under review

நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்

From Tamil Wiki

நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான அகநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

ஆவூர் கிழார் என்ற பெயர் பல புலவர்களுக்கும் இருந்ததால் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு இவருக்கு நெய்தல் சாய்த்து உய்த்த என்னும் அடைமொழி தரப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

அகநானூற்றில் குறிஞ்சித் திணைப்பாடலான 112-ஆவது பாடல் ஆவூர்க்கிழார் பாடியது.இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது." என்ற துறையின் கீழ் பாடினார்.

அறியவரும் செய்திகள்
  • பெற்றோர் பெண்ணைக் கொள்வது பெண்கோள் ஒழுக்கம். முன்பே இருவருக்கும் இடையே உள்ள உறவை அறியாதவர்கள் போலப் பெண்ணைக் கேட்டுப் பெற இப்போது வந்துள்ளனர். இதனை எண்ணும் தலைவி நாணம் கொள்கிறாள்.
  • 'கழியக் காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்': காதலன் காதலியை பெற்றோர் அறியாமல் களவு மணம் செய்யும் இன்பத்தைச் சான்றோர்கள் விரும்புவதில்லை. முறைப்படிப் பெண் கேட்டுத் திருமணம் செய்துகொள்வதையே சான்றோர் விரும்புவர்.

பாடல் நடை

  • அகநானூறு: 112

கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Dec-2022, 12:53:35 IST