under review

லோகேஷ் ரகுராமன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected errors in article)
 
(One intermediate revision by one other user not shown)
Line 2: Line 2:
லோகேஷ் ரகுராமன் (பிறப்பு: மே 23, 1990) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.
லோகேஷ் ரகுராமன் (பிறப்பு: மே 23, 1990) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
லோகேஷ் ரகுராமன் திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்தை அடித்துள்ள எரவாஞ்சேரியில் என்.எஸ். நடேசன், வேதாம்பாள் இணையருக்கு மே 23, 1990-ல் பிறந்தார். அக்கா மதுமதி. அரசர் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பொறியியலில் (CSE) இளங்கலைப் பட்டம் பெற்றார்.
லோகேஷ் ரகுராமன் திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்தை அடுத்துள்ள எரவாஞ்சேரியில் என்.எஸ். நடேசன், வேதாம்பாள் இணையருக்கு மே 23, 1990-ல் பிறந்தார். அக்கா மதுமதி. அரசர் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பொறியியலில் (CSE) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
Line 14: Line 14:
   
== விருதுகள் ==
== விருதுகள் ==
* சாகித்ய அகாதமியின் 2024-ஆம் ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருது பெற்றார்.
* சாகித்ய அகாதமியின் 2024-ம் ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருது பெற்றார்.

== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==

Latest revision as of 00:19, 17 June 2024

லோகேஷ் ரகுராமன்

லோகேஷ் ரகுராமன் (பிறப்பு: மே 23, 1990) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.

பிறப்பு, கல்வி

லோகேஷ் ரகுராமன் திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்தை அடுத்துள்ள எரவாஞ்சேரியில் என்.எஸ். நடேசன், வேதாம்பாள் இணையருக்கு மே 23, 1990-ல் பிறந்தார். அக்கா மதுமதி. அரசர் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பொறியியலில் (CSE) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

லோகேஷ் ரகுராமன் டிசம்பர் 15, 2019-ல் ஜெயசுகந்தியை திருமணம் செய்து கொண்டார். மகன் அத்வைத். தகவல் தொழில்நுட்பத் துறையில் (நெட்வொர்க்கிங் டொமைன்) பணியாற்றுகிறார். குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

லோகேஷ் ரகுராமனின் முதல் சிறுகதை 'திருஷ்டி' சொல்வனம் இதழில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு 'விஷ்ணு வந்தார்' சால்ட் பதிப்பகம் வழியாக 2023-ல் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சங்களாக புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

"பரிணாம வளர்ச்சியின் படிநிலையில் முன்வரிசையில் இருக்கும் மனிதன், புறத்தே இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சகட்ட வசதிகளை துய்த்திடும் அதேவேளையில், அகத்தே மொழியில் புழங்கும் தொல்பழங்காலத் தொன்மங்களில் ஆசுவாசம் தேடும் ஒருவனாகவும் இருக்கிறான். உலகியல் வாழ்வின் நிதர்சனமும், உள்ளத்தில் ஊறி நிற்கும் பாரம்பரிய நம்பிக்கைகளும் ஒன்றையொன்று எதிரிடும் தருணங்களின் தத்தளிப்புகளை உன்னித்து நோக்கி ஆராய்பவையென இத்தொகுப்பிலுள்ள கதைகளை பொதுவாகச் சுட்டலாம்." என க. மோகனரங்கன் லோகேஷ் ரகுராமனின் அரோமா சிறுகதை குறித்து மதிப்பிட்டுள்ளார்.

விருதுகள்

  • சாகித்ய அகாதமியின் 2024-ம் ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருது பெற்றார்.

நூல் பட்டியல்

சிறுகதைத்தொகுப்பு
  • விஷ்ணு வந்தார் (2023)
  • அரோமா (2024)

இணைப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2024, 19:56:41 IST