under review

கம்பையூர் சர்க்கரைப்புலவர்

From Tamil Wiki

கம்பையூர் சர்க்கரைப்புலவர் (சிறுகம்பையூர் சர்க்கரைப்புலவர்) (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கை வரலாறு

கம்பையூர் சர்க்கரைப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் பேரன். சீனிப்புலவரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

சிறுகம்பையூர் சர்க்கரைப்புலவர் என்பவர் தாண்டவராயபிள்ளை கோவை, தட்சிணாமூர்த்தி மும்மணிக்கோவை, திருப்புனவாயிற்பள்ளு, மண்டலகோட்டை வண்டுவனப்பெருமாள் ஊசல், கால சங்காரமூர்த்தி வெண்பா, காலசங்காரமூர்த்தி வண்ணம், புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமான் வண்ணம், அரசர்குளம் வணங்காமுடியார் வண்ணம், திருப்புத்தூர் வைரவரலங்காரம், திருவாடானை ஆதிரத்தினேசுரர் சித்திரகவியலங்காரம், நட்சத்திரமாலை என்னும் பிரபந்தங்களை இயற்றினார்.

நூல் பட்டியல்

  • தாண்டவராயபிள்ளை கோவை
  • தட்சிணாமூர்த்தி மும்மணிக்கோவை
  • திருப்புனவாயிற்பள்ளு
  • மண்டலகோட்டை வண்டுவனப்பெருமாள் ஊசல்
  • கால சங்காரமூர்த்தி வெண்பா
  • காலசங்காரமூர்த்தி வண்ணம்
  • புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமான் வண்ணம்
  • அரசர்குளம் வணங்காமுடியார் வண்ணம்
  • திருப்புத்தூர் வைரவரலங்காரம்
  • திருவாடானை ஆதிரத்தினேசுரர் சித்திரகவியலங்காரம்
  • நட்சத்திரமாலை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2023, 19:58:38 IST