under review

தேவராசு

From Tamil Wiki
தேவராசு

தேவராசு (பிறப்பு: 1953) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர், நாடகக் கலைஞர். வாத்தியார். இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி அரங்காற்றுகை செய்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தேவராசு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் வானூரில் பொன்னம் பூண்டியில் 1953-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.

கலை வாழ்க்கை

தேவராசு நடராஜனிடம் கூத்து கற்றுக் கொண்டார். பதினெட்டு வயது முடியும் முன்னரே கூத்திற்குள் வந்துவிட்டார். சில காலம் திருநந்திபுரம் நடேச ஆசிரியர், ஒம்பலம் ராமசாமி ஆசிரியர், ஒட்டம்பட்டு சொக்கநாதர் ஆசிரியர், செஞ்சி துத்திப்பட்டு ரங்கநாதன் ஆகியோரிடமிருந்தும் கூத்து கற்றார். கூத்து, நாடகம் இரண்டுமே ஆடினார். ஆனால் தெருக்கூத்து மீது பற்று கொண்டவர். பொன்னம்பூண்டி அரிகிருஷ்ணன் சபா, பக்கிரிபாளையம் மாயக்கிருஷ்ணன் சபா, துத்திப்பட்டு ரங்கநாதன் சபா ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். அம்மன் திருவிழா, முருகன் திருவிழா, சிறப்பு சடங்குகள், காதணி விழா, புதுமனை புகுவிழா ஆகிய விழாக்களில் கூத்து ஆடினார். சிறுவை, பெரம்பூர், ஆலப்பாக்கம், பாண்டி-காலாப்பட்டு, புதுப்பட்டு, திருக்கனூர், கூடப்பாக்கம், கடலூர்-ஒட்டி, தெள்ளார், வந்தவாசி, மாம்பட்டு, அத்திப்பட்டு, திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, செஞ்சி ஆகிய இடங்களில் கூத்து ஆடினார்.

தேவராசு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கூத்து வாத்தியாராக அனுபவம் உள்ளவர். செல்வ விநாயகர் நாடக சபாவின் ஆசிரியராக இருந்தார். இருபது நாடகங்களுக்கு மேலாக எழுதியும் அரங்காற்றியும் உள்ளார். 'கருப்பண்ணசாமி', 'வேதகிரிராஜன்', 'கல்விகாத்தான்', 'அரணாட்சி திருமணம்', 'கணவன் உயிர் காத்த கற்பக வள்ளி திருமணம்' ஆகியவை இவர் எழுதி அரங்காற்றிய நாடகங்கள்.

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்துக்கள்
  • ராமாயணம்

அரங்காற்றிய நாடகங்கள்

  • கருப்பண்ணசாமி
  • வேதகிரிராஜன்
  • கல்விகாத்தான்
  • அரணாட்சி திருமணம்
  • கணவன் உயிர் காத்த கற்பக வள்ளி திருமணம்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:45:58 IST