under review

கோனேரியப்பனையங்கார்

From Tamil Wiki

கோனேரியப்பனையங்கார் (கோனேரியப்பன் ஐயங்கார்) (பொ.யு.18-ம் நூற்றாண்டு) பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பெயரர். ரங்கநாகித் தாயார் ஊசற்றிருநாமம் இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கோனேரியப்பனையங்கார் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பெயரர் என்பது தவிர அவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.

இலக்கிய வாழ்க்கை

பிள்ளைபெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு சிற்றிலக்கியங்கள் அஷ்ட பிரபந்தம் என்று அறியப்படுகின்றன. அதன் இறுதிப் பிரபந்தமான சீரங்கநாதர் ஊசற்றிருநாமம் திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கரை மங்களாசாசனம் செய்து இயற்றிய ஊசல் என்னும் சிற்றிலக்கியம். இதன் தொடர்ச்சியாக பெரிய பிராட்டியான ரங்கநாயகித் தாயாரை மங்களாசாசனம் செய்து கோனேரியப்பனையங்கார் சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம் என்ற பிரபந்தத்தை இயற்றினார். இந்த ஊசலும் அஷ்டபிரபந்தத்துடன் இணைக்கப்பட்டது. இரு ஊசற்றிருநாமங்களும் இணைந்து திருவரங்கத்து ஊசற்றிருநாமம் என வழங்கப்பட்டன.

பாடல் நடை

காரனைய திருவரங்க மணவா ளர்க்குக்
     கண்களிப்ப மனமுருக அறிவு சோர
மூரல்எழப் புளகமுறப் புயல்பூ ரிப்ப
     முகம்மலர மெய்குழைய மோக மேற
ஆரமுதே பசுங்கிளியே முத்தே பொன்னே
     அன்னமே என்னம்மே அழகின் பேறே
சீரிய சிற்றிடை அணங்கே ஆடிர் ஊசல்
       சீரங்க நாயகியார் ஆடிர் ஊசல்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2024, 10:51:00 IST