under review

ஜைன இளைஞர் மன்றம்

From Tamil Wiki

ஜைன இளைஞர் மன்றம் (1974), சமூக உயர்வு, சமய மேம்பாடு இவற்றை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. மன்றத்தின் சார்பில் 1974 முதல், முக்குடை என்ற இதழ் வெளிவந்தது.

தோற்றம்

சமணப் பெரியோர்களின் அடிப்படைக் குறிக்கோள்களான நல்லறங்களைப் பரப்புவதையும், சமூக உயர்வு, சமய மேம்பாட்டையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜூலை 1974-ல், ஜைன இளைஞர் மன்றம் தொடங்கப்பட்டது. சிவ ஆதிநாதன், V. C. ஸ்ரீ பாலன், D. சம்பத்குமார், A. சின்னதுரை, S தன்யகுமார் தர்மராஜன், B. தரணி குமார், J. ஸ்ரீ பாலன் ஆகியோர் இணைந்து ஜைன இளைஞர் மன்றத்தை நிறுவினர். இவர்களோடு டாக்டர் கனக அஜிததாஸ், M.D. இராஜேந்திரன், S. இரமேஷ் குமார், C. அப்பாண்டை ராஜன், A. அப்பண்டைராஜன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். தற்போது பொறியாளர் A. சின்னதுரை அவர்களது தலைமை மற்றும் வழிகாட்டலில் பொன் . இராஜேந்திரப் பிரசாத் , S. சிரேணிக ராஜன், P. சௌந்திர பாண்டியன், ஜெ. சீத்தல் குமார் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

நோக்கம்

சமணப் பெரியோர்களின் அடிப்படைக் குறிக்கோள்களான நல்லறங்களை பரப்புவதையும், சமூக உயர்வு, சமய மேம்பாட்டையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜைன இளைஞர் மன்றம் செயல்பட்டது.

நிர்வாகக் குழு

கீழ்க்காணும் நிர்வாகக்குழுவினரின் தலைமையில் ஜைன இளைஞர் மன்றம் செயல்பட்டது.

  • தலைவர்: A. சின்னதுரை
  • துணைத் தலைவர்: பேராசிரியர் Dr. கனக அஜிததாஸ்
  • செயலர் மற்றும் பொருளாளர்: S. இரமேஷ் குமார், C. அப்பாண்டை ராஜன், A. அப்பண்டைராஜன்
  • துணைச் செயலர்: பொன். இராஜேந்திரப் பிரசாத்
  • செயற்குழு உறுப்பினர்கள்: M.D. இராஜேந்திரன், S. சிரேணிகராஜன், P. சௌந்திர பாண்டியன் குமார், C. அப்பாண்டை ராஜன், ஏ. அப்பண்டைராஜன், ஜே. சீத்தல்குமார்

பணிகள்

ஜைன இளைஞர் மன்றம் கீழ்க்காணும் பணிகளை முன்னெடுத்தது.

  • முக்குடை இதழ் வெளியீடு
  • புதிய நூல்கள் மற்றும் அரிய பழைய நூல்கள் வெளியீடு
  • வேலை வாய்ப்புக்கான சேவை
  • ஜைன சமூக சமயத்திற்கு அரும் பெரும் தொண்டாற்றி மறைந்தவர்கள் பெயரில் நினைவுச் சொற்பொழிவு நடத்துதல்
  • இளைய தலை முறையினருக்கு சமணத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தழுவிய நிகழ்ச்சிகளுக்கு, கோடைகாலப் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்து நடத்துதல்
  • சமணம் குறித்த ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்களூக்குப் பாராட்டும் சிறப்பும் செய்தல்
  • ஆலயத் திருப்பணிகள்
  • சுவடிகள் பாதுகாப்புக்கு வழி வகை செய்தல்
  • சமண துதிப்பாடல்களை குறுந்தகடு வடிவில் வெளியிடுதல்
  • பாராமுகமாக உள்ள சிலைகளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்தல்

பதிப்பு

ஜைன இளைஞர் மன்றம் கீழ்க்காணும் நூல்களை அச்சிட்டு வெளியிட்டது.

தமிழ் நூல்கள்
  • சைனரின் தமிழிலக்கண நன்கொடை
  • அவிநயம்
  • அமுதசாகரம்
  • இந்திரகாளியம்
  • கலிங்கத்துப் பரணி ஒரு மதிப்பீடு
  • தொல்காப்பிய ஒப்பியல்
  • அருங்கலச்செப்பு
  • நரிவிருத்தம்
  • அறநெறிக் கதைகள்
  • அருகன் அந்தாதி
  • திருக்குறள் - மூலமும் கட்டுரைகளும்
  • திருக்குறளில் அறிவுத் துறைகள்
  • சிவக்கோட்டாச்சாரியரின் நல்லறக் கதைகள்
  • இளங்கோவடிகள் சமயம்
  • சமணமும் படைப்புக் கோட்பாடும்
  • கல்வெட்டில் சமணம்
  • ஜைன இராமாயணம்
  • பக்தாமரம்
  • பாலர் மலர்
  • சமணத்தின் வழிபாடும் - கோட்பாடும்
  • ஜைனம் - ஓர் அறிமுகம்
  • கலியாண வாழ்த்து
  • திருமலை - ஒரு கையேடு
  • திருநறுங்கொண்டை வரலாறு
  • திருக்குறள் வழங்கும் செய்தி
  • ஜைன வழிபாடு
  • பக்தாமரம்
  • சுப்ரபாதம் (தமிழில்)
  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள்
  • திருமலைச் சமணத் திருக்கோயில்கள்
  • நல்லறச் சிந்தனைகள்
  • யோக சாரம்
  • ஸ்ரீ மகாவீரரின் பஞ்சகல்யாண வைபவம்
  • கழுகுமலையில் சமணம்
  • ஜைன சமய ஐம்பெரும் துதிகள்
ஆங்கில நூல்
  • Sri Namaskara Maha Mantra
  • Glimpses of Jaina Philosophy

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jul-2024, 09:21:25 IST