வி. திருவேங்கடம்
வி. திருவேங்கடம் (பிறப்பு: 1952) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், ஆசான். காஞ்சி கலைமகள் மன்றத்தின் நிர்வாகி.
வாழ்க்கைக் குறிப்பு
வி. திருவேங்கடம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் வேளிங்கப்பட்டையில் 1952-ல் பிறந்தார். பி.யூ.சி வரை படித்தார்.
கலை வாழ்க்கை
வி. திருவேங்கடத்தின் வாத்தியார் வஜ்ஜிரவேலு. 1992-ல் தன் மச்சான வஜ்ஜிரவேலுவை ஆசிரியராகக் கொண்டு 'காஞ்சி கலைமகள் மன்றம்' என்ற மன்றத்தைத் துவக்கினார். சிறுகாவேரிப்பாக்கம் முனுசாமி, சுருட்டல் சிங்காரம், கீழ்வீதி கன்னியப்பன், ஆண்டிசூழலூர் வரதன், இருங்கூர் விபூசணன், சித்தஞ்சி ரங்கன் ஆகியோரைக் கொண்டு தெருக்கூத்து நடத்தி வந்தார். ஆக்கூர் சீனிவாசன் காஞ்சி கலைமகள் மன்றத்தின் ஆசிரியராக இருந்தபோது வி. திருவேங்கடத்தை கிருஷ்ணன் வேடம் போட வைத்தார். வி. திருவேங்கடம் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அவலூர்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கூத்து நடத்தினார்.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்து
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 15:43:02 IST