under review

ஒக்கூர் மாசாத்தனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(6 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
ஒக்கூர் மாசாத்தனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கத்தொகை நூலான அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் உள்ளன.
ஒக்கூர் மாசாத்தனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கத்தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் உள்ளன.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஒக்கூர் மாசாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். ஒக்கூரைச் சேர்ந்தவர். சாத்தன் என்பது வணிகத்தொழில் செய்வோரைக் குறிக்கும் சொல்.  
ஒக்கூர் மாசாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். ஒக்கூரைச் சேர்ந்தவர். சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய இரு நாடுகளிலும் ஒக்கூர் இருந்தது. இவர் எந்த ஒக்கூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. சாத்தன் என்பது வணிகத்தொழில் செய்வோரைக் குறிக்கும் சொல்.
 
பார்க்க: [[சாத்தனார்]]
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ஒக்கூர் மாசாத்தனார் பாடிய பாடல்கள் அகநானூறு 14, புறநானூறு 248 ஆகியவற்றில் உள்ளன.
ஒக்கூர் மாசாத்தனார் பாடிய பாடல்கள் [[அகநானூறு]](14), [[புறநானூறு]] (248 ) ஆகிய சங்கத் தொகுப்புகளில் உள்ளன.
== பாடல் வழி அறியவரும் செய்திகள் ==
== பாடல் வழி அறியவரும் செய்திகள் ==
===== அகநானூறு 14 =====
===== அகநானூறு 14 =====
Line 9: Line 12:
* தலைவி பாணனிடம் சொல்லிக் கலங்கினாள். பிரிந்திருக்கும் தலைவனிடம் பாணன்  சென்று யாழிசையில் தலைவியின் நிலைமையை வெளிப்படுத்தினான். தலைவன் தலைவியிடம் வந்துசேர்ந்தான்.  
* தலைவி பாணனிடம் சொல்லிக் கலங்கினாள். பிரிந்திருக்கும் தலைவனிடம் பாணன்  சென்று யாழிசையில் தலைவியின் நிலைமையை வெளிப்படுத்தினான். தலைவன் தலைவியிடம் வந்துசேர்ந்தான்.  
* மேய்ந்த பசுக்கள் கன்றை நினைத்துக்கொண்டு இல்லம் திரும்பும் மாலை வேளையிலேயே என்னை நினைக்காத என் தலைவர் காலையில் என்னை நினைப்பாரா - தலைவி பாணனை வினவுகிறாள்.
* மேய்ந்த பசுக்கள் கன்றை நினைத்துக்கொண்டு இல்லம் திரும்பும் மாலை வேளையிலேயே என்னை நினைக்காத என் தலைவர் காலையில் என்னை நினைப்பாரா - தலைவி பாணனை வினவுகிறாள்.
