under review

முத்துலட்சுமி ராகவன்

From Tamil Wiki
முத்துலட்சுமி ராகவன்
முத்துலட்சுமி ராகவன்
முத்துலட்சுமி ராகவன் கணவருடன்

முத்துலட்சுமி ராகவன் (1967 - மே 18, 2021) தமிழில் பொதுவாசிப்புக்கான நாவல்களை எழுதிய எழுத்தாளர். பெண்களின் வாழ்க்கையை முன்வைத்து எளிமையான நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளுடன் எழுதப்படும் படைப்புகளை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

முத்துலட்சுமி ராகவன் மதுரையில் பிறந்தார். மதுரையில் பட்டப்படிப்பு முடிக்கும் முன்னரே திருமணம் ஆகியது. திருமணத்திற்குப்பின் தொலைகல்விமுறையில் முதுகலைப் படிப்பை முடித்தார்

தனிவாழ்க்கை

முத்துலட்சுமி ராகவன் திருமணத்திற்குப்பின் திண்டுக்கல்லில் தபால்துறையில் ஊழியராக பணிக்குச் சேர்ந்தார். மூளையில் காசநோய் தாக்கியதனால் நீண்டநாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அப்போதுதான் எழுத ஆரம்பித்தார். முத்துலட்சுமி ராகவனின் கணவர் ராகவன் உரம் தயாரிக்கும் தொழிலைச் செய்துவந்தார். பின்னர் லட்சுமி பாலாஜி பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை தொடங்கி முத்துலட்சுமி ராகவனின் நூல்களை வெளியிடுகிறார். அருண் பதிப்பகம் என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர்களுடைய ஒரே மகன் பாலச்சந்தர் டாக்டராக இருக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

முத்துலட்சுமி ராகவன் தன் 24-வது வயதில் தொடுவானம் என்னும் நாவலை எழுதி அதை பாக்கெட் நாவல் அசோகனுக்கு அனுப்பினார். அந்நாவல் நிராகரிக்கப்படவே 16 ஆண்டுகள் எழுதியவற்றை தன்னிடமே வைத்துக்கொண்டார். நோயில் இருந்து மீண்டபின்னர் 2007-ல் தன் நாவலொன்றை அருணோதயம் பதிப்பகத்துக்கு அனுப்பினார். நிலாவெளியில் என்னும் அந்நாவல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முத்துலட்சுமி ராகவன் 200 நாவல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் என்னவென்று நான் சொல்ல என்பதே தனக்கு பிரியமான நாவல் என்று சொல்கிறார். முத்துலட்சுமி ராகவனுக்கு பிடித்த நாவலாசிரியர் வாசந்தி.

மறைவு

முத்துலட்சுமி ராகவன் மே 18, 2021-ல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

இலக்கிய இடம்

லக்ஷ்மி , ரமணி சந்திரன் என தமிழில் பெண்களால் பெண்களுக்காக எழுதப்படும் குடும்பப்பின்னணி கொண்ட கற்பனாவாத நாவல்களின் வரிசையில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி ராகவன். லக்ஷ்மியின் கதைகள் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட இலக்கியப்படைப்புக்களின் எளிய வடிவங்கள். ஜேன் ஆஸ்டன், எமிலி புரோண்டே போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் மேலோட்டமான செல்வாக்கு கொண்டவை. ரமணி சந்திரனின் நாவல்கள் மேலும் எளிமையானவை, மில்ஸ் ஆண்ட் பூன் நாவல்களை முன்மாதிரியாகக் கொண்டவை. முத்துலட்சுமி ராகவனின் நாவல்கள் மேலும் எளிமையானவை. கதைக்கருக்களை அவை தமிழ்சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து எடுத்துக்கொண்டு வெவ்வேறு வகையில் கூறிப்பார்க்கின்றன. வேறுபட்ட வாழ்க்கைப்புலங்களோ நிகழ்வுகளோ இருப்பதில்லை. காதல், குடும்பப்பூசல் சதிகள், திருப்பங்கள், மெல்லுணர்வுகள், நாடகீய நிகழ்வுகள் என அமைந்துள்ளன. ஏற்கனவே வாசகர்கள் அறிந்த சினிமா, தொலைக்காட்சி கதைக்கருக்களை கொண்டவை என்பதனால் பொது வாசர்களை கவர்பவை.

