under review

வி. விசாலாட்சி அம்மாள்

From Tamil Wiki
வி. விசாலாட்சி அம்மாள் (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

வி. விசாலாட்சி அம்மாள் (மறைவு: 1978) சிறுகதையாசியர், கட்டுரையாளர். "மூன்றில் எது?" முக்கியமான சிறுகதை. இக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு அடங்கிய சிறுகதைத் தொகுப்பு 2018-ல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.

வாழ்க்கைக் குறிப்பு

அ. மாதவையா -ன் ஐந்து மகள்களில் ஒருவர். உடன்பிறந்த சகோதரர்கள் மூன்று பேர். 1912-ல் விஸ்வநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். விஸ்வநாதன் அக்காலத்தின் புகழ்பெற்ற நீதிபதி டி. சதாசிவ ஐயர்-மங்களம் அம்மாள் தம்பதியினரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

"மூன்றில் எது?", "தூரத்துப்பச்சை", "மேஸ்திரி கோவிந்தன் கதி" ஆகிய சிறுகதைகளை 1924-ல் பஞ்சாமிர்தம் (இதழ்)ல் எழுதினார். இவற்றில் மூன்றில் எது? சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, "The TamilStory" என்னும் தொகுப்பில் (தேர்வு:திலீப்குமார், மொழிபெயர்ப்பு:சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி) "Of the three Which one" என்ற தலைப்பில் வெளியானது. 2018-ல் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது இந்நூலுக்குக் கிடைத்துள்ளது.

எம். லஷ்மி அம்மாள் கலைமகள் இதழின் கெளரவ ஆசிரியர்களுள் ஒருவராக இருந்தபோது விசாலாட்சி அம்மாள் அவ்விதழில் மாதர் பகுதியில் கட்டுரைகள், குறிப்புகள், துணுக்குகள் எழுதினார். 'காசினி’ என்ற பெயரில் சுதேசமித்ரன் இதழில் பல கட்டுரைகள் எழுதினார். ஆனந்தபோதினி இதழிலும் ’காசினி’ என்ற பெயரில் சிறுகதைகள் வெளியாகின. மாதவையாவின் மகன்கள், மகள்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 'முன்னிலா’ என்ற தொகுப்பாக தினமணி காரியாலயம் 1944-ல் நூல் வெளியிட்டது. இத்தொகுப்பிலுள்ள சில சிறுகதைகள் பஞ்சாமிர்தம் இதழில் வெளியானது.

மறைவு

வி. விசாலாட்சி அம்மாள் 1978-ல் காலமானார்.

நூலகள் பட்டியல்

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


✅Finalised Page