under review

வே.கி. நாராயணசாமிப்பிள்ளை

From Tamil Wiki

வே.கி. நாராயணசாமிப்பிள்ளை (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) தமிழறிஞர், தமிழ்ப்புலவர், ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

வே.கி. நாராயணசாமிப்பிள்ளை ராயவேலூர் யாதவகுல கிருட்டிணப்பிள்ளைக்கு மகனாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்தார். புலமைக்கல்வி கற்றார். சென்னை ராயபுரத்தில் வசித்ததால் 'ராயபுரம் வித்துவான்’ என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

வே.கி. நாராயணசாமிப்பிள்ளை தனிப்பாடல்கள் பாடினார். தனிப்பாடல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். சமகாலப் புலவர்களுக்கு சிறப்புப் பாயிரங்கள் பாடியுள்ளார். திருமண வாழ்த்துக்கள், இரங்கற்பாக்கள் பாடினார். வெண்மணி தம்பிப் பிள்ளை, சசநாதம் பிள்ளையின் மீது நடுவெழுத்தலங்காரம் பாடினார். ராயபுரம் சிவக்கியானி வா. சொக்கலிங்கம்பிள்ளை மீது புகழ்ப்பாமாலை பாடினார்.

சமகாலப்புலவர்கள்
  • சுதர்சன தாசர்
  • தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர்
  • சீயர்குளம் பாலகவி தெய்வநாயகப் பெருமாள்
  • சித்தமக் கவிராயர்
  • சதாவதானம் வால சுப்ரமணிய ஐயர்
  • சு. ராமசாமிப்புலவர்
  • அட்டாவதானம் பூவை கல்யாணசுந்தர முதலியார்
  • திருக்கழுக்குன்றம் கந்தசாமி முதலியார்
  • தஞ்சை வைரக்கண் வேலாயுதப்புலவர்
  • புதுவை சடாட்சர ஆரியர்
  • ராயபுரம் செகவுராவு முதலியார்
  • பு.த. செய்யப்ப முதலியார்
  • ஆ. அண்ணாமலை முதலியார்
  • ஈசூர் சச்சிதானந்த அடிகள்
  • மதுரகவி கன்னியப்ப பிள்ளை
  • வேலாயுத நாடார்

மறைவு

வே.கி. நாராயணசாமிப்பிள்ளை 1887-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருவரங்கப் பதிகம்
  • அருணாச்சலேசர் பதிகம்
  • தேனார் மொழியம்மை பஞ்சரத்தினம்
  • ஐயனார் பஞ்சரத்தினம்
  • திரெளபதியம்மை பஞ்சரத்தினம்
  • திருக்கச்சிப் பேரருளாளர் மாலை
  • திருக்கச்சி வரதரந்தாதி
  • சயவரதர் சதகம்
  • இலக்குமி பதிகம்
  • சர்வசமய சமரச தோத்திரம்
  • மன்மத சரித்திரக் கண்ணி
  • இசைக்கவி ரத்தினாக்கரம்
  • பஞ்சரத்னப் புகழ்மாலை

உசாத்துணை


✅Finalised Page