under review

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்

From Tamil Wiki
லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் (Lakshmi Holmström) (1935 - மே 6, 2016) தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புகளைச் செய்தவர் பிரிட்டனில் வாழ்ந்த தமிழ்ப்பெண்மணி.

வாழ்க்கை வரலாறு

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் அவர்கள் ஆய்வு மாணவியாக 1956-ம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் `ஆர்.கே. நாராயணன் நாவல்கள்` எனும் தலைப்பில் ஆய்வு செய்தார். ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

லட்சுமியின் கணவர் மார்க் ஹோம்ஸ்ராம் மானுடவியல் ஆய்வாளர். இந்தியா பற்றி ஆய்வுசெய்தவர்

மறைவு

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் மே 6, 2016-ல் மறைந்தார்

லட்சுமி ஹோம்ஸ்ர்டாம் மார்க்குடன்

விருதுகள்

  • பாமாவின் கருக்கு, அம்பையின் காட்டில் ஒரு மான் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ஹட்ச் கிராஸ்வோர்ட் புக் (Hutch Crossword Book) விருதை முறையே 2000, 2006-ம் ஆண்டுகளில் பெற்றார்.
  • தமிழுக்கு இவர் ஆற்றிவரும் வாழ்நாள் பங்களிப்பிற்காக, கனேடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் 2007-ம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்கியது.

நூல்கள்

  • Indian Fiction in English: the novels of R.K.Narayan (Calcutta Writers Workshop, 1973)
  • Inner Courtyard: Short Stories by Indian Women (London:Virago, 1990)
  • Ashoka Mitran -My father’s friend
  • Silappadikaram and Manimekalai (Madras: Orient Longman, 1996)
  • Karukku (Bama)
  • Cheran Rudramoorthy’s A Second Sunrise, Navayana (2012)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:22 IST