under review

மு. சிவகுருநாதன்

From Tamil Wiki
மு. சிவகுருநாதன்

மு. சிவகுருநாதன் (பிறப்பு: 1972) கல்வியாளர், கட்டுரையாளர். அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்த விமர்சனக் கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. சிவகுருநாதன் நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணாப்பேட்டையில் 1972-ல் பிறந்தார். வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளங்கோயில் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்றார். திருவாரூர் அரசுப்பள்ளி ஒன்றில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

மு. சிவகுருநாதன் என்ற வலைதளத்தில் அரசியல், சமூக, கலை, இலக்கிய பதிவுகளை 2009 முதல் தொடர்ந்து பதிவு செய்தார். பன்மை, பன்மை வலைப்பூ ஆகிய வலைதளங்களிலும் எழுதினார். அரசியல் சமூகம் சார்ந்த விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். கல்வித்துறை சார்ந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார். மு. சிவகுருநாதனின் கட்டுரைகள் இந்து தமிழ்திசை போன்ற நாளிதழ்களிலும், ஆனந்தவிகடன் போன்ற இதழ்களிலும் வெளிவந்தது. மு. சிவகுருநாதனின் கட்டுரைத்தொகுப்புகள் புத்தகமாக வெளிவந்தன.

நூல் பட்டியல்

  • கல்விக் கொள்கையா? காவிக் கொள்கையா?
  • பாடநூல்களில் வெறுப்பு அரசியல்
  • ஏ.ஜி.கே. எனும் போராளி
  • கல்வி அபத்தங்கள்
  • கல்வியின் அறம்
  • கல்விக் குழப்பங்கள்

இணைப்புகள்


✅Finalised Page