எம்.சி. மோகன் (தெருக்கூத்து)
எம்.சி. மோகன் (பிறப்பு:1957) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார். வடக்கத்தி பாணி கூத்தைச் சேர்ந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
எம்.சி. மோகன் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலுள்ள எச்சூரில் 1957-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அப்பா கோவிந்த நாயக்கர், சித்தப்பா சுள்ளி நாயக்கர் இருவரும் கூத்துக் கலைஞர்கள். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம் பார்ப்பார். பேரனும் கூத்துக் கலைஞர்.
கலை வாழ்க்கை
எம்.சி. மோகனின் வாத்தியார் சுள்ளி நாயக்கர். ஸ்ரீ கண்ணபிரான் நாடக மன்றம் மற்றும் பல குழுக்களில் கூத்து ஆடினார். 'யார் இந்த சமாதி', 'நாட்டைக்காத்த நல்லவன்', 'பேசிய கற்சிலை', 'நாட்டை கெடுத்த நங்கை', பத்து நாள் பரதக் கூத்துக்கள் ஆகிய கூத்துகளைப் பயிற்றுவித்துள்ளார். இறப்பு காரியங்கள், பாரத விழா, தீமிதி விழா, அம்மன் திருவிழா ஆகியவற்றுக்கு கூத்து ஆடியுள்ளார். சங்கரமல்லூர், மேல்மருவத்தூர், எச்சூர், சென்னை, திருவேற்காடு, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் கூத்து ஆடியுள்ளார்.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்துக்கள்
- யார் இந்த சமாதி
- நாட்டைக்காத்த நல்லவன்
- பேசிய கற்சிலை
- நாட்டை கெடுத்த நங்கை
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2025, 17:26:26 IST