* முல்லைநிலம்: அரக்குப் போல செம்மண் நிலம். அதன் வழியிலெல்லாம் உதிர்ந்து கிடக்கும் காயாம் பூக்கள். ஈ அல்லாத மூதாய்ப் பூச்சி வரிவரியாக மேய்கின்றன. இந்தக் காட்சிகளால் குன்றமே பவளமும் மணியும் (நீலம்) கோத்து வைத்தது போலத் தோன்றுகிறது. இங்குள்ள காடுகளில் பெண்மானைத் தழுவிக்கொண்டு கலைமான் புல்லை மேய்ந்துவிட்டுத் துள்ளி விளையாடுகின்றன.
* முல்லைநிலம்: அரக்குப் போல செம்மண் நிலம். அதன் வழியிலெல்லாம் உதிர்ந்து கிடக்கும் காயாம் பூக்கள். ஈ அல்லாத மூதாய்ப் பூச்சிகள் வரிவரியாக மேய்கின்றன. இந்தக் காட்சிகளால் குன்றமே பவளமும் மணியும் (நீலம்) கோத்து வைத்தது போலத் தோன்றுகிறது. இங்குள்ள காடுகளில் பெண்மானைத் தழுவிக்கொண்டு கலைமான் புல்லை மேய்ந்துவிட்டுத் துள்ளி விளையாடுகிறது.
* ஆனிரை மீளும் மாலைநேரம்: கோவலர் தம் ஆனிரைகளை எங்கும் மேயும்படி விட்டிருக்கிறார்கள். பாறையில் ஏறிக் கிடக்கும் முல்லைப் பூக்களைப் பறித்து விளையாடுகின்றனர். பசுக்கள் மதமதப்போடு நடந்து அறுகம்புல்லை மேய்கின்றன. அதன் மடி வீங்குகிறது. பால் ஒழுகுகிறது. தம் கன்றுகளை நினைத்துக்கொண்டு அவை இருக்கும் மன்றத்துக்கு மீள்கின்றன.
* ஆனிரை மீளும் மாலைநேரம்: கோவலர் தம் ஆனிரைகளை எங்கும் மேயும்படி விட்டிருக்கிறார்கள். பாறையில் ஏறிக் கிடக்கும் முல்லைப் பூக்களைப் பறித்து விளையாடுகின்றனர். பசுக்கள் மதமதப்போடு நடந்து அறுகம்புல்லை மேய்கின்றன. அவற்றின் மடி வீங்குகிறது. பால் ஒழுகுகிறது. தம் கன்றுகளை நினைத்துக்கொண்டு அவை இருக்கும் மன்றத்துக்கு மீள்கின்றன.
* போர்முனையில் வெற்றி கண்ட வீரனான தலைவன் தேரில் புறப்பட்டான். தேர்க் குதிரையை இழுத்துப்பிடிக்காமல் முடுக்கிவிட்டான். தேர்ச்சக்கரம் கல்லில் மோதி உருண்டது. அதன் ஓசை மழைமேகம் இடிப்பது போல இருந்தது.
* போர்முனையில் வெற்றி கண்ட வீரனான தலைவன் தேரில் புறப்பட்டான். தேர்க் குதிரையை இழுத்துப்பிடிக்காமல் முடுக்கிவிட்டான். தேர்ச்சக்கரம் கல்லில் மோதி உருண்டது. அதன் ஓசை மழைமேகம் இடிப்பது போல இருந்தது.
===== புறநானூறு 248 =====
===== புறநானூறு 248 =====
Line 17: Line 20:
* கைம்மை: பெருவளம் படைத்திருந்த கொழுநன் இறந்துவிட்டதால், வைகறைப் பொழுதில் பொழுது மறுத்துப் புல்லரிசிச் சோறு உண்ணும் தலைவி
* கைம்மை: பெருவளம் படைத்திருந்த கொழுநன் இறந்துவிட்டதால், வைகறைப் பொழுதில் பொழுது மறுத்துப் புல்லரிசிச் சோறு உண்ணும் தலைவி
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
* அகநானூறு 14  
* அகநானூறு 14 ([[முல்லைத் திணை]])
<poem>
<poem>
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
Line 45: Line 48:
</poem>
</poem>


