under review

பக்தி இதழ்

From Tamil Wiki

பக்தி இதழ்: சமயம் சார்ந்த இதழ்களில் பக்தி, வழிபாடு ஆகியவற்றை முன்வைக்கும் இதழ்கள். இவை பொதுவாசிப்புக்குரியவை. மதநிறுவனங்களாலோ அல்லது பொதுவான பதிப்பாளர்களாலோ வெளியிடப்படுபவை.

பார்க்க தமிழ் இதழ்கள்

இந்து பக்தி இதழ்கள்

இந்து பக்தி இதழ்கள் இந்துமதச் சடங்குகளையும் வழிபாட்டுமுறைகளையும் முன்வைப்பவை. சோதிட இதழ்களும் பக்தியிதழ்கள் போலவே வெளியாகின்றன. வெவ்வேறு இந்துமதப்பிரிவுகள் சார்ந்து இவை வெளியாகின்றன

கிறிஸ்தவ பக்தி இதழ்கள்

கிறிஸ்தவப் பக்தி இதழ்கள் இந்தியாவில் கிறிஸ்தவ மதப்பரப்புநர்கள் வந்தபோதே தொடங்கியவை. இந்தியாவின் தொன்மையான அச்சிதழ்கள் அவையே. இன்று கிறிஸ்தவத் திருச்சபைகள், கிறிஸ்தவ ஆலயங்கள், கிறிஸ்தவ அமைப்புகள் சார்ந்து இதழ்கள் வெளியாகின்றன. தனியார் போதகர்களும் இதழ்களை வெளியிடுகின்றனர்

இஸ்லாமிய பக்தி இதழ்கள்

இஸ்லாமிய பக்தியிதழ்கள் இந்தியாவில் அச்சிதழ் தோன்றியதுமே உருவானவை. அவை இஸ்லாமியநெறிகளை முன்வைப்பவையும் இஸ்லாமிய வரலாறு மற்றும் இஸ்லாமிய மதநூல் ஆய்வு ஆகியவையும் கொண்டவை


✅Finalised Page