நூல்கள்

  • தொடுவானம்
  • நிலாவெளியில்
  • நிழலோடு நிழலாக
  • நிலவே நீ சாட்சி
  • அக்கினி பறவை
  • காதலின் பொன்வீதியில்
  • நதியோரம் நடந்தபோது
  • காத்திருந்தேன் காற்றினிலே
  • வென்று விடு என் மனதை
  • உயிரே.. உனைத்தேடி
  • ஊஞ்சலாடும் உள்ளம்
  • மௌனத்தின் குயிலோசை
  • பூக்கோலம் போடவா
  • உன்னோடு ஒருநாள்
  • இதயத்தின் சாளரம்
  • மனதில் ஓர் ஓவியம்
  • நெஞ்சமடி நெஞ்சம்
  • ஏதோ ஓர் நதியில்
  • நிலாக்கால நினைவுகள்
  • சொன்னது நீதானா
  • பூவே மயங்காதே
  • தென்றலைத் தேடி
  • நீ எந்தன் வெந்நிலவு
  • நீங்காத நினைவுகள்
  • இனிதாக ஒரு விடியல்
  • கல்லூரி காலத்திலே
  • மலர்ந்தும் மலராமல்
  • உன்னை விட ஓர் உறவா..
  • நீ சொன்ன வார்த்தை 3
  • கடலில் கலந்த நதி
  • நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
  • முகில் மறைத்த நிலவு
  • தீயாக உனைக் கண்டேன்
  • எனக்கென்று ஓர் இதயம்
  • பனித்திரை
  • காற்றோடு தூது விட்டேன்
  • சந்தித்தேன்.. சிந்தித்தேன்
  • யார் அந்த நிலவு
  • யாரோடு யாரோ.
  • மாறியது நெஞ்சம்
  • ஊமையின் ராகம்
  • நேசம் மட்டும் நெஞ்சினிலே
  • கனாக் கண்டேன்
  • அன்றொரு நாள் இதே மழையில்
  • பூவொன்றைக் கண்டேன்.
  • கீதையின் ராதை
  • உறங்காத உள்ளம்
  • நீயின்றி நானில்லை
  • வார்த்தை தவறியது ஏனோ?
  • உன் மனதைத் தந்துவிடு
  • கனல் வீசும் காதல்
  • என்னவென்று நான் சொல்ல..? (3 பாக நாவல்)
  • தன்னந்தனிமையிலே
  • அந்தி மழை பொழிகிறது
  • நீதானே எனது நிழல்
  • காதலாகி கசிந்துருகி
  • ஒற்றையடிப் பாதையிலே
  • பூவும் புயலும்
  • ஆற்றங்கரை அருகினிலே
  • இமையோரம் உன் நினைவு
  • வசந்தமென வந்தாய்
  • மௌனத்திரையின் மறைவினிலே
  • தூங்காத கண்ணென்று ஒன்று
  • புலர்கின்ற பொழுதில்
  • மௌனமான நேரம்
  • வேரென நீயிருந்தாய்..
  • வானம் வசப்படும்
  • அந்தி வானம்
  • ஆராதனை
  • மௌனமே காதலாய்
  • வந்ததே புதிய பறவை
  • கானல் வரிக் கவிதை
  • மன்னிப்பாயா..?
  • மை விழியே மயக்கமென்ன..? (நான்கு பாக நாவல்)
  • வைகறையே வந்துவிடு
  • சங்கமித்த நெஞ்சம்
  • இளவேனிற்காலம்
  • ஓரவிழிப் பார்வையிலே.
  • தென்னம்பாளை..
  • புதிய பூவிது பூத்தது
