under review

தீபு ஹரி: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
Line 28: Line 28:
* [https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/276/articles/18-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2022-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88,-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF பொன்முகலிக்கு ஸ்பாரோ விருது- காலச்சுவடு]

* [https://saravananmanickavasagam.in/2021/11/10/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/ பொன்முகலி கவிதை பற்றி சரவணன் மாணிக்கவாசகம்]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|10-Apr-2023, 18:21:45 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 16:50, 13 June 2024

To read the article in English: Deepu Hari. ‎

தீபு ஹரி (பொன்முகலி)

தீபு ஹரி (பொன்முகலி) (பிறப்பு: நவம்பர் 18, 1983) தமிழில் எழுதி வரும் கவிஞர், சிறுகதையாசிரியர்.

பிறப்பு, கல்வி

தீபு ஹரி ஈரோடு மாவட்டம் தாசரிபாளையம் கிராமத்தில் சுப்புலக்ஷ்மி, நடராஜ் இணையருக்கு நவம்பர் 18, 1983-ல் பிறந்தார். பாரதி வித்யாலயா மெட்ரிக்குலேஷன், அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். கோவை நிர்மலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலைப் பட்டம் பெற்றார்.சிவந்தி கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

தீபு ஹரி 2008-2009-ல் பகுதி நேர விரிவுரையாளராக சென்னையில் பணியாற்றினார். ஜூன் 4, 2009-ல் நல்லசிவனை மணந்தார். மகள் நித்திலா.

இலக்கிய வாழ்க்கை

2018-ல் தீபு ஹரியின் முதல் கவிதை வெளியானது. 2019-ல் முதல் கவிதைத் தொகுப்பு "தாழம்பூ" தமிழினி பதிப்பகம் மூலம் வெளியானது. இலக்கிய ஆதர்சங்களாக பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, எமிலி டிக்கன்சன், தஸ்தோவெஸ்கி, எர்னஸ்ட் ஹெமிங்வே, பஷீர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். பொன்முகலி, தீபு ஹரி என்ற இரு பெயரிலும் எழுதி வருகிறார். இணைய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.

விருது

  • 2020-ல் கவிஞர் தக்கை வே. பாபு நினைவு கவிதை விருது வழங்கப்பட்டது.
  • 2022-ல் ஸ்பாரோ இலக்கிய விருது பொன்முகலிக்கு வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

”பொன்முகலியின் கவிதைகளில் இரண்டு முக்கியமான அம்சங்கள். ஒன்று கவிதைகளுக்குத் தேவைப்படும் அதீதம். அது காதல் என்றாலும் சரி, காற்றில் அசையும் கொடி கன்னத்தைத் தழுவுவது போலல்ல, ஆவேசமானது. கோபம் என்றாலும் ஆவேசமானது. இரண்டாவது அழகியல். உணர்ச்சி, ஒழுங்கமைதி, அழகியல் மூன்றும் சேர்கையில் அது முழுமை. அவையே பெரும்பாலான பொன்முகலியின் கவிதைகள்” என சரவணன் மாணிக்கவாசகம் குறிப்பிடுகிறார்.

நூல்கள் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • தாழம்பூ (2019)
  • ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது (2021)
சிறுகதைத் தொகுப்பு
  • கடவுளுக்குப் பின் (காலச்சுவடு, 2024)

வெளி இணைப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Apr-2023, 18:21:45 IST