under review

நம்ப முடியாத உண்மைகள் 100

From Tamil Wiki
நம்ப முடியாத உண்மைகள் 100

நம்ப முடியாத உண்மைகள் 100 (2010) ஒரு தொகுப்பு நூல். நம்ப முடியாத நூறு அதிசய சம்பவங்களைக் கொண்ட இந்த நூலைத் தொகுத்தவர் என். ஸ்ரீநிவாஸன். தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி இந்த நூலை வெளியிட்டது.

வெளியீடு

நம்ப முடியாத உண்மைகள் 100, அதிசய சம்பவங்களின் தொகுப்பு. இந்நூலைத் தொகுத்தவர் என். ஸ்ரீநிவாஸன். அல்லயன்ஸ் பதிப்பகத்தின் கிளை நிறுவனமான 'தி ஜெனரல் சப்ளைஸ்' கம்பெனி இந்த நூலை, 2010-ல் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

நம்ப முடியாத உண்மைகள் 100-ன் ஆசிரியரான என். ஸ்ரீநிவாஸன், 1938-ல், தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் பிறந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யாவின் பேரனான இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 'விடுதலைப் போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள்', 'உடலியல் கலைக்களஞ்சியம்', 'உலக மகா கொடுங்கோலர்கள் 100', 'உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100', 'உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100', 'அரண்மனை ரகசியங்கள் 100', 'அவர்கள் செய்த விந்தைகள் 100', 'விந்தை உயிரினங்கள் 100', 'வியப்பூட்டும் உண்மைகள் 100', 'நம்ப முடியாத உண்மைகள் 100', போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

நூல் அமைப்பு

நம்ப முடியாத உண்மைகள் 100 நூலில் கீழ்காணும் 100 அதிசய சம்பவங்கள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றன.

  • அந்தர சயனம்
  • மாண்டவர் மீண்டார்
  • தோன்றி மறையும் மச்சம்
  • மாயமாக மறைந்த தாஜ்மஹால்
  • ஈக்குக் கல்லறை
  • பன்றி உருவில் வந்த எமன்
  • கனவில் கண்டபடி
  • நான் செத்துக் கொண்டிருக்கிறேன் ஜூலியா
  • துரோகி
  • விந்தை நிகழ்ச்சிகள்
  • அந்த உளவுக்காரர்கள்
  • ஆறு வயதிலே துப்பாக்கிச் சூடு
  • அந்த வில்லன்
  • அந்த இரத்தம்
  • ஓநாய் குழந்தைகள்
  • குதிரைக் கடத்தல்
  • ஆவிகள் செய்த துஷ்டத்தனம்
  • நாராய்! நாராய்! பழி தீர் நாராய்!
  • யார் அது?
  • ஆவி மாளிகை
  • அவர் கண்ட கனவு!
  • மாயமாய் மறைந்தார்கள்
  • இறந்தவர் செய்த பணி
  • பிறந்த நாள்
  • மாயத் தூண்!
  • மறு பிறவி!
  • மறு பிறவி மங்கை
  • அதிசய மாணிக்கம்
  • இப்படியும் சில!
  • மரம் விழுங்கி மகாதேவன்
  • கனவில் வந்தபடியே
  • ஞாபக மறதித் திருடன்
  • எலும்பு வீடு
  • காதலிக்காக!
  • ஒட்டகச் சமாதி
  • அந்தக் குழந்தைகள்
  • மனைவிக் கறி
  • அதிர்ச்சி மரணம்
  • இதய மகள்
  • பதி பக்தி
  • இப்படியும் சில மனைவிகள்
  • இப்படியும் சிலர்
  • தற்செயலா? தெய்வச் செயலா?
  • சாபமா? தற்செயலா?
  • தற்செயல்!
  • தாய்ப் பாசம்
  • செத்துப் பிழைத்தவன்டா!
  • தொட்டால் சுடும்!
  • கலைந்த தூக்கத்தின் விலை
  • விவாகரத்து
  • ஜீவ சமாதி!
  • நாயின் அன்பு! அறிவு!!
  • பிள்ளைக் கறியமுதும் கரு வறுவலும்
  • அபூர்வ சக்தி!
  • விந்தை மரணங்கள்
  • இதுவும் அதுவே!
  • அதிசய விபத்துகள்
  • இதயபூர்வமான நன்கொடை
  • காந்தப் பெண்மணி
  • இறந்தவர் எழுதிய உயில்
  • வயதறியா ஆசை
  • நித்திய கல்யாணர்
  • மின்சாரக் குழந்தைகள்
  • மின்சார மனிதன்
  • கேக்கில் மோதிரமும் ரொட்டியில் விரலும்
  • டால்பின் செய்த உதவி
  • மூன்றும் முதலே!
  • கன்னியின் காதலி
  • அந்தப் பை!
  • தந்தைசொல்மிக்க மந்திரமில்லை!
  • இளங்கன்று பயமறியாது!
  • பாவத்தின் விலை
  • தொடரும் சாபம்!
  • துரத்தும் துரதிருஷ்டம்
  • அந்தக் குடும்பம்
  • விசித்திரமான பழி
  • அபூர்வ மனிதர்
  • சிலையும் வலியும்
  • அந்த விபத்து
  • சுண்டெலியின் சுற்றுலா!
  • ராட்சத ஒட்டுக் கணவாய்
  • சில விந்தைச் செய்திகள்
  • ஒரு கதை உண்மையானது
  • மரண ஒத்திகை
  • சட்டத்தினால் பெண்ணாக மாறியவர்கள்
  • அறுபதிலும் ஆசை வரும்!
  • பலரை பலி வாங்கிய கார்
  • யூபி 65
  • கடல் ராணி!
  • அச்சிலிலாரோ
  • அதிர்ஷ்டப் பிறவி
  • பிரம்மாவின் கண்
  • பலி வாங்கி வைரம்
  • ஹோப் வைரம்
  • கல்லறை சாபம்
  • அந்தக் கை
  • அவர்கள் இறந்த விதம்
  • அளவுக்கு மிஞ்சினால்!
  • காற்றேதான் கடவுளடா!
  • நித்திய கல்யாணி

