under review

விமலநாதர்

From Tamil Wiki
விமலநாதர்

விமலநாதர் சமண சமயத்தின் பதிமூன்றாவது தீர்த்தங்கரர்.

புராணம்

விமலநாதர் சமணச் சாத்திரங்களின் படி, இக்ஷுவாகு குல மன்னர் கிருதவர்மனுக்கும், இராணி சியாமாவிற்கும் காம்பில்ய நகரத்தில் பிறந்தார். கர்மத் தளைகளைக் கடந்து சித்த புருஷராக விளங்கினார். இவர் தற்கால ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: பொன்னிறம்
  • லாஞ்சனம்: பன்றி
  • மரம்: ரோஜா ஆப்பிள் மரம்
  • உயரம்: 60வில் (180மீட்டர்)
  • கை: 240
  • முக்தியின் போது வயது: 60 லட்சம் பூர்வ வருடங்கள்
  • முதல் உணவு: நந்தன்பூரின் கனக்பிரபு அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 55 (ஸ்ரீமந்தர்)
  • யட்சன்: படல் தேவ்
  • யட்சினி: வைரதி தேவி

கோயில்கள்

  • உத்தரப் பிரதேச மாநிலத்தின் பண்டைய காம்பில்யம் நகரத்தில் உள்ள சமணக் கோயிலில் விமலநாதருக்கு தனிச் சன்னதி உள்ளது. 1800 ஆண்டுகள் பழமையானது. 2600 ஆண்டுகள் பழமையான பகவான் விமலநாதரின் சிலை உள்ளது.
  • துபாயில் ஜெயின் தேராசர்
  • மகாராஷ்டிர மாநிலம் பிப்வேவாடியில் உள்ள ஸ்ரீ விமல்நாத ஸ்வாமி ஜெயின் ஸ்வேதாம்பர் கோவில்
  • துலேயில் உள்ள ஸ்ரீ விமல்நாத் பகவான் தீர்த்தர்

உசாத்துணை


✅Finalised Page