கல்கோள் நிலை
கல்கோள் நிலை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. கல்லைக் கொள்ளுதல் என்பதை இது குறிக்கிறது.வீரமரணம் அடைந்தவர்க்கானதேர்ந்தெடுத்த நடுகல்லைத் தேர்ந்தெடுத்துக் கொணர்தலைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மண் மருளும் வண்ணம் துடியை முழக்கி, வீரமரணம் அடைந்த வீரனுக்குக்குரிய கல்லினை எடுப்பது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மண்மருளத் துடிகறங்க
விண் மேயார்க்கு கல் கண்டன்று (கொளு 10.9)
வெண்பா
பூவொடு நீர்தூவிப் பொங்க விரை புகைத்து
நாவுரை நன்மணி நன்கு இயம்ப - மேவார்
அழல்மறம்காற்றி அவிந்தார்க்கு என்று ஏத்திக்
கழல் மறவர் கைக் கொண்டார் கல் (248)
பொருள்: மறவர்கள் நீரையும் மலரையும் சிதறி நறும்புகை காட்டி மணிகளை ஒலிக்கச் செய்து, பகைவரது சினத்தைக் கிளறிப் போரில் மாண்டவனுக்கு நடுகல் ஆதற்குரிய கல்லைக் கைக்கொண்டார்கள்.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jun-2025, 10:59:59 IST