அழகிய சொக்கநாத பிள்ளை
- அழகிய என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அழகிய (பெயர் பட்டியல்)
- சொக்கநாதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சொக்கநாதர் (பெயர் பட்டியல்)
அழகிய சொக்கநாத பிள்ளை (1836-1885) இசைவாணர். சிலேடை பாடுவதில் வல்லவர். பிரபந்தங்கள் பல இயற்றினார். இவர் பாடிய காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
அழகிய சொக்கநாத பிள்ளை திருநெல்வேலி, தச்சநல்லூரில் 1836-ல் வேளாளர் மரபில் வள்ளியப்பப் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தந்தை விநாயக உபாசகர். அழகிய சொக்கநாத பிள்ளைக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். முதல் மனைவி நோயுற்று இறந்தார்.
அழகிய சொக்கநாத பிள்ளை தமிழ்ப்புலமை கொண்டிருந்தும் வறுமை காரணமாகச் சிறிய பதவிகளில் பணிபுரிந்தார். திருநெல்வேலி முன்சிப் கோர்ட்டில் மாசம் பத்து ரூபாயில் எழுத்தராக இருந்தார். இராசவல்லிபுரம் கார்காத்த குல வள்ளல் என்ற பெயர் பெற்றிருந்த முத்துசாமிப் பிள்ளையின் ஆதரவு கிடைத்தபின் வறுமை நீங்கியது. அக்காலப் புலவர்களிடம் பெருமதிப்புப் பெற்றிருந்தார்.
இசை வாழ்க்கை
அழகிய சொக்கநாத பிள்ளை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் முதலான பல பிரபந்தங்கள் இயற்றினார். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் இவரின் நண்பர். ஓவியப் புலவராகவும் இருந்தார். காதல் பதம் பாடுவதில் வல்லவர். இவர் பதங்கள் இப்பகுதியில் புகழுடன் இருக்கக் காரணம் பெருவள்ளல்களுடைய போற்றுதலும், சிற்றின்பச் சுவையும், எளிய மொழிநடையும், நயமான பொருளமைப்பும். இவற்றுள் சில பாமர மக்களால் விரும்பப்பட்டு உடன்காலத்திலேயே குஜிலிப் பதிப்பாக காலணா விலையில் அச்சிட்டனர். அழகிய சொக்கநாதர்' என்ற தம் பெயரை இறுதி அடியில் முத்திரையாகப் இப்பிரதியில் அச்சிட்டார். காந்திமதியம்மை மீது இவர் பாடிய கீர்த்தனங்கள் 1883-ல் அச்சிடப்பட்டன.
இளமையில் தாமோதரம் பிள்ளைக்குத் தளவாய் இராமசாமி முதலியார் அணைப்படி ஏட்டிலிருந்து தொல்காப்பியத்தைப் பிரதிசெய்து கொடுத்தார். முத்துசாமிப் பிள்ளை மீது 'சிங்காரக் கவிதா மஞ்சரி' என்ற காதல் பிரபந்தம்பாடினார். இவரது கோமதி யந்தாதிப் பாடலும் புகழ்பெற்றது. கோபியர் முறையீடாக இவர் பாடிய 'மாதே, யசோதையே உன்மகன் செய்தியை ஏதென்று சொல்லுவோ மம்மா' என்ற கும்மிப்பாடல், 'தாயே யசோதா உன்றன் பாலன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி' என்ற ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடலைத் தழுவியது.
விருது
- "கேடாவரும் நமனைக்கிட்ட வராதே என்ற காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காக ராஜவல்லிபுர வள்ளல் முத்துசாமி இவருக்கு வைரக்கடுக்கன் பரிசாக வழங்கினார்
மறைவு
அழகிய சொக்கநாத பிள்ளை 1885-ல் காலமானார்.
பாடல் நடை
- திருநெல்வேலி காந்திமதியம்மை மீது பாடிய கீர்த்தனை பின்வருவது:
இராகம்: சங்கராபரணம் ஆதிதாளம்
பல்லவி:
தாயே இந்தவேளை காப்பாற் றம்மா
அணுபல்லவி:
நீயே தஞ்சம் அம்மா, நித்ய கல்யாணி.
நெல்லைநாதர் பங்கில் வாழும் காந்திமதித் (தாயே)
சரணம்:
மண்ணைப் பெண்ணைப் பொன்னை
வருந்திக் காலம் தன்னை
வம்பில் போக்கிப் பின்னை
நம்பினேன் உன்னை
தண்ணருளால் முன்னைத்
தப்பும் மன்னித் தென்னைத் (தாயே)
தொடுக்கும் ஜென்மம் பே்த்துப்
படைத்திடாமல் தூர்த்துத்
.. தொண்டரோடே சேர்த்துக்
கொண்டருள் பூத்துக்
கடைக்கண்ணாலே பார்த்துக் |
கஷ்டமெல்லாம் தீர்த்துத் ப (தாயே)
அழகிய சொக்க
நாதன் செய்யும் துதி
ஆதரித்துக் கதி
அருள்கிரெபா நிதி ..:
விழையும் நெல்லைப் பதி !
மேவும் காந்தி மதித் (தாயே)
நூல்கள்
- காந்தியம்மை பிள்ளைத்தமிழ் 1883
- ராசி கோமதிஅம்மைபதிகம்
- முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம்
- கந்தியம்மை கும்மி
- கோதை கும்மி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Jul-2024, 21:45:50 IST