under review

வேய்(வெட்சித்திணை)

From Tamil Wiki

வேய் வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெடை மறவர் பகைவரின் ஆநிரைகளைக் கவரவேண்டி ஒற்று(வேவு) பார்ப்பதைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒற்றர்கள் பகைவருடைய ஒலிக்கும் மணிகள் பூட்டிய ஆநிரைகள் நின்ற இடத்துக்குச் சென்று ஒற்றறிவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து
ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று (1.9)

வெண்பா

நிலையும் நிரையும் நிரைப் புறத்து நின்ற
சிலையும் செரு முனையுள் வைகி - இலை புனைந்த
கள் அவிழ் கண்ணிக் கழல் வெய்யோய் சென்றறிந்து
நள்ளிருள் வந்தார் நமர் (6)

பொருள்: பச்சிலையுடைய விரவித்தொடுத்த தேன்பொழியும் மாலையினையும், வீரக் கழலினையும் உடையவனே போரினை விரும்புகின்ற மறத்தினைக் கொண்டவனாகப் போர்முனையுள் வந்திருக்கும் தலைவனே! நம்மவராகிய ஒற்றர்கள், பகைவரது ஆநிரை நிற்கின்ற இடத்தையும், அவற்றின் அளவையும், அவற்றின் புறத்தே அவற்றின் காவலாக நிற்கின்ற வில்வீரர்களின் அளவினையும், இருளில் சென்று ஒற்றறிந்துதிரும்பி வந்துள்ளனர்.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:53:30 IST