under review

ஹேமமாலினி உதயகுமார்

From Tamil Wiki

ஹேமமாலினி உதயகுமார் (பிறப்பு: ஜூன் 4, 1948) ஈழத்துப் பெண் எழுத்தாளர், நாடக நெறியாளர், நாடக நடிகை, ஓவியர், தையல் ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹேமமாலினி உதயகுமார் இலங்கை அனுராதபரத்தில் ஜூன் 4, 1948-ல் மெய்யழகன், தில்லையம்மா இணையருக்குப் பிறந்தார். அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்றார். சுனேரா பவுண்டேசனில் சிறப்புத் தேவையுடைய (special needs) மாணவர்களுக்கான இரண்டு வருட பயிற்சியையும் இவர் முடித்தார். தையல், ஓவியம் ஆகிய துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஓவியப் பாட ஆசிரிய ஆலோசகராகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தார்.

நாடக வாழ்க்கை

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான நாடகத்தை நெறியாள்கை செய்து அரங்கேற்றி வடமாகாணத்தில் முதலிடம் பெறச் செய்தார்.

பொறுப்புகள்

  • சுனேர பவுண்டேசனின் வவுனியா இணைப்பாளர்
  • தேசிய அருங்கலைகள் பேரவையின் செயலாளர்.
  • சலோம் எனும் சிறுகைத்தொழிலகத்தினையும் நடத்தி வருகிறார்.
  • லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் தையல் வகுப்போடு கைவேலை வகுப்புகளையும் நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

ஹேமமாலினி உதயகுமார் 1964 முதல் சிறுகதை, கட்டுரை, கவிதை, பாடல்கள் எழுதினார். இவரின் சிறுகதை, கவிதைகள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பப்பட்டன. வீரகேசரி, தினக்குரல், வலம்புரி ஆகிய நாளிதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளிவந்தன. சிங்கள நாளிதழ்களில் வெளிவந்த சிறுவர் கதைகளை மொழிபெயர்த்து தமிழ் நூல்த் தொகுப்பொன்றை வெளியிட்டார்.

விருதுகள்

  • தேசிய உற்பத்திக்கான போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளைப் பெற்றார்.

நூல் பட்டியல்

  • சித்திர வினாவிடை (2)
  • சிறுவர் பாடல் நூல்
  • சிறுவர் கதை

உசாத்துணை


✅Finalised Page