under review

சாமுவேல் கிரீன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Tag: Reverted
(Added First published date)
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 7: Line 7:
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
[[File:மானிப்பாய் கிரீன் நூல்.jpg|thumb|மானிப்பாய் கிரீன் -அம்பிகைபாகர்]]
[[File:மானிப்பாய் கிரீன் நூல்.jpg|thumb|மானிப்பாய் கிரீன் -அம்பிகைபாகர்]]
சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் அக்டோபர் 10, 1822 அன்று கிரீன் ஹில், மாசசூசஸ்ட்டில் (Green Hill, Massachusetts) பிறந்தார். அவரது தந்தை வில்லியம் இ. கிரீன் தாயார் ஜூலியா பிளிம்ப்டன் இருவருக்கும் பிறந்த பதினொரு குழந்தைகளில் எட்டாவதாகப் பிறந்தார் சாமுவேல். தனது 11-ஆம் வயதில் தாயை இழந்த சாமுவேல் தனது இரண்டாவது தமக்கையின் கவனிப்பின் கீழ் வளர்ந்தார். இளமையில் அவர் உள்ளூர் பொதுப்பள்ளிக்கூடத்தில் பயின்றார், வீட்டிலும் அவரது கல்விக்கு ஆதரவு கிடைத்தது. தனது 18-ஆம் வயதில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டார். இவரது உடன் பிறந்தவர்களில் ஒருவரான ஆண்ட்ரூ ஹாஸ்வெல் கிரீன் (1820–1903) நியூயார்க் நகர வடிவமைப்பாளர்களுள் ஒருவர். 1841-ல் நியூ யார்க் சென்று ரெவ். டாக்டர். வாஹ்ன் என்னும் மதப் பணியாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்த தேவாலயங்களில் ஞாயிறு வகுப்புக்கள் போதிப்பதும், கூட்டங்களில் பங்கெடுப்பதுமாக பணியாற்றினார். மீதமிருந்த நேரங்களில் மருத்துவம் குறித்து படிக்கவும் உரைகளைக் கேட்கவும் ஆரம்பித்தார். ரத்த ஓட்டம் குறித்த உரை ஒன்றைக் கேட்ட அவர் மருத்துவத்தில் தீவிர ஆர்வம் கொண்டு 1841-ல் நியூயார்க் மருத்துவக்கல்லூரி (''The College of Physicians and Surgeons of New York'') யில் சேர்ந்து 1845-ல் பட்டம் பெற்றார்.
சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் அக்டோபர் 10, 1822 அன்று கிரீன் ஹில், மாசசூசஸ்ட்டில் (Green Hill, Massachusetts) பிறந்தார். அவரது தந்தை வில்லியம் இ. கிரீன் தாயார் ஜூலியா பிளிம்ப்டன் இருவருக்கும் பிறந்த பதினொரு குழந்தைகளில் எட்டாவதாகப் பிறந்தார் சாமுவேல். தனது 11-ம் வயதில் தாயை இழந்த சாமுவேல் தனது இரண்டாவது தமக்கையின் கவனிப்பின் கீழ் வளர்ந்தார். இளமையில் அவர் உள்ளூர் பொதுப்பள்ளிக்கூடத்தில் பயின்றார், வீட்டிலும் அவரது கல்விக்கு ஆதரவு கிடைத்தது. தனது 18-ம் வயதில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டார். இவரது உடன் பிறந்தவர்களில் ஒருவரான ஆண்ட்ரூ ஹாஸ்வெல் கிரீன் (1820–1903) நியூயார்க் நகர வடிவமைப்பாளர்களுள் ஒருவர். 1841-ல் நியூ யார்க் சென்று ரெவ். டாக்டர். வாஹ்ன் என்னும் மதப் பணியாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்த தேவாலயங்களில் ஞாயிறு வகுப்புக்கள் போதிப்பதும், கூட்டங்களில் பங்கெடுப்பதுமாக பணியாற்றினார். மீதமிருந்த நேரங்களில் மருத்துவம் குறித்து படிக்கவும் உரைகளைக் கேட்கவும் ஆரம்பித்தார். ரத்த ஓட்டம் குறித்த உரை ஒன்றைக் கேட்ட அவர் மருத்துவத்தில் தீவிர ஆர்வம் கொண்டு 1841-ல் நியூயார்க் மருத்துவக்கல்லூரி (''The College of Physicians and Surgeons of New York'') யில் சேர்ந்து 1845-ல் பட்டம் பெற்றார்.
== பணிகள் ==
== பணிகள் ==
கல்லூரி காலத்திலேயே வெளிநாட்டில் மதபோதகராகப் பணியாற்றும் விருப்பத்தைக் கொண்டிருந்த சாமுவேல் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப்பின் [[அமெரிக்க இலங்கை மிஷன்]] ஊழியராகச் சேர்ந்தார் .சென்னை வழியாக அக்டோபர் 6,1847 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தில் சென்றிறங்கினார். தொடக்கத்தில் வட்டுக்கோட்டை குருமடத்தில் இருந்த அவர் 1848-ல் மானிப்பாய்க்கு அனுப்பப்பட்டார். அங்கே மருத்துவராகவும் மதபோதகராகவும் செயல்பட்ட கிரீன் மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பித்து பயிற்சியாளராகவும் செயல்பட்டார். அவர் தொடங்கிய மருத்துவமனை இன்று கிரீன் நினைவு மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது.தமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிரீன், திருமணம் செய்து கொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பினார்.  

