மோகனரஞ்சனி அல்லது சமூகதோற்றம்
மோகனரஞ்சனி அல்லது சமூகத்தோற்றம் (1931) தமிழில் திராவிட இயக்கத்தின் சுயமரியாதைக் கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் என இந்நாவலை ஆய்வாளர்கள் சிட்டி-சிவபாதசுந்தரம் கருதுகிறார்கள். சகோதரி கிரிஜாதேவி எழுதியது. 1929-ல் நடந்த சுயமரியாதை மாநாட்டின் எதிரொலியாக இந்நாவல் எழுதப்பட்டது என்று கருதப்படுகிறது.
எழுத்து, பிரசுரம்
இந்நாவலை எழுதிய ஆசிரியர் சகோதரி கிரிஜாதேவி இளமையில் விதவையாக ஆகி அதன்பின் தாழ்த்தப்பட சமூக்த்து இளைஞர் ஒருவரை சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவுடன் மணந்துகொண்டவர். தன் சமூகத்தில் தான் அனுபவித்த கொடுமைகளையும் சுயமரியாதை இயக்கம் வழியாக விடுதலை அடைந்ததையும் நாவலுக்குள் உரையாடல்களில் குறிப்பிடுகிறார்.
கதைச்சுருக்கம்
கார்காத்த வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் தன்னுடன் கல்விகற்ற நாடார் சமூகத்து இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதுதான் இந்நாவலின் கதை. அதற்கான சமூகத்தடைகள் விளக்கப்படுகின்றன. நாவலெங்கும் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் நிறைந்துள்ளன
உசாத்துணை
- தமிழ்நாவல் - சிட்டி சிவபாதசுந்தரம் (கிறிஸ்தவ இலக்கிய சங்கம்)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:07 IST