ரமேஷ்
ரமேஷ் (பிறப்பு: 1982) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). ஆண் வேடத்தில் அர்ஜுனனாகவும், பெண் வேடத்தில் திரெளபதியாகவும் ஆடுபவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ரமேஷ் ஈரோடு மாவட்டம், பவானியிலுள்ள அம்மாபேட்டையில் கணேசனுக்கு மகனாக 1982-ல் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தந்தை கூத்துக் கலைஞர். ரமேஷின் தாத்தா ராமசாமி, பெரியப்பா செல்லப்பா சின்ன பெரியப்பா பெருமாள், சித்தப்பா சுப்பிரமணி, பாட்டி பாப்பாத்தி, அத்தை காளியம்மா, அங்கம்மாள் பாட்டி, அத்தை ஜெயா ஆகியோரும் கூத்துக் கலைஞர்கள்.
கலை வாழ்க்கை
ரமேஷின் வாத்தியார் கணேசன். ரமேஷ் சரஸ்வதி நாடக சபாவில் கூத்து ஆடினார். ஆண் வேடத்தில் அர்ஜுனனாகவும், பெண் வேடத்தில் திரெளபதியாகவும் சிறப்பாக ஆடுவார். மாரியம்மன் பண்டிகை, முனியப்பன் பண்டிகை, மாரியம்மனுக்குச் சுத்துப் பொங்கல் வைக்கும் நாள், மாரியம்மன் சிலை கும்பாபிஷேகத்தின்போது நாற்பத்தியெட்டு நாள் கூத்து, இறப்புச் சடங்கின் பதினாறாம் நாள் கர்ணமோட்சம் ஆகிய நிகழ்வுகளில் ஆடியுள்ளார்.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதம்
- ராமாயணம்
- பாஞ்சாலக் குறவஞ்சி
நாவல்ஸ்
- நல்லதங்காள்
- நளச்சக்கரவர்த்தி
- மாற்றான் தாய்க்கொடுமை
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 08:03:05 IST