1848-ல் வட்டுக்கோட்டை குருமடத்திலிருந்து மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவ பயிற்சியை தொடங்கிய சாமுவேல் கிரீன் இருபத்தாறு வருடங்களில் மொத்தம் 87 தகுதிபெற்ற மருத்துவர்களை உருவாக்கினார். மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க அனுமதியும் நிதிஉதவியும் பெற்று 4,500 பக்கங்களுக்கும் மேலான மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். பல மருத்துவ நூல்களை தாமாகவே தமிழில் எழுதவும் செய்தார். மருத்துவர்களுக்கு தமிழில் மருத்துவம் கற்பித்ததை சில மாணவர்கள் விரும்பவில்லை என அறிந்தபோது மருத்துவர்கள் தங்கள் சொந்த ஊரில், சொந்த மக்களிடையே பணியாற்றவேண்டும் என்பதற்காகவே தமிழில் மருத்துவம் கற்பிக்கப்படுகிறது என்று கிரீன் குறிப்பிட்டார்  

"''எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்''" என்று கிரீன் எழுதினார்.  

மக்களுக்கு பொதுச் சுகாதாரம் குறித்த சிறுபுத்தகங்களையும் தமிழில் எழுதி வெளியிட்டார் அதில் ஒன்று 'பிராணொபகாரி' (1851) எனப் பெயரிடப்பட்டிருந்தது.ஆங்கிலேய அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கேற்ப யாழ்ப்பாணத்தில் 'ஃபிரண்ட்ஸ் இன் நீட்' (Friends in need) மருத்துவமனையைத் துவங்கினார். ஆரம்ப காலத்தில் அங்கே மருத்துவப்பணி செய்தவர்கள் முழுதும் சாமுவேலின் மாணவர்களாகவே இருந்தனர். கிரீன் தனக்குப்பின் ஒரு மருத்துவப் பணியாளர்களின் அணியையே விட்டுச்சென்றார். அமெரிக்கா சென்றபின்னரும் தமிழில் மருத்துவநூல்கள் வெளியிடும் பணியைத் தொடர்ந்தார்.  

== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
Line 19: Line 22:
== அங்கீகாரங்கள் ==
== அங்கீகாரங்கள் ==
கிரீனின் கடிதங்களும் வாழ்க்கைக் குறிப்பும் எபனேசர் கட்லர் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன.  
கிரீனின் கடிதங்களும் வாழ்க்கைக் குறிப்பும் எபனேசர் கட்லர் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன.  
1998-ல் கிரீனின் மருத்துவப் பள்ளியின் 150-Aவது ஆண்டை முன்னிட்டு இலங்கை அரசு ஒரு தபால்தலையை வெளியிட்டது. கிரீனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய [[இ.அம்பிகைபாகர் (அம்பி)|இ.அம்பிகைபாகர்]] (அம்பி) இதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்

== கிரீன் பற்றிய நூல்கள் ==
== கிரீன் பற்றிய நூல்கள் ==
Line 47: Line 51:
# [[வட்டுக்கோட்டை குருமடம்]]
# [[வட்டுக்கோட்டை குருமடம்]]
# ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
# ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:33:28 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மருத்துவர்கள்]]
[[Category:மருத்துவர்கள்]]

Latest revision as of 16:21, 13 June 2024

சாமுவேல் கிரீன்
சாமுவேல் கிரீன்
கிரீனின் முதல் மாணவர் குழு
க்ரீன்
கிரீன் அஞ்சல்தலை

சாமுவேல் கிரீன் (1822 - 1884 ) (Samuel Fisk Green) சிலோன் அமெரிக்க மிஷன் என்னும் மதப்பரப்புக் குழுவின் தலைவர். மருத்துவ பட்டம் பெற்று இரு வருடங்களில் இலங்கை சென்ற சாமுவேல் இலங்கையில் ஆங்கிலக் கல்வியை தொடங்கிவைத்த வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இலங்கையில் மருத்துவக் கல்லூரியைத் துவங்கி புது மருத்துவர்களை உருவாக்கினார். தமிழில் மருத்துவ நூல்களை மொழி பெயர்த்தார். தமிழில் ஆங்கில மருத்துவத்தைப் பற்றி எழுதியவர்களில் கிரீன் முன்னோடியாக கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

