under review

யாழன் ஆதி

From Tamil Wiki
யாழன் ஆதி
யாழன்

யாழன் ஆதி (இராமபிரபு) (பிறப்பு: நவம்பர் 26, 1970) தமிழ் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். தமிழில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். தலித் அரசியல் பார்வைக் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

யாழன் ஆதி நவம்பர் 26, 1970 அன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கஸ்பா என்ற ஊரில் இராமன், வேதவல்லி இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு தங்கை, இரண்டு தம்பிகள். யாழன் ஆதி தொடக்கக்கல்வியை ஆம்பூர் ஐ.இ.எல்.சி தொடக்கப்பள்ளியில் பயின்றார். ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வி கற்றார். இயற்பியலில் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், மனோன்மனியம் பல்கலைகழகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். பி.எட் மெஸ்டர்ன் கல்வியியல் கல்லூரியில் பயின்றார். சென்னை பல்கலைகழகத்தில் தொலைதூர வழி கல்வியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

யாழன் ஆதி.jpg

யாழன் ஆதி, பா. கீதாவை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். மகன் - அகன் பெரியார்.

யாழன் ஆதி அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

யாழன் ஆதி1.jpg

யாழன் ஆதி கல்லூரிக் காலம் முதல் கவிதைகள் எழுதி வருகிறார். 'இசையுதிர்காலம்' கவிதை தொகுப்பு 2003-ல் வெளிவந்தது. தலித் அரசியல் சார்ந்த கட்டுரைகள் சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். 'சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு' தொகுப்பு 2020-ல் வெளிவந்தது. புத்தரின் போதனை நூலான 'தம்மபதம்' 2014-ல் யாழன் ஆதி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது.

பொறுப்புகள்

  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கிய பேரவை அமைப்பின் மாநிலச் செயலாளர்
  • திரிபிடக தமிழ் நிறுவனத்தின் தலைவர்
  • முற்றுகை இதழின் பொறுப்பாசிரியர்
  • நீர்க்கண்ணாடி பதிப்பகம் மூலம் அறிமுகக் கவிஞர்களின் கவிதைகளைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியர்.

இலக்கிய இடம்

யாழன் ஆதி தலித் அரசியல் கொள்கைகளை முன்வைத்து கவிதைகளை எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளும் தலித் அரசியல் பார்வை கொண்டவை. தலித் விடுதலைக்கான அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். தலித் விடுதலைக்கான மெய்யியல், ஆன்மீக வழியே பௌத்த மதம் என்ற அம்பேத்கரின் பார்வையைக் கொண்டவர்.

நூல்கள்

கவிதை
  • இசையுதிர்காலம்
  • நெடுந்தீ
  • செவிப்பறை
  • கஸ்பா
  • யாருமற்ற சொல்
  • போதலின் தனிமை
  • காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
  • தொலைதலின் ரகசியங்கள் அடர்ந்த காடு
  • ஒளியிருள்
  • அடர்ந்த காடு
  • நெடுநல்வாடான்
  • கால்களின் கதை
  • போர் ஆசிரியர்
கட்டுரை
  • சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு
  • மனிதம் கொன்ற ஜாதியம்
மொழியாக்கம்
  • தம்மபதம் (புத்தர்)
மொழிபெயர்ப்பு
  • 'The world of rats and other poems' (கவிதை, ஆங்கிலம்) (மொழிபெயர்ப்பாளர்: பேரா.டி.மார்க்ஸ்)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Oct-2025, 18:11:51 IST