமி, சூழலியல் கட்டுரைகளின் மொத்த தொகுப்பு(2018)
  • விண்ணளந்த சிறகு 2021
  • யானைகளும் அரசர்களும் தாமஸ் டிரவுட் மான் (மொழியுயாக்கம் ப.ஜெகன்நாதன், தியடோர் பாஸ்கரன்
திரைப்படம்
  • எம் தமிழர் செய்த படம் (2004)
  • சித்திரம் பேசுதடி, காலச்சுவடு (தொகுப்பாசிரியர்)
  • தமிழ் சினிமாவின் முகங்கள், (2004)
  • பாம்பின் கண் ( மொழியாக்கம். மூலம் . The Eye of the Serpent) 2011
  • ராஜா சாண்டோ- டி.வி.ராம்நாத். (தொகுப்பு தியடோர் பாஸ்கரன்) 2012
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே, திரைப்படக் கட்டுரைகள், (2014)
  • தண்டோராக்காரர்கள் (மொழியாக்கம். மூலம் The Message Bearers) 2020
தொல்லியல்
  • கல் மேல் நடந்த காலம் (2016)
  • சோழர் காலச் செப்புப் படிமங்கள் -ஐ.ஜோப் தாமஸ் 2021( தமிழில் தியடோர் பாஸ்கரன்)

ஆங்கிலம்

  • தி மெசேஜ் பியரர்ஸ் - The Message Bearers: The nationalist politics and the entertainment media in South India, 1880-1945, Chennai: Cre-A (1981).
  • தி ஐ ஆஃப் தி செர்பெண்ட் - The Eye of the Serpent: An introduction to Tamil cinema, Chennai: East West Books (1996)
  • தி டான்ஸ் ஆஃப் தி சாரஸ் - The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist, Oxford University Press (1999)
  • ஹிஸ்டரி துரூ தி லென்ஸ் - History through the Lens - Perspectives on South Indian Cinema, Hyderabad: Orient Blackswan (2009)
  • சிவாஜி கணேசன் - Sivaji Ganesan: Profile of an Icon, Wisdom Tree, Delhi (2009)
  • தி ஸ்பிரிட் ஆஃப் தி பிளாக் பக் - (ed.) The Spirit of the Black Buck, Penguin (2010)
  • தி புக் ஆஃப் இந்தியன் டாக்ஸ். The Book of Indian Dogs - இந்திய நாய் இனங்கள் பற்றிய கட்டுரைகள்,

உசாத்துணை

காணொளி

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Mar-2023, 19:06:39 IST