* புறநானூறு 248 (திணை: பொதுவியல்; துறை: தாபதநிலை)
* புறநானூறு 248 (திணை: [[பொதுவியல் திணை|பொதுவியல்]]; துறை: தாபதநிலை)
<poem>
<poem>
அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
Line 54: Line 57:
</poem>
</poem>
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
* [https://www.tamilvu.org/ta/library-l1270-html-l1270235-125380 ஒக்கூர் மாசாத்தனார்: tamilvu]
* [https://www.tamilvu.org/ta/library-l1270-html-l1270235-125380 ஒக்கூர் மாசாத்தனார்: tamilvu]


{{Being created}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:13, 3 June 2024

ஒக்கூர் மாசாத்தனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கத்தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

ஒக்கூர் மாசாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். ஒக்கூரைச் சேர்ந்தவர். சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய இரு நாடுகளிலும் ஒக்கூர் இருந்தது. இவர் எந்த ஒக்கூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. சாத்தன் என்பது வணிகத்தொழில் செய்வோரைக் குறிக்கும் சொல்.

பார்க்க: சாத்தனார்

இலக்கிய வாழ்க்கை

ஒக்கூர் மாசாத்தனார் பாடிய பாடல்கள் அகநானூறு(14), புறநானூறு (248 ) ஆகிய சங்கத் தொகுப்புகளில் உள்ளன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

அகநானூறு 14
  • பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
  • தலைவி பாணனிடம் சொல்லிக் கலங்கினாள். பிரிந்திருக்கும் தலைவனிடம் பாணன் சென்று யாழிசையில் தலைவியின் நிலைமையை வெளிப்படுத்தினான். தலைவன் தலைவியிடம் வந்துசேர்ந்தான்.
  • மேய்ந்த பசுக்கள் கன்றை நினைத்துக்கொண்டு இல்லம் திரும்பும் மாலை வேளையிலேயே என்னை நினைக்காத என் தலைவர் காலையில் என்னை நினைப்பாரா - தலைவி பாணனை வினவுகிறாள்.
  • முல்லைநிலம்: அரக்குப் போல செம்மண் நிலம். அதன் வழியிலெல்லாம் உதிர்ந்து கிடக்கும் காயாம் பூக்கள். ஈ அல்லாத மூதாய்ப் பூச்சிகள் வரிவரியாக மேய்கின்றன. இந்தக் காட்சிகளால் குன்றமே பவளமும் மணியும் (நீலம்) கோத்து வைத்தது போலத் தோன்றுகிறது. இங்குள்ள காடுகளில் பெண்மானைத் தழுவிக்கொண்டு கலைமான் புல்லை மேய்ந்துவிட்டுத் துள்ளி விளையாடுகிறது.
  • ஆனிரை மீளும் மாலைநேரம்: கோவலர் தம் ஆனிரைகளை எங்கும் மேயும்படி விட்டிருக்கிறார்கள். பாறையில் ஏறிக் கிடக்கும் முல்லைப் பூக்களைப் பறித்து விளையாடுகின்றனர். பசுக்கள் மதமதப்போடு நடந்து அறுகம்புல்லை மேய்கின்றன. அவற்றின் மடி வீங்குகிறது. பால் ஒழுகுகிறது. தம் கன்றுகளை நினைத்துக்கொண்டு அவை இருக்கும் மன்றத்துக்கு மீள்கின்றன.
  • போர்முனையில் வெற்றி கண்ட வீரனான தலைவன் தேரில் புறப்பட்டான். தேர்க் குதிரையை இழுத்துப்பிடிக்காமல் முடுக்கிவிட்டான். தேர்ச்சக்கரம் கல்லில் மோதி உருண்டது. அதன் ஓசை மழைமேகம் இடிப்பது போல இருந்தது.
புறநானூறு 248
  • கைம்மை நோன்பு: ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு. அதுவும் பொழுது புலர்வதற்கு முன்னர் ஆம்பல் இலையில் புல்லரிசி உணவு.
  • இவள் இளமையாக இருந்த காலத்தில் இந்த ஆம்பல் இவளது காதலன் தொடுத்துத் தந்த தழையாடையாக இருந்தது.
  • கைம்மை: பெருவளம் படைத்திருந்த கொழுநன் இறந்துவிட்டதால், வைகறைப் பொழுதில் பொழுது மறுத்துப் புல்லரிசிச் சோறு உண்ணும் தலைவி

பாடல் நடை

'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ,
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்

குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற,
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்கு ஆகுவம்கொல்? பாண! என்ற

மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென,
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே

விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார் மழை முழக்கு இசை கடுக்கும்,
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
இளையம் ஆகத் தழையா யினவே; இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே.

உசாத்துணை

  • சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
  • ஒக்கூர் மாசாத்தனார்: tamilvu


✅Finalised Page