under review

வி. தட்சிணாமூர்த்தி

From Tamil Wiki
வி. தட்சிணாமூர்த்தி

வி. தட்சிணாமூர்த்தி (பிறப்பு: 1957) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). வடக்கத்தி பாணிக்கூத்தைச் சேர்ந்தவர். ஐந்தாம் தலைமுறை கூத்துக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

வி. தட்சிணாமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலுள்ள கொண்டையார் தண்டலத்தில் வரதப்பனுக்கு மகனாக 1957-ல் பிறந்தார். தந்தை கூத்துக் கலைஞர்.

கலை வாழ்க்கை

வி. தட்சிணாமூர்த்தி பன்னிரெண்டு வயது முதல் கூத்து ஆடினார். ஆரம்பத்தில் தந்தை வரதப்பன் மற்றும் சித்தப்பா பாலகிருஷ்ணனுடன் கூத்து ஆடினார். வி. தட்சிணாமூர்த்தியின் ஆசான்கள் வரதப்பன், பாலகிருஷ்ணன். குண்டையார் தண்டலம் வரதப்பன் தெருக்கூத்து மன்றம், குண்டையார் தண்டலம் சின்னக்குழந்தை கம்பெனி, ஸ்ரீ மாரியம்மன் தெருக்கூத்து நாடக மன்றம் ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். மகாபாரதம், ராமாயணம், புராணங்கள் மற்றும் கிளைக்கதைகள் சார்ந்த கூத்துக்கள் ஆடினார். ஆரம்பத்தில் பெண் வேடங்களில் ஆடினார். அதன்பின் சிறு சிறு வேடங்களில் ஆடி முக்கிய வேடங்களுக்கு முன்னேறினார். கட்டியங்காரன் வேடமும் ஆடுவார்.

டெல்லி, அரியானா, அகமதாபாத், ஐதராபாத், அந்தமான், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் சேலம், திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களிலும் கூத்து ஆடினார்.

மாணவர்கள்
  • தேவன்
  • பாபு
  • மாரி
  • சக்திவேல்
  • விநாயகம்
  • முருகன்

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதக் கூத்து
  • ராமாயணக் கூத்து
  • புராணக் கூத்து

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 08:04:44 IST