உள்ளடக்கம்

’அந்தர சயனம்’ கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி:

நம் நட்டில் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரை கூட நில சமாதி, ஜல சமாதி, வாயு ஸ்தம்பனம் அதாவது காற்றில் அந்தரத்தில் படுப்பது முதலான வியப்பூட்டும் செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர். இதற்கு அவர்களது யோகா பயிற்சிதான் காரணம்.

சுப்பையா புலவர் என்பவர் வாயுஸ்தம்பனம் செய்து காட்டிய நிகழ்ச்சி, தொடக்கம் முதல் இறுதி வரை படிப்படியாக ஒவ்வொரு நிலையும் புகைப்படமாக எடுக்கப்பட்டு 'இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்' எனும் பத்திரிகையில் 1936-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி இதழில் ’இது கண்கட்டு வித்தை அல்ல உண்மை’ என்ற குறிப்புடன் வெளிவந்துள்ளது.

பல ஐரோப்பிய அதிகாரிகள் முன்னிலையில் பகல் 12.30 மணிக்கு நடந்தது. இந்த வாயு ஸ்தம்பனத்தை நடத்திய சுப்பையா புலவர் சுமாரான உயரம் உடையவர். நீண்ட அடர்ந்த தலைமுடி; தொங்கு மீசை. பரம்பரை பரம்பரையாக அவர்து குடும்பம் இதைச் செய்து வருவதுண்டாம். யோகாவில் இந்தப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள அவருக்கு இருபது ஆண்டுகள் ஆயிற்றாம். இதை நேரில் பார்த்த ஒரு ஐரோப்பியர் அதை அப்படியே வருணிக்கிறார்.

”சுப்பையா புலவரிடம் போட்டோ எடுக்க அனுமதி கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தார். 150 சாட்சிகள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. முதலில் அவர் வாயு ஸ்தம்பனம் இருக்குமிடத்தில் ஒரு வட்டம் போடப்பட்டு அந்த இடத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போடப்பட்டது. அந்த திரையினுள் சுப்பையா மட்டும் உள்ளே நுழைந்தார். பின்னர் சில நிமிடங்களுக்குப் பின் அவரது உதவியாளர்கள் அந்தத் திரையை விலக்கினர்.

அங்கே சுப்பையா தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் ஒரு கை - தலையைத் தாங்கிய வண்ணம் படுத்தவாறு காற்றில் மிதந்து கொண்டிருந்தார். மற்றொரு கையை அருகிலுள்ள துணி சுற்றப்பட்ட கம்பின் மீது வைத்திருந்தார். இந்தக் கம்பு சமநிலை பேணுவதற்கே தவிர தாங்கு ஆதாரமல்ல. கம்பியையோ கயிறையோ கட்டி தொங்குகிறாரா என்ற சந்தேகத்தில் நானும் இன்னொருவரும் மிக அருகில் சென்று கீழே, மேலே, பக்கத்தில் மற்றும் அவரைச் சுற்றி துழாவிப் பார்த்தோம். ஒன்றுமேயில்லை. அவர் அந்தரத்தில் நிஷ்டையில் மிதந்து கொண்டிருந்தார். நான்கு நிமிடங்கள் இந்த நிலையில் இருந்தார். இதைப் பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டோம். பிறகு மீண்டும் அவரைச் சுற்றித் திரை போடப்பட்டது. அவர் மெதுமெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். கீழே இறங்கியதும் அவருடைய உதவியாளர்கள் அவரை எங்களிடம் தூக்கி வந்து கைகளை மடக்கும்படிச் சொன்னார்கள். நாங்கள் மடக்கிப் பார்த்தோம், முடியவில்லை.”

மதிப்பீடு

நம்ப முடியாத உண்மைகள் 100, உலக அளவில் நிகழ்ந்த பல்வேறு அதிசய நிகழ்வுகளின் தொகுப்பாகவும், இயற்கை விதிகளுக்கு மாறாக நிகழ்ந்த பல அற்புதச் செயல்களின் ஆவணமாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-May-2024, 08:52:54 IST