மானிப்பாய் கிரீன் -அம்பிகைபாகர்

சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் அக்டோபர் 10, 1822 அன்று கிரீன் ஹில், மாசசூசஸ்ட்டில் (Green Hill, Massachusetts) பிறந்தார். அவரது தந்தை வில்லியம் இ. கிரீன் தாயார் ஜூலியா பிளிம்ப்டன் இருவருக்கும் பிறந்த பதினொரு குழந்தைகளில் எட்டாவதாகப் பிறந்தார் சாமுவேல். தனது 11-ம் வயதில் தாயை இழந்த சாமுவேல் தனது இரண்டாவது தமக்கையின் கவனிப்பின் கீழ் வளர்ந்தார். இளமையில் அவர் உள்ளூர் பொதுப்பள்ளிக்கூடத்தில் பயின்றார், வீட்டிலும் அவரது கல்விக்கு ஆதரவு கிடைத்தது. தனது 18-ம் வயதில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டார். இவரது உடன் பிறந்தவர்களில் ஒருவரான ஆண்ட்ரூ ஹாஸ்வெல் கிரீன் (1820–1903) நியூயார்க் நகர வடிவமைப்பாளர்களுள் ஒருவர். 1841-ல் நியூ யார்க் சென்று ரெவ். டாக்டர். வாஹ்ன் என்னும் மதப் பணியாளரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்த தேவாலயங்களில் ஞாயிறு வகுப்புக்கள் போதிப்பதும், கூட்டங்களில் பங்கெடுப்பதுமாக பணியாற்றினார். மீதமிருந்த நேரங்களில் மருத்துவம் குறித்து படிக்கவும் உரைகளைக் கேட்கவும் ஆரம்பித்தார். ரத்த ஓட்டம் குறித்த உரை ஒன்றைக் கேட்ட அவர் மருத்துவத்தில் தீவிர ஆர்வம் கொண்டு 1841-ல் நியூயார்க் மருத்துவக்கல்லூரி (The College of Physicians and Surgeons of New York) யில் சேர்ந்து 1845-ல் பட்டம் பெற்றார்.

பணிகள்

கல்லூரி காலத்திலேயே வெளிநாட்டில் மதபோதகராகப் பணியாற்றும் விருப்பத்தைக் கொண்டிருந்த சாமுவேல் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்க இலங்கை மிஷன் ஊழியராகச் சேர்ந்தார் .சென்னை வழியாக அக்டோபர் 6,1847 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தில் சென்றிறங்கினார். தொடக்கத்தில் வட்டுக்கோட்டை குருமடத்தில் இருந்த அவர் 1848-ல் மானிப்பாய்க்கு அனுப்பப்பட்டார். அங்கே மருத்துவராகவும் மதபோதகராகவும் செயல்பட்ட கிரீன் மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பித்து பயிற்சியாளராகவும் செயல்பட்டார். அவர் தொடங்கிய மருத்துவமனை இன்று கிரீன் நினைவு மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது.தமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிரீன், திருமணம் செய்து கொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பினார்.

1848-ல் வட்டுக்கோட்டை குருமடத்திலிருந்து மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவ பயிற்சியை தொடங்கிய சாமுவேல் கிரீன் இருபத்தாறு வருடங்களில் மொத்தம் 87 தகுதிபெற்ற மருத்துவர்களை உருவாக்கினார். மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க அனுமதியும் நிதிஉதவியும் பெற்று 4,500 பக்கங்களுக்கும் மேலான மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். பல மருத்துவ நூல்களை தாமாகவே தமிழில் எழுதவும் செய்தார். மருத்துவர்களுக்கு தமிழில் மருத்துவம் கற்பித்ததை சில மாணவர்கள் விரும்பவில்லை என அறிந்தபோது மருத்துவர்கள் தங்கள் சொந்த ஊரில், சொந்த மக்களிடையே பணியாற்றவேண்டும் என்பதற்காகவே தமிழில் மருத்துவம் கற்பிக்கப்படுகிறது என்று கிரீன் குறிப்பிட்டார்

"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்" என்று கிரீன் எழுதினார்.

