under review

வ. சண்முகச்சட்டம்பியார்

From Tamil Wiki

வ. சண்முகச்சட்டம்பியார் (1831-1885) ஈழத்து தமிழ்ப்புலவர், ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

வ. சண்முகச்சட்டம்பியார் மட்டக்களப்பினைச் சார்ந்த கோட்டை முனையில் தாமரைக்கேணி என்னும் ஊரில் வல்லிபுரம் என்பவருக்கு மகனாக 1831-ல் பிறந்தார். கல்லாற்றில் வாழ்ந்த கார்த்திகேசு (பொலியவிதான) என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும், வின்சன்ற் மகளிர் கல்லூரியிலும் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

வ. சண்முகச்சட்டம்பியார் இளமை முதல் கவிதை பாடும் திறன் பெற்றிருந்தார். நைடதம், கந்தபுராணம் ஆகியவற்றுக்கு உரை எழுதினார். நூல்கள் ஏதும் அச்சேறவில்லை.

மறைவு

வ. சண்முகச்சட்டம்பியார் 1885-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • நைடத உரை
  • கந்தபுராண உரை

உசாத்துணை


✅Finalised Page