ரத்தினசிங்கம் செல்லையா
- செல்லையா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செல்லையா (பெயர் பட்டியல்)
ரத்தினசிங்கம் செல்லையா (ஏப்ரல் 4, 1956) ஈழத்து கூத்துக்கலைஞர். இவர் பலமுறை அரங்கேற்றிய "காத்தவராயன் கூத்து" முக்கியமான கூத்தாக நினைவுகூறப்படுகிறது.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை கள்ளப்பாடு முல்லைத்தீவில் ஏப்ரல் 4, 1956-ல் செல்லையாவிற்கு மகனாகப் பிறந்தார். சிறு வயது முதலே கலைத்துறையில் ஈடுபாடு கொண்டார்.
கலை வாழ்க்கை
சிறுவயதில் "ஆவி" என்னும் நாடகத்தில் நடித்ததன் மூலம் பாராட்டை பெற்றார். வன்னிப் பெரு நிலப்பரப்பில் "கோவலன் நாட்டுக்கூத்தை" கள்ளப்பாடு கிராமத்தில் முதன்முதலில் அரங்கேற்றம் செய்த போது அதில் தன் பதினொரு வயதான ரத்தினசிங்கம் பங்கேற்றார். கோவலன் நாட்டுக்கூத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்தார். இடம்பெயர்ந்த காலப்பகுதியில் அம்பலவன் பொக்கணையில் இக்கூத்து அரங்கேறிய போது அண்ணாவியார் செல்வராசா அவர்களுக்கு உதவியாளராக இருந்தார். ரத்தினசிங்கத்தின் நெறியாள்கையில் "காத்தவராயன் கூத்து" ஆறு முறை மேடையேற்றப்பட்டுள்ளன.
விருதுகள்
- 2016-ல் கிராம அபிவிருத்திச் சங்கம் சிறந்த சமூகசேவையாளர் விருது அளித்தது.
- கரைதுறைப்பற்று கலாசாரப் பேரவை"முல்லைப் பேரொளி" பட்டம் அளித்தது.
அரங்கேற்றிய கூத்துகள்
- காத்தவராயன் கூத்து
- கோவலன் நாட்டுக்கூத்து
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:18 IST