under review

லிவிங் ஸ்மைல் வித்யா

From Tamil Wiki
லிவிங் ஸ்மைல் வித்யா

லிவிங் ஸ்மைல் வித்யா (ஸ்மைலி) (பிறப்பு: 1982) எழுத்தாளர், நாடக நடிகர், நாடக இயக்குனர், திரைப்பட துணை இயக்குநர். பன்மை தியேட்டர் அமைப்பின் நிறுவனர். திருநங்கைகளின் அரசியல், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். 'நான் வித்யா' என்ற சுயசரிதை நூலுக்காக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

லிவிங் ஸ்மைல் வித்யா தமிழ்நாட்டின் திருச்சியில் 1982-ல் பிறந்தார். சரவணன் என்பது பெற்றோர் இட்ட பெயர். உடன்பிறந்தவர்கள் இரண்டு அக்கா, ஒரு தங்கை. அம்மாவின் மரணத்திற்குப்பின் அப்பா மறுமணம் செய்து கொண்டார். தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போது திருநங்கை என்பதை உணர்ந்து வீட்டை விட்டு வெளியேறி புனே சென்றார். வித்யா என்று பெயர் மாற்றிக் கொண்டார். 'லிவிங் ஸ்மைல்' என்ற முன்னொட்டையும் சேர்த்துக்கொண்டார்.

நாடக வாழ்க்கை

வித்யாவின் நாடகம்

வித்யா 'கட்டியக்காரி' நாடகக்குழுவில் இணைந்து இந்தியா முழுவதும் பல நாடகங்களில் நடித்தார். பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் லண்டனில் ஓர் ஆண்டு நாடகக்கலை பற்றிய பயிற்சி எடுத்துக் கொண்டார். சென்னையில் நாடகம் சார்ந்த ஒரு தொழில் பட்டறையைத் தொடங்கினார். 2014-ல் "பன்மை தியேட்டர்" அமைப்பை நிறுவினார். இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இந்தியா மற்றும் வெளி நாடுகளில் அரங்கேற்றியுள்ளார். "Clowns without Border" என்ற பிரெஞ்ச் தியேட்டர் குழுவில் இணைந்து பல மருத்துவமனைகளுக்குச் சென்று கோமாளி வேடமிட்டு நோய்வாய்ப்பட்டவர்களை மகிழ்விக்கும் பணியை செய்து வருகிறார். இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

எழுத்து

லிவிங் ஸ்மைல் வித்யா 2006 முதல் வலைதளத்தில் எழுதி வருகிறார். புனேநகரில் அவர் அனுபவித்த பிரச்னைகளை மையமாக் கொண்டு 'நான் வித்யா' என்னும் நூலை எழுதினார். இது ஆங்கிலம், மலையாளம், மராத்தி, கன்னடம், அஸ்ஸாம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

விருது

  • 'நான் வித்யா' நூலின் கன்னட மொழிபெயர்ப்பு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.

நூல் பட்டியல்

  • நான் (சரவணன்) வித்யா

உசாத்துணை

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:37:45 IST