under review

ஷெய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான்

From Tamil Wiki

ஷெய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ் சூஃபி கவிஞர், சூஃபி ஞானி. பீர்முகம்மது அப்பாவை குருவாகக் கொண்டவர்.

வாழ்க்கைக்குறிப்பு

ஷெய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான் திருவனந்தபுரம் கனியாபுரத்தில் பிறந்தார். தந்தை சுலைமான் மகன் ஹசன். பீர்முகம்மது அப்பாவை குருவாகக் கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

ஷெய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான் பாடிய 'ஞானவாக்கியம்' 1928-ல் பதிப்பிக்கப்பட்டது. நூற்றி இருபத்து நான்கு பாடல்களால் ஆனது. அருளப்ப முதலியார், அப்துல் காதிர், நாணாணாசான், குலாம் காதிறு ஆகியோர் இதற்கு சாற்றுக்கவிகள் வழங்கினர்.

பாடல் நடை

தன்னையறியார் தலைவனையுந் தானறியார்
உன்னை வணங்குதற்கிங்கு தவிசெய்வதெக்காலம்
தன்னையறிந்து தலைவனைச் சோந்தார்க்குப்
பின்னறிவே தூக்குச் சொல் மனமே

நூல்கள் பட்டியல்

  • ஞானமணிமாலை
  • பீர் முறாதுக்கண்ணி
  • ஞானவாக்கியம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Feb-2024, 21:19:07 IST