வ. கணபதிப்பிள்ளை
From Tamil Wiki
- கணபதிப்பிள்ளை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கணபதிப்பிள்ளை (பெயர் பட்டியல்)
வ. கணபதிப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
வ. கணபதிப்பிள்ளை இலங்கை வட்டு நகர்ப்பகுதியில் பிறந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
வ. கணபதிப்பிள்ளை வட்டுநகர்ப் பிட்டிவயற் பத்திரகாளியம்மை பேரில் பதிகமும் ஊஞ்சலும் பாடினார். பருத்தித்துறைச் சித்திவிநாயகர் மேல் பாவிகற்பம் பெற்ற நூறு கவிகள் பாடினார். இவருடைய பாடல்கள் கிடைக்கவில்லை.
நூல் பட்டியல்
- பத்திரகாளியம்மை பதிகம்
- பத்திரகாளியம்மை ஊஞ்சல்
- சித்திவிநாயகர் பாவிகற்பம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Sep-2023, 10:16:45 IST