under review

பல்சந்தமாலை

From Tamil Wiki

பல்சந்தமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பல்சந்தமாலையில் 10 முதல் 100 பாடல்கள் வரை இருக்கும். இவற்றில் ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒவ்வொரு சந்தத்தில் அமையும். பல சந்தங்களைக் கொண்டு அமைவதால் இதற்குப் பல்சந்தமாலை என்று பெயர்.

பன்னிருபாட்டியலில் பல்சந்த மாலையில் இலக்கணம் பேசப்பட்டுள்ளது.

பத்து முதலாப் பப்பத்து ஈறா
வைத்த வண்ண வகைபத் தாகப்
பல்சந்த மாலை பகரப் படுமே
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 834

நவநீதப் பாட்டியல்

பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையாம்
- நவநீதப் பாட்டியல், பாடல் 37

என்றும் பிரபந்த திரட்டு "பத்துக்கொரு சந்தம் பாடி பா நூறாக வைத்தல்........" என்றும் பல்சந்தமாலையின் இலக்கணத்தைக் கூறுகின்றன. வாடல், ஊடல், கூடல் என்ற அகத்துறைகளை அங்கமாகக்கொண்டு தொகுக்கப்படுவது இந்தப் பாமாலை.

'பல்சந்தமாலை' என்ற பழம் இஸ்லாமியக் காப்பியத்தின் எட்டுப்பாடல்களை மேற்கோளாகக் கொண்ட 'களவியற் காரிகை' எஸ். வையாபுரிப்பிள்ளையால் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல்களில் இருந்து 'பல்சந்த மாலை' எழுதிய ஆசிரியரது பெயரும். காலமும் அறியவரவில்லை. இக்காப்பியம் பல்சந்தமால என்னும் சிற்றிலக்கியத்தின் இலக்கணத்திற்கேற்ப அமைந்திருக்கிறதா என வகுக்க இயலவில்லை

தமிழ் இலக்கியத்தில் பல்சந்தமாலை என்னும் வகைமையில் வேறு இலக்கியங்கள் புனையப்படவில்லை.

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Nov-2023, 09:44:27 IST