under review

முதலாம் திருவந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Added First published date)
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 5: Line 5:
== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==
முதலியாண்டார் (ராமானுஜரின் மருமகன்) முதலாம்  திருவந்தாதிக்கு இயற்றிய பாயிரம் (தனியன்).  
முதலியாண்டார் (ராமானுஜரின் மருமகன்) முதலாம்  திருவந்தாதிக்கு இயற்றிய பாயிரம் (தனியன்).  
<poem>
<poem>
''கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,''
''கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,''
Line 12: Line 13:
</poem>
</poem>
முதல் பாடல்:
முதல் பாடல்:
<poem>
<poem>
''வையம் தகளியா வார்கடலே நெய்யாக,''
''வையம் தகளியா வார்கடலே நெய்யாக,''
Line 19: Line 21:
</poem>
</poem>
என்று தொடங்கி அந்தாதியாக 100 பாடல்களைக் கொண்ட முதல் திருவந்தாதி
என்று தொடங்கி அந்தாதியாக 100 பாடல்களைக் கொண்ட முதல் திருவந்தாதி
<poem>
<poem>
''ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
''ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
Line 26: Line 29:
</poem>
</poem>
என்ற பாடலோடு முடிவு பெறுகிறது. திருமாலின் 10 அவதாரங்களில் உலகளந்த பெருமாள் மற்றும் கண்ணன் இருவரும் முதலந்தாதியில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறார்கள்.
என்ற பாடலோடு முடிவு பெறுகிறது. திருமாலின் 10 அவதாரங்களில் உலகளந்த பெருமாள் மற்றும் கண்ணன் இருவரும் முதலந்தாதியில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறார்கள்.
முக்கியமான பாடல்கள் : பார்க்க [[பொய்கையாழ்வார்]]
முக்கியமான பாடல்கள் : பார்க்க [[பொய்கையாழ்வார்]]
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 35: Line 39:

{{Finalised}}
{{Fndt|16-Jan-2023, 12:40:50 IST}}

{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:50, 13 June 2024

முதலாம் திருவந்தாதி திருமாலைப் போற்றி பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூல். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் காலவரிசையில் முதன்முதலில் இயற்றப்பட்டது. மூன்றாம் ஆயிரத்தின் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அந்தாதி அமைப்பில் 100 பாடல்களைக் கொண்டது. பொய்கையாழ்வாரால் திருக்கோயிலூரில் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்து பாடப்பட்ட இவ்வந்தாதி " வையம் தகளியா வார்கடலே நெய்யாக" என்னும் வரியை முதலடியாக கொண்டு துவங்குகிறது.

தோற்றம்

முதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) மூவரும் திருக்கோயிலூரில் உலகளந்த பெருமாளின் ஆலயத்திற்கருகில் ஓர் இடைகழியில் மழைக்கு ஒதுங்கியபோது நான்காவது நபர் ஒருவர் தம்மை நெருக்குவதாக உணர்ந்தனர். இருட்டில் விளக்கு இல்லாமையால் பாசுரங்களால் விளக்கேற்ற எண்ணி பொய்கையாழ்வார் ' வையம் தகளியா வார்கடலே நெய்யாக' என்று தொடங்கி 100 பாசுரங்களை அந்தாதியாகப் பாடினார். இந்த நூறு பாசுரங்களும் 'முதலாம் திருவந்தாதி' எனப் பெயர் பெற்றன. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் முதன்முதலில் இயற்றப்பட்ட நூல் முதலாம் திருவந்தாதி. பார்க்க: முதலாழ்வார்கள்-திருக்கோயிலூரில் சந்திப்பு.

நூல் அமைப்பு

முதலியாண்டார் (ராமானுஜரின் மருமகன்) முதலாம் திருவந்தாதிக்கு இயற்றிய பாயிரம் (தனியன்).

கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து

முதல் பாடல்:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று

என்று தொடங்கி அந்தாதியாக 100 பாடல்களைக் கொண்ட முதல் திருவந்தாதி

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்தாயவனைக்
கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை

என்ற பாடலோடு முடிவு பெறுகிறது. திருமாலின் 10 அவதாரங்களில் உலகளந்த பெருமாள் மற்றும் கண்ணன் இருவரும் முதலந்தாதியில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறார்கள்.

முக்கியமான பாடல்கள் : பார்க்க பொய்கையாழ்வார்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jan-2023, 12:40:50 IST