under review

மு. கார்த்திகேயப் புலவர்

From Tamil Wiki

மு. கார்த்திகேயப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. கார்த்திகேயப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் காரை நகரில், முருகேசய்யருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் தந்தையிடம் தமிழ் கற்றார். சுவாமிநாத தேசிகரிடம் சமஸ்கிருதம் கற்றார். சண்முகம் பிள்ளை ஆசிரியரிடம் கல்வி கற்றார். உயர்நிலைத் தமிழ் இலக்கண இலக்கியங்களை இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் பயின்றார். காரை நகரில் ஒரு வித்தியாசாலையைத் ஏற்படுத்தி, தாமே ஆசிரியராக இருந்து கற்பித்துப் பலரைத் தேர்ச்சி பெறுச் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

மு. கார்த்திகேயப் புலவர் இளமையில் கவிதை யாக்கும் திறம் பெற்றிருந்தார். தன் தந்தை பாடிய தன்னையமகவந்தாதியின் கடைசி முப்பது செய்யுள்களை பாடி முடித்தார். சிதம்பரத்துச் சபாநாதர்மீது ”பல்சந்தமாலை" பிரபந்தத்தையும், பல தனிநிலைச் செய்யுள்களையும் பாடினார்.

நூல் பட்டியல்

  • பல்சந்தமாலை

உசாத்துணை


✅Finalised Page