  • கன்னிராசி
  • சொல்லத்தான் நினைக்கிறேன்
  • உன்னோடு நான்
  • நதி எங்கே போகிறது
  • தேடினேன் வந்தது
  • மாலை நேரத்து மயக்கம்
  • கண்ணாமூச்சி ரே..ரே..
  • ஆசையா..? கோபமா..?
  • பொன் மகள் வந்தாள்.
  • மின்னலாக வந்தவளே.
  • ஜனனி.. ஜகம் நீ.
  • அலைபாயும் மனது.
  • காலை நேரத்துக் காற்று.
  • அம்மம்மா கேளடி தோழி.. (ஐந்து பாக நாவல்)
  • கை தொட்ட கள்வனே
  • விட்டுச் சிறகடிப்பாய்
  • நதியோரம்
  • விடிகின்ற வேளையிலே
  • பூமிக்கு வந்த நிலவு
  • எங்கிருந்தோ ஆசைகள் (ஆறு பாக நாவல்)
  • போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (இரண்டு பாக நாவல்)
  • மழைச் சாரலாய் மனம் நனைத்தாய்
  • புதிதாக ஓர் பூபாளம்
  • தஞ்சமென வந்தவளே
  • உயிர்த்தேனே..! உன்னாலே உயிர்த்தேனே..
  • நிலாச்சோறு
  • உன்மீது ஞாபகம்
  • காதலென்பது எதுவரை.
  • ராதையின் நெஞ்சமே
  • சொல்லாமலே பூப்பூத்ததே
  • மனதோடு பேசவா
  • சித்திரமே..! நில்லடி
  • இது நீரோடு செல்கின்ற ஓடம். (மூன்று பாக நாவல்)
  • கனவில் வந்த தேவதை
  • பொய் சில நேரங்களில் அழகானது
  • அழகான ராட்சசியே..! (மூன்று பாக நாவல்)
  • பிரிய சகி..!
  • கன்னத்தில் முத்தமிட்டாள்
  • வந்தாள் மகாலட்சுமியே
  • ஏழு ஸ்வரங்கள் (ஏழு பாக நாவல்)
  • மன்னவன் வந்தானடி தோழி
  • மார்கழிப் பனியில்
  • காற்றுக்கென்ன வேலி
  • மோகத்தைக் கொன்று விடு
  • என் மனது ஒன்றுதான்
  • புதுசா.. புதுசா.. ஒரு காதல் பாட்டு
  • நிலாக் காயும் நேரத்திலே
  • மேகங்கள் நகர்கின்றன
  • தூரத்தில் நான் கண்ட உன் முகம்
  • கூட்டாஞ்சோறு
  • ஆனந்த கீதம்
  • உழவன் மகள்
  • தென்னங்கீற்றின் பாடலிலே
  • தட்டுத் தடுமாறி நெஞ்சம்
  • கொதிக்கும் பனித்துளி
  • நீ எங்கே..?
  • நேற்று இந்த நேரம்
  • கனவோடு சில நாள்
  • அகல் விளக்கு
  • எண்ணியிருந்தது ஈடேற.. (எட்டு பாக நாவல்)
  • அவளுக்கு நிலவென்று பெயர்
  • விண்ணைத் தாண்டி வந்தாயே
  • மஞ்சள் வெயில் மாலை நேரம்
  • சிறகடிக்கும் மனது
  • பனி விழும் இரவு
  • கள்வனைக் காதலி
  • ரூபசித்திர மாமரக் குயிலே
  • மனம் திருட வந்தாயா..?
  • மெல்லிசையாய் ஓர் காதல்
  • அனிச்ச மலர்..!

உசாத்துணை


✅Finalised Page