under review

நாமமாலை

From Tamil Wiki

நாமமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்து வர வஞ்சிப்பாவால் ஆண்களைப் பாடுவது நாமமாலை. பெண்களைப் பாடுவது புகழ்ச்சி மாலை.

நாமமாலையின் இலக்கணம் கூறும் இலக்கண விளக்க நூற்பா:

மயக்க அடிபெறும் வஞ்சிப்பாவால்
வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல்
புகழ்ச்சி மாலை; புருடர்க்கு உரைப்பின்
நாம மாலை யாம் என நவில்வர்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 866

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Nov-2023, 09:37:20 IST