மு. திருவிளங்கம்
From Tamil Wiki
மு. திருவிளங்கம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
மு. திருவிளங்கம் இலங்கை யாழ்ப்பாணம் மாணிப்பாயில் பிறந்தார். கொழும்பில் வழக்கறிஞராகவும் நொத்தாரிசாகவும்(Notary) பணியாற்றினார். சைவசித்தாந்தத்தில் புலமை வாய்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
மு. திருவிளங்கம் சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். அருணகிரிநாதர் இயற்றிய கந்தரலங்காரத்திற்கும், திருப்புகழ்த்திரட்டுக்கும் இவர் எழுதிய உரைகள் நுட்பம் வாய்ந்தவை.
நூல் பட்டியல்
- சிவஞான சித்தியார் உரை
- சிவப்பிரகாசம் உரை
- கந்தரலங்கார உரை
- திருப்புகழ்த்திரட்டு உரை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
24-Sep-2023, 08:28:04 IST