under review

வாள் செலவு

From Tamil Wiki

வாள் செலவு காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. நல்ல முழுத்தத்தில் (நேரத்தில்) காஞ்சி மன்னன் தன் வாளினைப் போர்க்களம் நோக்கிச் செல்ல விடுவது வாள் செலவு.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெல்லுதற்கரிய போர்முனையில் நின்று வஞ்சி வேந்தன், 'தன்னோடு போர்க்கு வருக!' எனக் கூவி அழைத்த பின், காஞ்சி மன்னன் போர்முனை நோக்கி வாளினைப் போக விடுவதைப் பற்றிச் சொல்வது வாள் செலவு என்னும் துறை என இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

அருமுனையான் அறைகூவினபின்
செருமுனைமேல் வாள்சென்றன்று(4.7)

வெண்பா

உணங்கு புலவறா ஒன்னார் குரம்பை
நுணங்கரில் வெம்முனை நோக்கி - அணங்கிய
குந்தமலியும் புரவியான் கூடாதார்
வந்தபின் செல்க என்றான் வாள் 67

பொருள்: புரவிப் படையை உடைய காஞ்சி மன்னன், பகைவர்கள் தன்னை வருத்துவதற்கென வந்த பின்னரே வாளினைப் புறவீடு செய்தான். வஞ்சி வேந்தன், தன் பாசறையை விட்டு வந்த பின்னரே காஞ்சியான், அவனுடைய வாளினைப் புறவீடு செய்தான் என்பதால் வாள் வழக்கு என்னும் துறை பொருந்துகிறது.

உசாத்துணை

காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 19:11:30 IST