மக்களுக்கு பொதுச் சுகாதாரம் குறித்த சிறுபுத்தகங்களையும் தமிழில் எழுதி வெளியிட்டார் அதில் ஒன்று 'பிராணொபகாரி' (1851) எனப் பெயரிடப்பட்டிருந்தது.ஆங்கிலேய அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கேற்ப யாழ்ப்பாணத்தில் 'ஃபிரண்ட்ஸ் இன் நீட்' (Friends in need) மருத்துவமனையைத் துவங்கினார். ஆரம்ப காலத்தில் அங்கே மருத்துவப்பணி செய்தவர்கள் முழுதும் சாமுவேலின் மாணவர்களாகவே இருந்தனர். கிரீன் தனக்குப்பின் ஒரு மருத்துவப் பணியாளர்களின் அணியையே விட்டுச்சென்றார். அமெரிக்கா சென்றபின்னரும் தமிழில் மருத்துவநூல்கள் வெளியிடும் பணியைத் தொடர்ந்தார்.

பங்களிப்பு

சாமுவேல் கிரீன் யாழ்ப்பாணத்தில் காலரா காலகட்டத்தில் அவர் செய்த மருத்துவப்பணிக்காகவும், தமிழில் ஆங்கில மருத்துவம் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்கியமைக்காகவும், ஆங்கில மருத்துவம் பற்றிய நூல்களை உருவாக்கியமைக்காகவும் நினைவுகூரப்படுகிறார். தமிழில் இன்றும் ஏராளமான நோய்களுக்கு கிரீன் உருவாக்கிய சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. தன் பெயரை பச்சையப்பன் என்று மாற்றிக்கொண்டு தமிழிலேயே உரையாடியும் எழுதியும் பணியாற்றிய கிரீன் யாழ்ப்பாணத்தில் தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரப்படுகிறார்.

இறப்பு

1883-ல் காலரா தொற்றுக்கு ஆளான கிரீன் அமெரிக்கா சென்றார். அங்கே உடல்நிலை மேலும் நலிந்து 1884-ல் காலமானார். அவரது விருப்பபடி அவர் கல்லறையில் "தமிழர்களின் மருத்துவ மதபோதகர்" எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அங்கீகாரங்கள்

கிரீனின் கடிதங்களும் வாழ்க்கைக் குறிப்பும் எபனேசர் கட்லர் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன.

1998-ல் கிரீனின் மருத்துவப் பள்ளியின் 150-Aவது ஆண்டை முன்னிட்டு இலங்கை அரசு ஒரு தபால்தலையை வெளியிட்டது. கிரீனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இ.அம்பிகைபாகர் (அம்பி) இதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்

கிரீன் பற்றிய நூல்கள்

  • கிறீனின் அடிச்சுவடு (யாழ்ப்பாணம், 1967)- இ.அம்பிகைபாகர்
  • Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green (கொழும்பு, 1998) இ.அம்பிகைபாகர்

கிரீன் எழுதிய நூல்கள்

மருத்துவர் கிறீன் அவர்கள் மொத்தம் 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார். அவற்றில் சில:

  • கட்டரின் அங்காதிபாதம், சுகரணவாதம், உற்பாலனம் – Cutter's Anatomy, Physiology and Hygiene, (இரண்டாம் பதிப்பு: மதராஸ், 1857, பக். 204)
  • மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் – Maunsell's Obstetrics, 258ப., 1857
  • பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம் (Midwifery) (1857) [1]
  • துருவிதரின் இரணவைத்தியம் – Druitt's Surgery, 504ப., 1867
  • கிறேயின் அங்காதிபாதம் – Gray's Anatomy, 838ப., 1872
  • மனுசகரணம் – Dalton's Physiology, 590ப., 1883
  • வைத்தியாகரம் (Hooper's Physician's VadeMecum) உவில்லியம்போல் மொழிபெயர்ப்பு (நாகர்கோயில் லண்டன் மிஷன் பிரஸ், 1872)
  • கெமிஸ்தம் – Well's Chemistry, 516ப.,1875
  • வைத்தியம் (1875)
  • கலைச் சொற்கள் (1875)
  • இந்து பதார்த்த சாரம் – Pharmacopoeia of India, 1884 (மொழிபெயர்ப்பு உதவி)
  • வைத்தியம் – Practice of Medicine, 1884 (மொழிபெயர்ப்பு உதவி)
  • மனுஷ அங்காதி (Human Anatomy Compiled from Gray, Horner, Smith and Wilson) (மானிப்பாய் அச்சுக்கூடம், 1872)

உசாத்துணை

  1. மானிப்பாய் கிரீன். இணையநூலகம்
  2. கிரீன் அடிச்சுவட்டில்- இ அம்பிகைபாகர்
  3. Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green (கொழும்பு, 1998)
  4. Samuel Fisk Green: Medical Pioneer in South Asia, Columbia Medicine Journal,
  5. Life and letters of Samuel Fisk Green
  6. Pioneer of Scientific Tamil-Samuel Fisk Green
  7. வட்டுக்கோட்டை குருமடம்
  8. ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:28 IST