விறலி தோழிக்கு விளம்பல்(பெருந்திணை)
விறலி தோழிக்கு விளம்பல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. தோழி கேட்க விறலி கூறுதல்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தலைவனின் மூப்புப் பரத்தையருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் எனச் சொல்லித் தோழி கேட்க விறலி கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஆங்கு அவன் மூப்பவர்க்கு அருங்களி தரும் எனப்
பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று( கொளு 17.14)
வெண்பா
உளைத்தவர் கூறும் உரைஎல்லாம் நிற்க
முளைத்த முறவலார்க்கு எல்லாம் - விளைத்த
பழம் கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும்
முயங்கு பனல் ஊரன் மூப்பு (338)
பொருள்: தலைவன் மீது வெறுப்புடையவர்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். முறுவல் முளைத்த வாயினராகிய பரத்தையர்க்குத் தலைவனது முதுமை, முற்றிய பழைய கள்ளைப் போல மிகுந்த களிப்பைத் தரும்.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2025, 19:39:12 IST