under review

ம. விஸ்வநாதன்

From Tamil Wiki
விஸ்வநாதன்

ம. விஸ்வநாதன் (பிறப்பு: ஜூன் 1984) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

விஸ்வநாதன் கடலூரில் மகாலிங்கம், ராஜேஸ்வரி இணையருக்கு ஜூன் 1984-ல் பிறந்தார். சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சீர்ப்பனந்தல். அண்ணன் சபரிநாதன். தந்தை கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் தலைமைப் பொறியாளராக இருந்தார். அப்பாவின் பணி நிமித்தமாக பாண்டியராஜபுரம் (மதுரை), பெரம்பலூர், பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), விழுப்புரம் ஆகிய ஊர்களில் பள்ளிக்கல்வி பயின்று திண்டுக்கல் எம்.எஸ்.பி சோலை நாடார் பள்ளியில் பள்ளிக் கல்வி நிறைவு செய்தார். கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலையும், அமெரிக்காவின் அட்லாண்டாவிலுள்ள ஜார்ஜியா டெக் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

விஸ்வநாதன் ஜூன் 1, 2014-ல் பிரமோதினியை மணந்தார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா வால்நட் க்ரீக் நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.

அமைப்புப் பணிகள்

  • கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் 'வெண்முரசு நிரல் குழு' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து, நான்கு வருடங்களாக மாணவர்களுக்கு கணினி நிரல் போட்டிகளை நடத்திவருகிறார்.
  • 2015-ல் நண்பர்களுடன் இணைந்து 'madhuram' என்ற இணையதளத்தைத் துவங்கினார். தமிழ் சிறுகதை, கவிதைகள் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கான தளமாக 2016 வரை தொடர்ந்து நடத்தினார்.
  • vishnupuram.com என்ற தளத்தை நண்பர்களுடன் இணைந்து துவக்கி எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சார்ந்த கட்டுரைகளைத் தொகுத்தார்.

இலக்கிய வாழ்க்கை

விஸ்வநாதனின் முதல் சிறுகதை 'வலசை 2021-ல் அரூ இதழில் வெளியானது. விசு, மயிலேறி, விஸ்வநாதன் மகாலிங்கம் ஆகிய பெயர்களில் எழுதி வருகிறார். ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கு தொழில்நுட்ப கட்டுரைகளையும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இலக்கிய ஆக்கங்களையும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இவரின் இலக்கிய மதிப்புரைகள் ஜெயமோகன் இணையதளம், சிலிக்கான் ஷெல்ஃப் இணையதளம், கனடா காலம் இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. 2024-ல் இவரின் முதல் நூலான 'இரு கடல் ஒரு நிலம்' என்ற பயண நூல் விஷ்ணுபுரம் பதிப்பகம் மூலமாக வெளியானது. ஆதர்ச எழுத்தாளர்களாக ஜெயமோகன், டால்ஸ்டாய் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • இரு கடல் ஒரு நிலம் (பயண நூல்) (2024, விஷ்ணுபுரம் பதிப்பகம்)

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 14:06:59 IST