under review

வாசுகி குணரத்தினம்

From Tamil Wiki

வாசுகி குணரத்தினம் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்

வாழ்க்கைக் குறிப்பு

வாசுகி குணரத்தினம் இலங்கை மட்டக்களப்பு அமிர்தகழியில் கவிஞர் செ குணரத்தினத்தின் மகளாகப் பிறந்தார். வாசுகி ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயத்தில் கற்றார். இடைநிலை மற்றும் உயர்கல்வியை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையில் கற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப் பாடத்தில் பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வாசுகி குணரத்தினம் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதி வருகிறார். பன்னிரெண்டு வயதில் முதல் கவிதை எழுதினார். இக்கவிதை இலங்கை வானொலியின் சிறுவர் மலரில் ஒலிபரப்பானது. தொடர்ந்து வீரகேசரி, தினக்கதிர் ஆகிய நாளிதழ்களிலும், பெண், உதயம் போன்ற இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களும் சான்றிதழ்களும் பாராட்டும் பெற்றார்.

உசாத்துணை


✅Finalised Page