under review

வைரமுத்து சுப்பிரமணியம்

From Tamil Wiki
வைரமுத்து சுப்பிரமணியம் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

வைரமுத்து சுப்பிரமணியம் (பிறப்பு:ஏப்ரல் 18, 1920) ஈழத்து நாட்டுக்கூத்து மற்றும் கிராமியக்கலை கலைஞர். நாடகங்கள் பல நடித்ததுடன், நெறியாள்கை செய்து அரங்கேற்றிய அண்ணாவியார். பாட்டுக்காவடி பழக்கும் அண்ணாவியார், கூத்துக்கான பாடல்களை இயற்றிய கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

வைரமுத்து சுப்பிரமணியம் இலங்கை உடுத்துறை, மருதங்கேணியில் பிறந்தார். வடமராட்சி கிழக்கின் முதல் அண்ணாவியாரான வைரமுத்து சின்னையா(அப்புக்குட்டி அண்ணாவியார்) வைரமுத்து சுப்பிரமணியத்தின் சகோதரர்.

கலை வாழ்க்கை

வைரமுத்து சுப்பிரமணியம் இருபத்ததி ஐந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மேடைகளில் ஏறினார். கதாநாயகன், நாயகி என இருபால் வேடங்களிலும் நடித்தார். வைரமுத்து சுப்பிரமணியம் தன் நாடகங்களை 1940-55 காலகட்டங்களில் உடுத்துறை, அழியவளை, வெற்றிலைக்கேணி, தட்டுவன்கொட்டி, வத்திராயன் ஆகிய இடங்களில் மேடையேற்றினார். பத்து பேர் கொண்ட குழுவாக பாட்டுக்காவடி பழக்கி வருடமிருமுறை திரியாய் அம்மன், உடுத்துறை ஐந்தாம் மனை பிள்ளையார் ஆகிய ஆலயங்களில் இருபத்தி ஐந்து வருடங்கள் தொடர்ந்து மேடையேற்றினார். கூத்துக்காக பாட்டுக்களை இயற்றும் கவிஞராகவும் திகழ்ந்தார்.

சீடர்கள்
  • சி. துரைச்சாமி அண்ணாவியார்
  • முத்துவேலு அண்ணாவியார்
  • த. குலசேகரம் கலைஞர்

நடித்த கூத்துக்கள்

  • கோவலன் கண்ணகி - கண்ணகி
  • நல்லதங்காள் - நல்லதம்பி
  • ராமாயணம் - அனுமான்
  • காத்தவராயன் - சின்னான்

அரங்கேற்றிய கூத்துகள்

  • கண்ணகி
  • பிரகலாதன்
  • சம்பூர்ணராமாயணம்
  • குசலவன்
  • நல்லதங்காள்
  • பூதத்தம்பி

உசாத்துணை


✅Finalised Page