under review

வி. முருகன்

From Tamil Wiki
வி. முருகன்

வி. முருகன் (பிறப்பு: 1928) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்.

வாழ்க்கைக் குறிப்பு

வி. முருகன் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்தில் சிறுகுமி கிராமத்தில் 1928-ல் பிறந்தார். கூத்து இல்லாத காலங்களில் மேஸ்திரி வேலை செய்வார்.

கலை வாழ்க்கை

வி. முருகனின் வாத்தியார் கோவிந்தன். இருபத்தைந்து வயது முதல் கூத்து ஆடினார். மகாபாரதக்கூத்துகளில் ஆடினார். சுபத்திரை, சுந்தரி, திரெளபதி ஆகிய பெண் வேடங்களே பெரும்பாலும் ஆடினார். பெரும்பாலும் தன் கிராமத்திற்குள்ளேயே கூத்து ஆடினார். பத்திபத்தூர், மெத்தவாடி, பரமத்தூர், கல்லம்பாக்கம், அத்துவான்சேரி, சேசன்கண்டிகை, சிறுகுமி ஆகிய இடங்களில் கூத்து ஆடச் சென்றார். பல்வேறு நாடகக் கம்பெனிகளில் கூத்து ஆடியுள்ளார். இறுதியாக கோவிந்தன் கம்பெனியில் கூத்து ஆடினார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கூத்து வாத்தியாராக அனுபவம் இருந்தது. வாலிமோட்சம், சுந்தரிமாலை ஆகிய ஆட்டங்களை கற்றுக் கொடுத்து அரங்கேற்றியுள்ளார்.

பங்கேற்ற கூத்துகள்

  • சுந்தரிமாலை
  • மயில்ராவணன் சண்டை
  • அல்லி அர்ஜுனன்
  • கர்ணமோட்சம்
  • விராடபருவம்
  • துரோணர்பருவம்
  • பீஷ்மர் பருவம்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2024, 20:43:09 IST